எச்சரிக்கை! யூரிக் அமில அளவை எகிற வைக்கும் ‘சில’ உணவுகள்!
உடலின் மூட்டுகளில் குவிந்துள்ள யூரிக் அமிலம் உங்களுக்கு மிகவும் வலியை கொடுக்கக் கூடியது. யூரிக் அமிலம் நாம் உண்ணும் சில உணவுகளால் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
யூரிக் அமிலத்தின் ஆபத்தை அதிகரிக்கும் உணவுகள்: உடலின் மூட்டுகளில் குவிந்துள்ள யூரிக் அமிலம் உங்களுக்கு மிகவும் வலியை கொடுக்கக் கூடியது. யூரிக் அமிலம் நாம் உண்ணும் சில உணவுகளால் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பியூரின்கள் அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது உங்கள் யீரிக் அமில அளவை கட்டுப்படுத்த உதவும். யூரிக் அமிலம் பியூரின்களில் காணப்படுகிறது. இது ஒரு வகையான கழிவுப் பொருளாகும். உடலால் இரத்தத்தில் இருந்து இந்த பியூரினை முழுவதுமாக அகற்ற முடியாதபோது, அது கூர்மையான படிகங்களின் வடிவத்தில் உடலின் மூட்டுகளில் சேரத் தொடங்குகிறது. சில வகையான உணவுகளில் பியூரின்கள் அதிகமாக காணப்படுகின்றன, இது யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.
யூரிக் அமிலத்தை அதிகரிக்கக்கூடிய பல உணவுகளை நாம் சில சமயங்களில் அறியாமல் உட்கொள்வது பிரச்சனைகளை ஏற்படுத்தும். பொதுவாக குளிர்காலத்தில் உண்ணப்படும் மற்றும் ஆரோக்கியமானதாக (Health Tips) கருதப்படும் இந்த உணவுகள் யூரிக் அமில நோயாளிகளுக்கு ஒரு நல்ல விருப்பமாக இல்லை. இந்த கட்டுரையில், யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிப்பதன் மூலம் கடுமையான வலியை ஏற்படுத்தும் அத்தகைய சில உணவுகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
1. நூற்கோல்
டர்னிப் அல்லது நூற்கோல் குளிர்காலத்தில் பொதுவாக கிடைக்கும் காய்கறிகளில் ஒன்றாகும், டர்னிப் குளிர் காலத்தில் சாலட்டாக உட்கொள்ளப்படுகிறது. ஆனால் டர்னிப்பில் யூரிக் அமில அளவை அதிகரிக்கக்கூடிய பல கூறுகள் உள்ளதால், இதை சாப்பிடும் போது கவனம் தேவை.
2. சிட்ரஸ் பழங்கள்
சிட்ரஸ் பழங்களில் பொதுவாக வைட்டமின்கள் மற்றும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருந்தாலும், அளவிற்கு அதிகமாக அவற்றை சேர்த்துக் கொள்வது, யூரிக் அமில அளவு அதிகரிக்க செய்யும். யூரிக் அமில பிரச்சனை இருந்தால் சிட்ரஸ் பழங்களை அளவிற்கு அதிகமாக உட்கொள்வதை முடிந்தவரை தவிர்க்கவும்.
3. கடல் உணவு
சில வகையான கடல் உணவுகளும் யூரிக் அமில அளவை அதிகரிக்கின்றன. குளிர் காலநிலையில் மீன் உணவுகளை அதிகம் சாப்பிடும் பழக்கம் உள்ளது. அதிக யூரிக் அமிலம் உள்ள நோயாளி அளவிற்கு அதிகமாக கடல் உணவை சாப்பிட்டால், பிரச்சனை அதிகரிக்கலாம். எந்த வகை கடல் உணவு அவருக்கு ஏற்றது, எது ஏற்றது இல்லை, எந்த அளவிற்கு சாப்பிட வேண்டும் என்று ஒருமுறை உங்கள் மருத்துவரிடம் கேளுங்கள்.
மேலும் படிக்க | உங்களுக்கு நீரழிவு நோய் உள்ளதா? இந்த தோல் அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்!
4. உலர் திராட்சை
குளிர்காலத்தில் உலர் திராட்சை அதிகமாக உட்கொள்ளப்படுகிறது, ஏனெனில் இது உடலை சூடாக வைத்திருக்க உதவுகிறது. திராட்சை மிகவும் ஆரோக்கியமான உணவு, இதில் எந்த சந்தேகமும் இல்லை, ஆனால், அளவிற்கு அதிகமாக சாப்பிடும் போது, அதிக யூரிக் அமில நோயாளிகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும்.
5. இறைச்சி
குளிர்காலத்தில் இறைச்சியை அதிகம் சாப்பிடும் பழக்கம் பலருக்கு உள்ளது. உடலை சூடாக வைத்திருக்க இறைச்சி உதவும் என்று நினைக்கிறார்கள். ஆனால் சில வகையான இறைச்சிகள் சிவப்பு இறைச்சி, கல்லீரல் இறைச்சி மற்றும் சிறுநீரக இறைச்சி போன்ற உங்கள் உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கலாம்.
6. பீட்ரூட்
பல்வேறு வகையான சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் குளிர்காலத்தில் அதிகம் உட்கொள்ளப்படுகிறது, ஆனால் யூரிக் அமில பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை அளவிற்கு அதுகமாக சாப்பிடுவது நல்லதல்ல. இது உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும்.
7. இனிப்புகள்
மக்கள் குளிர்காலத்தில் இனிப்பு உணவுகளை அதிகம் விரும்புவார்கள். ஆனால் சர்க்கரையிலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டாலும், பல ஆரோக்கியமான பொருட்கள் அடங்கியிருந்தாலும், அவை உங்கள் உடலில் யூரிக் அமில அளவை அதிகரிக்கலாம். இது கடுமையான வலியை ஏற்படுத்தும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | முடி வேகமாக வளர இந்த வீட்டு வைத்தியங்களை ட்ரை பண்ணுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ