உயர் ரத்த அழுத்தமா... இந்த பானங்களை பருகுங்கள்
உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதற்கு மாதுளை சாறு உள்ளிட்ட பானங்கள் உதவுகின்றன.
ரத்த அழுத்தம் மோசமான ஒன்றாகும். அதுவும் உயர் ரத்த அழுத்தத்தால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். கார்டியாலஜிக்கல் சொசைட்டி ஆஃப் இந்தியா அறிக்கையின்படி, இந்தியாவில் மூன்று பேருக்கு ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
உப்பை குறைப்பதன் மூலம் உயர் ரத்த அழுத்தத்திலிருந்து தப்பலாம். அதுமட்டுமின்றி பானங்கள் குடித்தும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம். அந்தவகையில் எந்தெந்த பானங்களை குடித்தால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் என்பது குறித்து இதில் பார்க்கலாம்.
வெந்தய நீர்:
வெந்தயத்தில் நார்ச்சத்து இருப்பதால் இது ரத்த அழுத்தத்தை குறைக்கும். இரவு முழுவதும் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து, காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை மட்டும் வடிகட்டி குடிக்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் ரத்த அழுத்தம் கட்டுப்படுவதோடு பல்வேறு நோய்களில் இருந்தும் விலக்கு ஏற்படும்.
மாதுளை சாறு:
பொட்டாசியம் நிறைந்த உணவுகள் உயர் ரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அந்தவகையில் மாதுளை பழம் மிகவும் முக்கியமாகும். அதனால் உயர் ரத்த அழுத்த பாதிப்புக்கு ஆளாகுபவர்கள் மாதுளை சாறு பருகலாம்.
கிரீன் டீ மற்றும் ரெட் ஒயின் ஆகியவற்றை விட மாதுளை சாற்றில் மூன்று மடங்கு அதிக ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால்; அதனை தினமும் குடித்தால் உயர் ரத்த அழுத்தத்திலிருந்து தப்பிக்கலாம்.
சியா விதை நீர்:
சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. மேலும் அவை ரத்தத்தை நீர்த்துப்போகச் செய்து உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.
சியா விதைகளை தண்ணீரில் நன்றாக கழுவிவிட்டு பின்பு அரை மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின்பு அந்த நீரை வடிகட்டி, பருக வேண்டும். ஒரு மாத காலம் தொடர்ந்து குடித்தால் உயர் ரத்த அழுத்தத்தில் மாற்ற ஏற்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!