கேரளாவில் தற்போது நிபா வைரஸ் என்னும் மிகவும் கொடிய வைரஸ்  தொற்று பெரும் பதற்றத்தை உருவாக்கி வருகிறது. பழ வெளவால்கள் மூலம் பரவும் இந்த வைரஸ் தொற்று உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது.   நிபா வைரஸ் தொற்று உள்ள பழ வௌவால் கடித்த பழங்களை உட்கொள்வதன் மூலம் மனிதர்கள் மத்தியில் இது பரவுகிறது. 
நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட பழ வெளவால்கள் உமிழ்நீர், சிறுநீர் மற்றும் மலம் ஆகியவற்றில் வைரஸை வெளியேற்றும். இவை பழங்களுடன் தொடர்பு கொள்ளும் நிலையில், அதனை சாப்பிட்டவர்களுக்கு, ​​அந்த கழிவுகள் உடலுக்குள் சென்று, வைரஸ் பரவுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக, கேரளாவில்  பரவிய இந்த நிபா வைரஸால் 14 வயது சிறுவன் ஜூலை மாத இறுதியில் உயிரிழந்த நிலையில்.  கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று காரணமாக 24 வயது மாணவர் உயிரிழந்தையடுத்து அம்மாநில அரசு உடனடி எச்சரிக்கை விடுத்துள்ளது. நிபா வைரஸால் உயிரிழந்த இளைஞருடன் தொடர்பில் இருந்ததாக 175 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள்வதை வழக்கமாக கொள்ள வேண்டும் என்றும், நெரிசலான பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறும்  மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இத்துடன் பள்ளிகள், கல்லூரிகள், டியூஷன் சென்டர்கள், மதரஸாக்கள், திரையரங்குகள், அங்கன்வாடிகள்,  மூடப்பட்டுள்ளன. இருப்பினும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


நிபா வைரஸ் பாதிப்பால் மாணவர் இறந்த பிறகு, நிர்வாகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள ஐந்து குடிமை வார்டுகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவித்துள்ளது. 175 க்கும் மேற்பட்ட தொடர்புகளை அடையாளம் காணவும்
தொற்றுநோய் பரவுவதைத் தடுக்க சுகாதாரத் துறை, தொடர்பு கொண்டவர்களை அடையாளம் கண்டுள்ளது. 175க்கும் மேற்பட்ட தொடர்புகள் அடையாளம் காணப்பட்டு அவர்கள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றனர். 


மேலும் படிக்க | சுகர் நோயாளிகளுக்கு ஏற்ற பழங்கள் இவைதான்: ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும்


நிபா வைரஸ் அறிகுறிகள்


1. அதிக காய்ச்சல்
2. தலைவலி மற்றும் தசை வலி
3.  தொண்டை புண்
4. பலவீனம் மற்றும் சோர்வு
5. சுவாசிப்பதில் சிரமம்
6. வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு
7.  குழப்பம் மற்றும் மன நிலையில் மாற்றங்கள்


இந்தியாவுக்குத் திரும்பிய ஒருவருக்கு MPox அறிகுறிகள்


இதற்கிடையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து இந்தியாவுக்குத் திரும்பிய ஒருவருக்கு MPox அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. தற்போது அந்த நபரின் மாதிரிகள் பரிசோதனைக்காக கோழிக்கோடு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்த 38 வயது நபர் கேரளாவின் எட்வானாவை சேர்ந்தவர்.


MPox அறிகுறிகள் உள்ள நபர் கடந்த வாரம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து வந்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு, அந்த நபரின் உடலில் சொறி ஏற்பட்டது அவருக்கும் காய்ச்சல் ஏற்பட்டது. அந்த நபர் திங்கள்கிழமை மஞ்சேரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார். அந்த நபர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | Brain Health: மூளை மந்தமாக்கும்.... இந்த ஆபத்தான பழக்கங்கள் வேண்டாமே... 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ