தூக்கம் என்பது மனிதனாய் பிறந்த அனைவருக்கும் தேவையான ஒரு விஷயம். அதை பற்றிய முக்கியமான சில தகவலை நாம் அறிந்து கொள்ளலாம்!   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு சராசரி மனிதனுக்கு தினமும் 6-8 மணி நேர தூக்கம் என்பது போதுமானது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் பலருக்கு இந்த குறிப்பிட்ட நேரத் தூக்கம் கிடைப்பதில்லை. படுத்தவுடன் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுப்பதும், தூக்கத்தின் இடையில் விழிப்பதுமாக நேரம் கடந்து விடுகிறது. 


* தூக்கத்தை ஒத்திப்போடும் ஒரே பாலூட்டி மனித இனம் மட்டுமே.


* தூக்கத்திற்கு இடையில் சராசரியாக 6 முறை விழிக்கிறோம்.


* ஒரு நாளைக்கு 7 மணி நேரத்துக்குக் குறைவாகத் தூங்கினால், ஆயுள் குறையும்.


* ஒரு வாரத்திற்கு சரியாகத் தூங்கவில்லை என்றால், 1 கிலோ வரை உடல் எடை அதிகரிக்கும். தூக்கமின்மை பசியைத் தூண்டும்.


* பொதுவாக மனிதர்கள் வாழ்க்கையில் மூன்றில் ஒரு பங்கு தூங்குகிறார்கள். அதாவது 25 ஆண்டுகள்.


* ஜப்பானில் வேலை நேரத்தில் தூங்குவது, கடுமையான உழைப்புக்கு ஓய்வு எடுப்பது என்று கருதப்பட்டு அனுமதிக்கப்படுகிறது.


* தூங்கினால் நினைவாற்றல் அதிகரிக்கும். தூங்கும் போது தும்ம முடியாது.


* கனவில் ஏற்கெனவே பார்த்த முகங்களே வரும்.


* நம்மை பயமுறுத்தும் விஷயங்களைப் பற்றியே பெரும்பாலும் கனவு காண்கிறோம். வளர்ந்தவர்கள் மனிதர்களைப் பற்றியும், குழந்தைகள் விலங்குகளைப் பற்றியும் அதிக கனவுகளைக் காண்கிறார்கள்.


* 11 நாளுக்கு மேல் தூங்காமல் இருந்தால் உயிர் வாழ முடியாது. சாதாரணமாக 2 நாட்களுக்கு ஒருவரால் தூங்காமல் இருக்க முடியும்.