ஒரு மனிதனுக்கு உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் மன ஆரோக்கியம். மன் ஆரோக்கியத்தின் சமநிலை தவறினால் நிச்சயம் அந்த மனிதனும், அந்த மனிதனால் சுற்றத்தாரும் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவசரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த உலகத்தில் பலர் மன அழுத்தம், மன சோர்வு உள்ளிட்ட பல நோய்களுக்கு ஆளாகிறார்கள். எது எதுக்கோ நேரம் ஒதுக்குபவர்கள் தங்களது மன ஆரோக்கியத்திற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். எனவே மன ஆரோக்கியத்தை பெறுவதற்கான சில வழிகளை பார்க்கலாம்.


மற்றவர்களை விடுங்கள்:


ஒருவர் நம்மை குறித்து என்ன நினைக்கிறார் என்பதை முதலில் விட்டொழிக்க வேண்டும். நாம் ஏதாவது ஒரு காரியத்தில் ஈடுபட்டால் அதனை மற்றவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள், விமர்சிப்பார்களா? பாராட்டுவார்களா? என்பதை அறிந்து கொள்வதற்குத்தான் பலரும் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். இது மன ஆரோக்கியத்திற்கு சுமையை ஏற்படுத்தும். 


தேவையற்ற சிந்தனைக்கு நோ:


தேவையில்லாத விஷயங்களை பற்றி சிந்தித்து குழம்பினால் மனம் நிம்மதியை இழந்துவிடும். உங்கள் மனதிற்கு சரி என்று தோன்றினால், அதனை பின்பற்றுவதற்கு எந்தவித தயக்கமும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் தேவையற்ற சிந்தனைகள் எழுவது தடைபடும்.


லேசான மனது வேண்டும்:


நெருக்கடியான சூழலை எதிர்கொள்ளும்போது பதற்றம் ஏற்படுவது இயல்புதான். அந்த சமயத்தில் மற்றவர்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள மனம் விரும்பாது.


மேலும் படிக்க | கழுத்து கருமை... காரணங்களும், விடுபடுவதற்கான வழிகளும்


தன்னம்பிக்கையை இழக்க நேரிடும். அதற்கு இடம் கொடுக்காமல் மனதை லேசாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காக தியானம், யோகா போன்றவற்றை செய்யலாம்.


நகைச்சுவை உணர்வு வேண்டும்:


மனநலன் காப்பதில் நகைச்சுவை உணர்வுக்கு பெரும் பங்கு இருக்கிறது. நகைச்சுவை உணர்வு இருந்தால் எந்த சூழலையும் இலகுவாக எடுத்துக்கொண்டு கையாள முடியும். இதனால் மனதும் பெரும் ரிலாக்ஸ் ஆகும். அனைத்து விஷயங்களையும் சீரியஸ் கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டிய எந்த கட்டாயமும் இல்லை.


ரெகுலர் நடவடிக்கைகளில் கொஞ்சம் மாற்றம்:


தினமும் ஒரே மாதிரியான வழக்கத்தை பின்பற்றுவது மனதுக்கு சலிப்புணர்வை உண்டாக்கி மந்தமான மனநிலையை உருவாக்கும். சில சமயங்களில் சின்ன விஷயமாக இருந்தாலும், அது வழக்கத்திற்கு மாறாக நடந்தால் பயத்தை உண்டாக்கிவிடும். அவ்வாறு உணரும்போதெல்லாம் வழக்கமான நடைமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். அது மன நலனை மேம்படுத்த உதவும்.


காலை - இரவு செய்ய வேண்டியவை:


காலையிலும், இரவிலும் குறிப்பிட்ட விஷயங்களை செய்வதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். அதில் உடற்பயிற்சியும், தியானமும் அவசியம் இருக்க வேண்டும். அது உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் செயல்பட உதவும்.


மேலும் படிக்க | மதுப்பழக்கத்தை கைவிடுங்கள்... உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்ன தெரியுமா?


காலை உணவு ஊட்டச்சத்து நிறைந்ததாக இருக்க வேண்டும். காலையில் உடற்பயிற்சி, இரவில் தியானம் என நேரத்தை ஒதுக்கிவிடலாம். இரவில் தூங்க செல்வதற்கு முன்பு செல்ஃபோன் பார்ப்பதை தவிர்த்தல் நலம்.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR