High BP: ரத்த அழுத்தம் அதிகமானா இந்த நோய்களும் வந்திடும்! சூதானமா இருங்க
High Blood pressure: உயர் இரத்த அழுத்தத்தினால் ஏற்படும் பிரச்சனைகளில் பிரதானமானது இதய ஆரோக்கியம் என்றாலும், அதனால் ஏற்படும் நோய்களின் பட்டியல் நீளமானது... உயர் இரத்த அழுத்தம் காரணமாக வேறு எந்த நோய்கள் ஏற்படக்கூடும்?
உயர் இரத்த அழுத்தம் என்பது இன்றைய காலத்தின் ஒரு நாள்பட்ட நோயாக மாறியுள்ளது, இது தீவிரமானதாக இருந்தாலும், பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. இந்த நோய் மிகவும் பொதுவானதாக மாறியதே இதற்குக் காரணம். உங்கள் இரத்த அழுத்த அளவு நீண்ட காலமாக அதிகமாக இருந்தால், அது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இரத்த அழுத்தம் அதிகரிப்பதால் மாரடைப்பு மட்டுமல்ல, பல நோய்கள் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
இந்த கட்டுரையில், இரத்த அழுத்த அளவு அதிகரிப்பதனால் ஏற்படும் நோய்கள் என்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
உயர் இரத்த அழுத்தம் காரணமாக சிறுநீரக செயலிழப்பு
உயர் இரத்த அழுத்தம் உங்கள் சிறுநீரகத்தை நேரடியாகப் பாதிக்கிறது என்பது தெரியுமா? ரத்த அழுத்ததம் அடிக்கடி அதிகரிக்கும்போது, சிறுநீரக செயலிழப்பு ஏற்படுவதர்கான வாய்ப்புகள் அதிகரிக்கிறது. உண்மையில், நீண்ட காலமாக உயர் இரத்த அழுத்தம் காரணமாக, இரத்த நாளங்கள் பலவீனமாகி, சுருங்கி, போதுமான இரத்தம் கிடைக்காததால் சிறுநீரகங்களுக்கு சேதம் ஏற்படுகிறது.
பக்கவாதம் (உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் பக்கவாதம்)
உயர் இரத்த அழுத்தம் இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியும். இது, மூளையில் இருக்கும் இரத்த நாளங்களையும் பாதிக்கிறது. மூளைக்கு இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனை வழங்கும் இரத்த நாளங்களின் வீக்கம் அல்லது வெடிப்பு காரணமாக பல நேரங்களில் பக்கவாதம் ஏற்படுகிறது. உயர் இரத்த அழுத்தம் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை பெரிதும் அதிகரிக்கும் என்பதால் எச்சரிககியாக இருக்கவும்.
உயர் இரத்த அழுத்தம் காரணமாக நினைவாற்றல் இழப்பு
நீண்ட காலமாக உயர் இரத்த அழுத்தம் இருப்பது உங்கள் மன ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும், இதன் காரணமாக பல நேரங்களில் நினைவகம் தொடர்பான பிரச்சனைகளும் தொடங்குகின்றன. நீண்ட கால உயர் இரத்த அழுத்தம், குறிப்பாக வயதானவர்களுக்கு, நினைவாற்றல் இழப்பு அதிகரிக்கும். இருப்பினும், இது கடுமையான உயர் இரத்த அழுத்த நிகழ்வுகளில் மட்டுமே நிகழ்கிறது.
மேலும் படிக்க | பெண்களின் சுகாதாரத்தில் விளையாடுகிறதா சமூக ஊடக நிறுவனங்கள்? பாவம் கென்யா பெண்கள்
உயர் இரத்த அழுத்தம் காரணமாக டிமென்ஷியா
உயர் இரத்த அழுத்தம் உங்கள் நரம்புகளின் ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கிறது, இது இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது . மூளையில் இருக்கும் இரத்த நாளங்கள் பாதிக்கப்படும் போது, அது டிமென்ஷியா அபாயத்தை அதிகரிக்கும். டிமென்ஷியா ஆபத்து பொதுவாக இரத்த அழுத்த அளவு மிக அதிகமாக இருக்கும் போது அதிகரிக்கிறது.
அனியூரிஸ்ம் (உயர் இரத்த அழுத்தம் காரணமாக ஏற்படும் அனீரிசம்)
அனீரிசிம்கள் என்றால் என்ன? என்பதைத் தெரிந்துக் கொள்வோம். இரத்த நாளச் சுவர் வலுவிழந்தால் அனீரிஸம் (Aneurysm)ஆகும். மூளை அல்லது பெருமூளை அனீரிசம் என்பது உங்கள் மூளையின் இரத்த நாளங்களில் அழுத்தம் ஏற்படும் போது உருவாகிறது.
உயர் இரத்த அழுத்தம் நீண்ட நேரம் இருப்பது, இரத்த நாளங்களில் அழுத்தத்தை உருவாக்குகிறது, இதன் காரணமாக இரத்த நாளங்களின் பலவீனமான பகுதிகளில் பல, அழுத்தத்தைத் தாங்க முடியாமல் போகும் சூழ்நிலையில் இரத்த நாளம் வெடிக்கிறது. மூளை உட்பட உடலின் எந்தப் பகுதியிலும் அனீரிசிம்கள் ஏற்படலாம்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | வயிற்றில் இந்த 5 அறிகுறிகள் இருக்கிறதா? மிகப்பெரிய பிரச்சனையில் முடியும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ