உடல் எடை சர்ரென குறைய வேண்டுமா? அப்போ ‘இந்த’ மேஜிக் பானங்களை குடிங்க!
Health Drinks For Rapid Weight Loss : உடல் எடையை சீக்கிரமாக குறைக்க பல வழிகள் உள்ளன. இதற்கு சில இயற்கை பானங்களும் உதவும். அவை என்ன தெரியுமா?
Health Drinks For Rapid Weight Loss : நம்மில் பலருக்கு உடல் எடை அதிகமாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இந்த உடல் எடையை எப்படியாவது குறைத்து விட வேண்டும் என்று போராடி ஜிம்மிற்கு செல்வது, டயட் இருப்பது என பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வர். அப்படி முயற்சிகளை மேற்கொள்கையில், சில இயற்கை பானங்களையும் நமது டயட்டில் சேர்த்துக்கொள்வதும் மிகவும் முக்கியமாகும். அப்படி சேர்த்துக்கொள்ள வேண்டிய மேஜிக் பானங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாமா?
இஞ்சி-எலுமிச்சை தண்ணீர்:
இஞ்சியிலும், எலுமிச்சையிலும் அழற்சி எதிர்ப்பு தன்மைகள் நிறையவே இருக்கின்றன. இது குறித்து நடத்தப்பட்ட மருத்துவ ஆராய்ச்சிகளில் இவை கொழுப்பின் அளவு அதிகமாகாமல் தடுப்பதாக கூறுகின்றனர்.
இதை எப்படி செய்வது?
>கொஞ்சமாக இஞ்சியை எடுத்து அதில் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும்
>எலுமிச்சை தண்ணீரில் அரைத்து வைத்ததை கலக்கவும்
>இரண்டையும் நன்றாக கலந்து சிறிதளவு வருத்த சீரகத்தை போட்டு குடிக்கவும்
சீரக தண்ணீர்:
சீரகத்தில் உடல் கொழுப்பை கரைக்கும் சத்துகள் பல உள்ளன. இதனால், உடல் எடையை குறைக்க விரும்பும் பலர் இதனை தங்களின் டயட்டில் சேர்த்துக்கொள்கின்றனர்.
எப்படி செய்ய வேண்டும்?
>தண்ணீரில் இரவு முழுவதும் சீரகத்தை ஊற வைத்து அதை காலையில் குடிக்கலாம்
>மேற்கூறிய முறை இன்றி, இன்னொரு வகையிலும் சீரகத்தண்ணீரை குடிக்கலாம். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் சீரகத்தை போட்டு, அந்த தண்ணீர் ஆறியவுடன் குடிக்கலாம்.
இலவங்கப்பட்டை பானம்:
இலவங்கப்பட்ட உடலில் உள்ள க்ளூகோஸ் அளவினை அதிகரிக்க உதவும். இது, உடற்கொழுப்பை கரைக்கவும் ஒட்டுமொத்த எடை இழப்பிற்கும் உதவுமாம்.
எப்படி செய்வது?
>தண்ணீரை கொதிக்க வைத்து அதில் இலவங்கப்பட்டையை பொடி செய்து போடவும்.
>தண்ணீரை ஆற வைக்கவும்
>மிதமான சூடாக மாறியவுடன், இந்த தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சையை பிழிந்து விட வேண்டும்.
>இதை அனைத்தையும் நன்றாக கலக்கி குடித்தால் உடல் எடையை குறைக்கலாம்.
மேலும் படிக்க | கத்தரிக்காய் சாப்பிட்டால்போதும், வெயில் காலத்தில் இந்த பிரச்சனைகள் இருக்காது
புதினா எலுமிச்சை தண்ணீர்:
புதினா, உடல் எடையை குறைப்பதற்கும் அதை சரியாக பார்த்துக்கொள்வதற்கும் கிடைக்கும் சரியான பானமாகும். புதினா தண்ணீரை குடிப்பதனால் கண்டிப்பாக செரிமான கோளாறுகளும் சரியாகும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதில், குறைவான கொழுப்பு சத்துதான் உள்ளது. இதனால் உங்கள் உடலில் மெட்டபாலிச சத்துகளையும் அதிகரிக்கலாம்.
எப்படி செய்வது?
>ஒரு பாத்திரத்தில் புதினாவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
>பிறகு அதை ஆற வைக்க வேண்டும்
>மிதமாக, குடிக்கும் பதத்திற்கு வந்த பிறகு இதனை ஒரு டம்ளரில் சேர்த்து பின்பு எலுமிச்சையை பிழிய வேண்டும்
>இதை வடிக்கட்டி பின்பு குடிக்கலாம்.
சியா விதைகள் :
சியா விதைகளை, சப்ஜா விதைகள் என்றும் கூறுவர். இவை, தொப்பையை குறைக்க பயன்படும் என்பது அனைவருக்கும் தெரியும். இதனை அருகில் இருக்கும் மள்ளிகை கடையில் கூட வாங்கி கொள்ளலாம். இதனை சேர்த்து இயற்கை பானத்தை குடித்தால் கண்டிப்பாக உடல் எடையை குறைக்கலாம்.
இதை எப்படி செய்வது?
>ஒரு மணி நேரம் சியா விதைகளை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
>இதை நன்றாக கலக்கி குடிக்கவும்
>இரவு முழுவதும் இதை ஊற வைத்தால், காலையில் எழுந்ததும் முதல் வேளையாக சியா விதை பானத்தை குடிக்கலாம்.
>சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரம் முன்னர் இதை சாப்பிட்டாலும், நீங்கள் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள சில தகவல்கள் பொதுவானவை. எந்தவொரு பரிந்துரையையும் செயல்படுத்துவதற்கு முன், நீங்கள் சம்பந்தப்பட்ட மருத்துவரை அணுக வேண்டும்.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ