மனிதனின் உடலில் சருமம் மென்மையானது. பருவநிலை, உணவு முறை,சரும பராமரிப்பு போன்ற வழக்கங்களில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால் அதன் தாக்கம் சருமத்தில் பிரதிபலிக்கும்.
அப்படித்தான் கழுத்து சருமத்தில்கருமையான திட்டுக்கள் காணப்படும். அதுமட்டுமின்றி இந்த கருமை நிறம் உருவாக பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. அதேசமயம் அதிலிருந்து விடுபட பல் வழிகளும் இருக்கின்றன.
கழுத்தைச் சுற்றியுள்ள கருமையான சருமம் ‘அகாந்தோசிஸ் நிக்ரிகன்ஸ்’ எனப்படும். இது சருமத்தை கருமையாக்கும் தன்மை கொண்டது. இதற்கு மரபணுக்கள் காரணமாக இருக்கலாம். குழந்தைகளுக்கு பெற்றோர் மூலம் இந்த பாதிப்பு உருவாகலாம்.
* ரத்தத்தில் இன்சுலின் அதிகமாக இருப்பதும் கழுத்து கருமையாக மாறுவதற்கு காரணமாக அமையலாம். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவை பரிசோதித்து, நீரிழிவு நிபுணரிடம் ஆலோசனை பெறுவது அவசியமான ஒன்றாகும்.
மேலும் படிக்க | Child nutrition: குழந்தைகளின் வளர்ச்சிக்கு ஏற்றது சைவமா அசைவமா
* ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (பி.சி.ஓ.எஸ்.) எனப்படும் நோய் பாதிப்புக்குள்ளாகும் பெண்களின் ரத்தத்தில் இன்சுலின் அதிக அளவில் இருக்கும். அதன் காரணமாகவும் கழுத்தின் பின்புறம், கைகள் மற்றும் இடுப்பு பகுதியில் கருமை திட்டுக்கள் தோன்றும்.
* கழுத்தின் பின்புறத்தில் உள்ள தோலில் கருமையான திட்டுகள் தென்படுவது நீரிழிவு நோய்க்கான அறிகுறியாகும். எனவே அதனை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.
* வாசனை திரவியங்கள், கூந்தலுக்கு அடிக்கப்படும் டை போன்றவை ஒவ்வாமை பிரச்சினையை ஏற்படுத்தலாம். அதனால் எந்தவொரு அழகு சாதன பொருளை பயன்படுத்துவதற்கு முன்பும் பரிசோதிக்க வேண்டும். குறைந்தபட்சம் 24 மணி நேரம்வரை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்றால் அந்தப் பொருள்களை தாராளமாக பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | நகைப் பிரியர்களுக்கு கொண்டாட்டம்: தங்கம் அணிந்தால் ஆரோக்கியத்திற்கு நல்லது
* கழுத்தில் கருமை படர்வதை தடுப்பதற்கு முதலில் செய்ய வேண்டியது உடல் எடையை குறைப்பதுதான். உடல் எடை அதிகரிக்கும்போது இயல்பாகவே கருமை தென்படத் தொடங்கிவிடும்.
* கழுத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். லாக்டிக் அமிலம் சார்ந்த கிரீம்கள், லோஷன்களை பயன்படுத்தினால் நல்லது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR