Hyper tension அல்லது உயர் இரத்த அழுத்தம்  என்பது இன்றைய காலகட்டத்தில் பொதுவாக பலரிடம் காணப்படுகிறது.  சில குறிப்பிட்ட உணவுகளை தவிர்ப்பதன் மூலம், உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கலாம் மற்றும் ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்த முடியும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பக்கோடா, பஜ்ஜி, வடை போன்ற சிற்றுண்டிகள் வாய்க்கு சுவையானதாக இருந்தாலும் ஆரோக்கியமானவை அல்ல. தினசரி உட்கொண்டால், அது ஆரோக்கியத்தை பாதிப்பதோடு,  உயர் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். 


இருதய நோய் மற்றும் இறப்பைக் குறைக்க, உயர் இரத்த அழுத்தத்தைத் தடுப்பது அவசியம்  என பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷன் (British Journal of Nutrition ) கூறுகிறது. எடை இழப்புக்கு உதவு உணவு அல்லது குறைந்த அளவு சோடியம் உணவு இரத்த அழுத்தத்தின் உயர்வைக் கட்டுப்படுத்தலாம். பொட்டாசியம் அல்லது கால்சியம் உள்ள உணவு பொருட்களையும் சேர்க்கலாம். 


ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!


உயர் இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும் உணவுகள் 


காபி : காபியில் உள்ள காஃபின் அதிகம் உள்ளது. இது இரத்த அழுத்தம் அதிகரிக்க வழிவகுக்கிறது. அதனால்தான் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை மிகவும் குறைக்க வேண்டும். 


உப்பு : அதிக உப்பு உயர் ரத்த அழுத்தத்திற்கு நல்லதல்ல. ஊறுகாய் வத்தல் போன்றவற்றில் அதிக உப்பு இருக்கும். உணவு நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்க உப்பு அதிகம் சேர்க்கப்படுகிறது. எனவே இதனை தவிர்க்கவும். 


பேக் செய்யப்பட்ட உணவு : பேக் செய்யப்பட்ட உணவுகள் உயர் இரத்த அழுத்தம் அதிகரிக்க வழிவகுக்கும். பேக் செய்யப்பட்ட உணவில், ஊட்டசத்தும் அதிகம் இருப்பதில்லை. எனவே புதிதாக சமைக்கபட்ட உணவை சாப்பிடுவது சுவையானது என்பதோடு ஆரோக்கியத்திற்கும் நல்லது. 


ALSO READ | Weight Loss in Ayurveda: உடல் எடை குறைப்புக்கு ஆயுர்வேதம் சொல்வது என்ன?


சர்க்கரை: சர்க்கரை அதிகம் எடுத்துக் கொண்டால், அது உயர் ரத்த அழுத்தம் மட்டுமல்ல. பல நோய்களுக்கு வழிவகுக்கும். உடல் பருமன், பல் பிரச்சனை, உயர் இரத்த அழுத்தம் போன்ற நோய்கள் சிலவற்றைக் குறிப்பிடலாம். சர்க்கரை உடல் பருமன் மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.


பதப்படுத்தப்பட்ட இறைச்சி: பதப்படுத்தப்பட்ட இறைச்சியில் சோடியத்தின் அளவு அதிகமாக இருக்கலாம். இறைச்சிகள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, பதப்படுத்தப்பட்டு  உப்பு சேர்க்கப்பட்டுள்ளன. இதனுடன் சேர்ந்து வரும் சாஸ்கள், ஊறுகாய், சீஸ் அல்லது ரொட்டியில் உள்ள அதிக சோடியம்  நிறைந்த உணவும்  உடலுக்கு நல்லதல்ல


பிரெட்: பிரெட் மைதாவால் ஆனது என்பதால் அது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மைதா உடல் எடை அதிகரிப்பதற்கு வழிவகுக்கும்.


பீனட் பட்டர்: Peanut Butter எனப்படும் வேர்க்கடலை வெண்ணெய் ஆரோக்கியமானதல்ல. இது கொழுப்பின் அளவு அதிகரிக்க வழிவகுக்கும். மேலும் அதிக சோடியம்  உள்ளதன் காரணமாகவும், இது மிகவும் தவிர்க்கப்பட வேண்டும். இருப்பினும், அதற்குப் பதிலாக உப்பு சேர்க்காத வேர்க்கடலை வெண்ணெய் பயன்படுத்தலாம்.


ALSO READ | Migraine: ஒற்றை தலைவலியை உடனே விரட்டும் ‘5’ சூப்பர் உணவுகள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR