High BP: உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் சில உணவுகள்
உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் சிலவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மாறிவரும் வாழ்க்கை முறையின் காரணமாக, உயர் ரத்த அழுத்த பிரச்சனை இன்று மக்களிடையே அதிகம் காணப்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் என்பது இளைஞர்களிடையேயும் மிகவும் பொதுவாக காணப்படும் நோய்களில் ஒன்றாக உள்ளது.
'உயர் இரத்த அழுத்தம்' உடலில் இதயப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். இருப்பினும், உங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவதன் மூலம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். நீங்கள் உயர் இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால், நீங்கள் அதிக காரம், இனிப்பு மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடக்கூடாது. இது போன்றவற்றை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சில பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொண்டால், இரத்த அழுத்தத்தை சீராக்கலாம்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் உணவுகள்
பூசணி விதை
பூசணி விதையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. இவற்றை சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். பொட்டாசியம், மெக்னீசியம் இதில் காணப்படுவதால், இது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
மேலும் படிக்க | சர்க்கரை கொல்லியாக நீரிழிவு நோயாளிகளுக்கு வரப்பிரசாதமாகும் சிறுகுறிஞ்சான்!
மீன் உணவுகள்
கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிடுவதால் உயர் ரத்த அழுத்தமும் கட்டுக்குள் இருக்கும். மீனில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை நம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கின்றன. இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
நாவல் பழம்
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் நாவல் பழம் உதவுகிறது. நாவல் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் காணப்படுகின்றன. நாவல் பழத்தில் உள்ள உள்ள எந்தோசயனின் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் இரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைட்டின் அளவை அதிகரிக்கின்றன. எனவு இதை சாப்பிடுவதால் இரத்த அழுத்தம் குறைகிறது.
பிஸ்தா
பிஸ்தா ஒரு உலர் பழமாகும், அதை நீங்கள் உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். இதை சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. பிஸ்தாவில் பொட்டாசியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன, இது இரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு [பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Guava Leaves: எடை இழப்புக்கு உதவும் கொய்யா இலையின் மேஜிக் பானம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR