High Uric Acid உள்ளவர்கள் இந்த 1 காய்கறியை கட்டாயம் சாப்பிட வேண்டும்
High Uric Acid: தவறான உணவு பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை காரணமாக, உடலில் அதிக யூரிக் அமிலம் சேரத் தொடங்கிவிடுகிறது. உங்களுக்கும் இது போன்ற தொந்தரவு இருந்தால், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஒரு காய்கறியை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
Lotus Stem For High Uric Acid: இன்றைய காலகட்டத்தில் முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் ஏதேனும் கொடிய நோயால் பதிக்கப்படுகின்றனர். இவற்றில் ஒன்று தான் அதிக யூரிக் அமிலம். இதன் நிலை அதிகரிக்கும் போது உடலில் பல பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கும். குறிப்பாக மூட்டுகளில் இருக்கும் எழும்பில் பியூரின் அதிகரிக்கத் தொடங்கினால் அதிக யூரிக் அமிலம் குவியத் தொடங்கும். இது மூட்டுகளில் இருக்கும் எழும்பில் இடைவெளியை ஏற்படத் தொடங்கும். இதனால் மூட்டு வலி, வீக்கம் மற்றும் சிறுநீரக கற்களை உண்டாக்கத் தொடங்கலாம். அத்தகைய சூழ்நிலையில், அதிக யூரிக் அமிலத்தால் நீங்கள் கஷ்டப்படுகிறீர்கள் என்றால், உங்கள் உணவில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். இதன் மூலம் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தலாம்.
அதிக யூரிக் அமிலத்திற்கு முக்கிய காரணம் புரதம் நிறைந்த உணவை அதிகமாக சாப்பிடுவதே ஆகும். இது செரிமானம் ஆகாமல் பியூரின் வடிவமாக மாறுகிறது, இது உடலுக்கு ஆபத்தானது. உங்களுக்கும் அதிக யூரிக் அமிலம் பிரச்சனை இருந்தால், தாமரை தண்டுகளை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, பியூரின்களை வெளியேற்றி யூரிக் அமிலத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவும். இந்நிலையில் தாமரை தண்டை எப்படி, எப்போது உட்கொள்ள வேண்டும் மற்றும் அதன் பலன்கள் என்ன என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்வோம்...
வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது:
அதிக யூரிக் அமிலம் பிரச்சனையால் நீங்கள் போராடிக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், தாமரை தண்டை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. அதன் நுகர்வு வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. இதை சாப்பிடுவதால் புரதம் வேகமாக ஜீரணமாகும். இது பியூரின்களை வெளியேற்றவும் உதவுகிறது.
மூட்டுகளுக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது:
தாமரை தண்டில் நார்ச்சத்தும் இரும்புச்சத்தும் ஏராளமாக நிறைந்துள்ளன. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுவதுடன், இரத்த சிவப்பணுக்களை உருவாக்க வேலை செய்கிறது. மூட்டுகளுக்கு இடையில் ஈரப்பதத்தை வழங்குகிறது மற்றும் வலி மற்றும் வீக்கத்தை குறைக்க உதவும். இதை சாப்பிடுவதால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறையும். இதனால் உடலில் நீர்ச்சத்து குறையாது.
வீக்கத்தையும் குறைக்க உதவுகிறது:
தாமரை தண்டில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காணப்படுகின்றன. வீக்கத்தைக் குறைப்பதோடு, மூட்டு வலியையும் குறைக்க உதவுகிறது. எலும்புகளை வலுப்படுத்துவதோடு, அவற்றின் செயல்பாட்டை விரைவாகவும் சிறப்பாகவும் செய்ய உதவுகிறது.
தாமரை தண்டை இப்படி சாப்பிடுங்கள்:
அதிக யூரிக் அமிலம் உள்ளவர்கள் தாமரை தண்டை வேகவைத்து சாப்பிடலாம். உணவில் சுவை சேர்ப்பதைத் தவிர, இது ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இதில் உள்ள நார்ச்சத்து செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது. இது தவிர, இது நல்ல ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ