உருளைக் கிழங்கு சாப்பிட்டு உடல் எடையை குறைப்பது எப்படி?

Weight loss : உருளைக் கிழங்கு சாப்பிட்டு எடையை குறைக்க முடியுமா? என ஆச்சரியப்படுபவர்கள் பலர் இருக்கும் நிலையில், அதனை சரியாக சமைத்து சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Jul 28, 2024, 04:02 PM IST
  • உருளைக் கிழங்கு சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாம்
  • உருளைக் கிழங்கு சாப்பிட்டால் சீக்கிரம் பசி எடுக்காது
  • ஆனால் சமைக்கும் முறையில் இந்த டிப்ஸை பயன்படுத்துங்கள்
உருளைக் கிழங்கு சாப்பிட்டு உடல் எடையை குறைப்பது எப்படி? title=

Weight loss Tips Tamil : உருளைக் கிழங்கை எப்படி சமைத்து சாப்பிட்டாலும் அதன் ருசியே தனி. குழம்பாக, கறியாக, பொறியலாக என எப்படி வேண்டுமானாலும் உருளைக் கிழங்கை வெரைட்டியாக சமைக்கலாம். அதில் கிடைக்கும் சுவை உங்களை மெய்மறக்க செய்யும். நாவில் எச்சில் ஊற வைக்கும் வகையில் உருளைக் கிழங்கு சமைத்து சாப்பிட்டவர்கள் பலரும், இப்போது டையட், உடல் எடை கூடிவிடும் என்ற காரணத்துக்காக தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதை தவிர்த்து வருகிறார்கள். உடல் எடை கூடிவிடுமோ? என்ற பயத்திலேயே உருளைக் கிழங்கை சாப்பிடாதவர்கள் பலர். ஆனால், இதனை முறையாக சமைத்து சாப்பிட்டால் உடல் எடையை குறைக்கலாம். 

உருளைக் கிழங்கு சாப்பிட்டு உடல் எடையை குறைக்கலாமா? என ஆச்சரியத்தோடு பார்ப்பவராக இருந்தால், அது எப்படி சாத்தியம் என்பதையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள். எடை கூட வேண்டும் என்றாலும், எடையை குறைக்க வேண்டும் என்றாலும் இரண்டுக்கும் உருளைக் கிழங்கு ஒத்துழைக்கும். ஆனால் நீங்கள் சமைக்கும் முறை தான் இதில் முக்கியம். உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருந்தால், அடிக்கடி பசி எடுக்கக்கூடாது. இந்த உணர்வுக்காக டையட்டில் அப்படியான உணவை சேர்த்துக் கொள்வார்கள். 

மேலும் படிக்க | 100 வயதை கடந்து வாழ ஜப்பானியர்கள் செய்யும் 6 விஷயங்கள்! என்னென்ன தெரியுமா?

உருளைக்கிழங்கும் பசியை தூண்டாது. ஏனென்றால் இதில் இருக்கும் ஸ்டார்ச் உடலில் மிக மெதுவாக ஜீரணமாகும். இதன் காரணமாக இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை பாதிக்காது என்பதால் எடை கூடும் என்ற பயமும் தேவை இல்லை. 

உருளை கிழங்கு எப்படி சமைக்க வேண்டும்?

நீங்கள் உருளைக்கிழங்கு சாப்பிட விரும்பினால், முதலில் அதை வேகவைக்கவும். பின்னர் உருளைக்கிழங்கை சூடு ஆறும் வரை உறைய வைக்கவும். இதன் காரணமாக உருளைக்கிழங்கின் கிளைசெமிக் குறியீடு குறைந்துவிடும். பின்னர் அந்த உருளைக் கிழங்கை மீண்டும் வேறொரு தண்ணீரில் போட்டு அலசவும். இது கிளைசெமிக் குறியீட்டை மேலும் குறைக்கிறது. இதன்பின்னர், உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி, நீங்கள் விரும்பும் வகையில் அதனை வெரைட்டி குழம்பாக, பொறியலாக செய்து சாப்பிடுங்கள். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் உப்பு, சர்க்கரை எல்லாம் அளவோடு சேர்த்துக் கொள்ளுங்கள்.

உருளைக் கிழங்கில் இருக்கும் சத்துக்கள்

- உருளைக்கிழங்கை அதன் தோலுடன் சேர்த்து சாப்பிட்டால், போதுமான அளவு நார்ச்சத்தும் கிடைக்கும்.

- பிசைந்த உருளைக்கிழங்கை ப்ரோக்கோலியுடன் கலந்து சாப்பிட்டால் கிளைசெமிக் இன்டெக்ஸ் குறையும்.

- உருளைக்கிழங்கை இறைச்சி அல்லது மீனுடன் கலந்து சாப்பிட்டால், அது இன்சுலின் சுரப்பை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது

-  மேலும், உருளைக்கிழங்கு உட்கொள்ளும் அளவையும் நினைவில் கொள்வது அவசியம். ஒருவர் ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட உருளைக்கிழங்கு அல்லது 2 முதல் 5 பவுண்டுகளுக்கு மேல் சாப்பிடக்கூடாது.

மேலும் படிக்க | மிருகங்களிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய ஹெல்தியான பழக்கங்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News