உங்களுக்கு நீரழிவு நோய் உள்ளதா? இந்த தோல் அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்!

வெப்பநிலை குறைவாக இருக்கும் சமயத்தில் பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் குளிர்காலத்தில் அதிக இரத்த சர்க்கரை அளவை அனுபவிக்கின்றனர். இது நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு விளைவிக்கும்.  

Written by - RK Spark | Last Updated : Dec 11, 2023, 03:43 PM IST
  • நீரழிவு நோய் பலருக்கும் ஏற்படுகிறது.
  • ஒழுங்கற்ற உணவுமுறை காரணமாக அமைகிறது.
  • தோலில் சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்.
உங்களுக்கு நீரழிவு நோய் உள்ளதா? இந்த தோல் அறிகுறிகளை வைத்து கண்டுபிடிக்கலாம்! title=

நீரிழிவு என்பது ஒரு நாள்பட்ட மற்றும் முற்போக்கான நோயாகும். இது தோல் உட்பட பெரும்பாலான உறுப்புகளுக்கு கெடுதல் விளைவிக்கிறது. எனவே நீரழிவு நோய்களை விரைவில் கண்டுபிடிப்பது முக்கியம். இதன் மூலம் உடலில் இரத்த சர்க்கரை அளவை எளிதாக பராமரிக்க முடியும். கொப்புளங்கள், தொற்றுகள் அல்லது நாள்பட்ட வழக்கமான தோல் பிரச்சனைகளை நீங்கள் எதிர்கொண்டால் உடனடியாக மருத்துவரை பார்ப்பது நல்லது. உடலில் நீரிழிவு நோய் ஏற்பட்டால் எல்லா பாகங்களையும் பாதிக்கிறது.  இருப்பினும், உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதை தோலில் தோன்றும் சில அறிகுறிகள் வைத்து கண்டுபிடிக்கலாம்.  

மேலும் படிக்க | மூட்டு வலி பாடாய் படுத்துதா? விரட்டி அடிக்க சில எளிய டிப்ஸ் இதோ

நீரிழிவு நோயின் அறிகுறிகள்

தோல் பிரச்சினைகள், பாக்டீரியா, பூஞ்சை தொற்று, அரிப்பு, கொப்புளங்கள் போன்றவை டைப்-2 நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்களின் பொதுவான அறிகுறி ஆகும்.  உங்கள் உடலில் கருப்பு அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் இருந்தால் அலட்சியப்படுத்த வேண்டாம்.  இந்த திட்டுகள் சிறியதாக தொடங்கி, பருக்கள் போல தோற்றமளிக்க ஆரம்பித்து திட்டுகளாக மாறும். இவை இரத்த நாளங்களை அதிகமாக பாதித்து பளபளப்பான, பீங்கான் போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இவை தோலில் அரிப்பு மற்றும் வலியை உண்டாக்கும். இது முக்கியமான பாதிப்பாக இல்லை என்றாலும், உடல்நல சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு முன்பு கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

தோல் பாதிப்பு

கழுத்து, அக்குள் அல்லது இடுப்பைச் சுற்றி கருமையான திட்டுகள் இருந்தால் உங்கள் இரத்தத்தில் இன்சுலின் அதிகமாக உள்ளது என்று அர்த்தம். இது பெரும்பாலும் அதிக எடை கொண்டவர்களுக்கு ஏற்படுகிறது. உடலில் நீரழிவு இருந்தால் தோலில், குறிப்பாக கைகள் அல்லது கால்கள் அல்லது இரண்டிலும் கொப்புளங்களை காணலாம். இந்த கொப்புளங்கள் தீக்காயங்கள் போன்ற தோற்றத்தில் இருக்கும்.  ஆனால் வலி இருக்காது. இவற்றை சரியான நேரத்தில் கவனிக்காவிட்டால் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்.  

கிரானுலோமா வளையம் என்பது ஒரு தோல் நிலையாகும், இது சொறி அல்லது புடைப்புகளை தோலில் ஏற்படுத்துகிறது, இது அதிகமாக இளம் வயதினரை அவர்களின் கைகள் மற்றும் கால்களில் பாதிக்கிறது. டைப்-2 நீரிழிவு தோல் காயங்கள் மற்றும் நிறைய மன உளைச்சலை ஏற்படுத்தக்கூடும். மற்றொரு அறிகுறி கால்களின் கீழ் பகுதியை சிவப்பு-பழுப்பு நிற திட்டுகள் ஏற்படும். இது இரத்த நாள அழற்சியுடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது. பொதுவாக வகை 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகிறது. நீரிழிவு நோயாளிகளில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானவர்கள் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு உங்கள் கால்களில் நரம்பு மற்றும் உணர்வின்மைக்கு வழிவகுக்கும், எனவே நீங்கள் உணராத கொப்புளங்கள் அல்லது வெட்டுக்கள் இருந்தால் அதனை உடனே சரி செய்வது அவசியம்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் விவரங்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை)

மேலும் படிக்க | Peanut Harm: எந்த நோய் இருந்தால் வேர்க்கடலை சாப்பிடக்கூடாது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News