குழந்தைகளுக்கு ஜலதோஷ பிரச்சனையா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் நிவாரணம் அளிக்கும்
Home Remedy for Cough and Cold: குழந்தைகளுக்கு ஜலதோஷ பிரச்சனையா? எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் இதை சரி செய்யலாம்.
சளி மற்றும் இருமலுக்கான வீட்டு வைத்தியம்: பருவங்கள் மாறும்போது குழந்தைகள்தான் முதலில் நோய்வாய்ப்படுகிறார்கள். மழைக்காலத்தில் குழந்தைகளுக்கு சளி இருமல் போன்றவையும் மிக வேகமாக ஏற்படுகிறது. சளி என்பது தொற்றுகளால் பரவும் ஒரு நோயாகும். தொற்று ஒருவருக்கொருவர் வேகமாக பரவுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகளை சளி, காய்ச்சல் பாதிக்கிறது. ஜலதோஷம் என்பது குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரையும் பாதிக்கும். மூக்கு ஒழுகுதல் மற்றும் உடல் வலிகள் பிரச்சனையை மேலும் மோசமாக்குகின்றன. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் குழந்தைகளுக்கு சளி தொந்தரவு இருந்தால், கண்டிப்பாக மருந்துகளுடன் சில வீட்டு வைத்தியங்களையும் பின்பற்றவும்.
வெந்நீர்:
வெந்நீர் குடிப்பது ஜலதோஷத்தில் நிவாரணம் அளிக்கிறது. சளியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கண்டிப்பாக சூடான நீரை கொடுங்கள். மிகவும் சூடான நீரை குடிக்க முடியாத சிறு குழந்தைகளுக்கு வெதுவெதுப்பான தண்ணீரைக் கொடுங்கள். குளிர்ச்சியான பொருட்களைக் கொடுக்கவே கூடாது. இதனால் விரைவான நிவாரணம் கிடைக்கும்.
மஞ்சள் பால்:
குழந்தைகளுக்கு சளி பிடித்தால் சாதாரண பால் கொடுப்பதற்கு பதிலாக மஞ்சள் பால் கொடுக்கவும். இதனால் உடலில் சூடு தணிவதுடன் சளி, இருமல் போன்றவற்றிலும் நிவாரணம் கிடைக்கும். மஞ்சளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன, இது சளியை குணப்படுத்த உதவுகிறது.
மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க கொரியன்ஸ் பின்பற்றும் விநோத பழக்கம்
சவன்பிராஷ்:
குழந்தைகள் சவன்பிராஷ் சாப்பிட்டால், கண்டிப்பாக காலையிலும் மாலையிலும் அவர்களுக்கு சவன்பிராஷ் கொடுக்கவும். இது குழந்தைக்கு இருமல் மற்றும் சளியிலிருந்து நிவாரணம் தரும். சவன்பிராஷ் சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும்.
தேன் இஞ்சி:
தேனுடன் சிறிது இஞ்சி சாறு கலந்து குழந்தைக்கு கொடுங்கள். இது இருமல் மற்றும் சளி இரண்டிலும் நிவாரணம் தரும். காலையிலும் மாலையிலும் 1 தேக்கரண்டி கொடுங்கள்.
நீராவி பிடித்தல்:
குழந்தைக்கு சளி பிடித்தால் நீராவி பிடிக்க வைக்கலாம். இது சளியில் இருந்து நிவாரணம் தரும். குறிப்பாக மூக்கு அடைப்பதால் குழந்தைகளுக்கு இரவில் சரியாக தூங்க முடிவதில்லை. நீராவி பிடிப்பது மூக்கில் அடைந்திருக்கும் சளியை நீக்கவும் குழந்தைகள் வசதியாக சுவாசிக்கவும் உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | இளநரை பிரச்சனையா? இந்த மாஸ்க் போட்டு பாருங்க, உடனடி நிவாரணம் கிடைக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ