காலை எழுந்தவுடன் தலைவலி பாடாய் படுத்துதா? இந்த வீட்டு வைத்தியங்கள் கை கொடுக்கும்
Headache Home Remedy: காலையில் எழுந்தவுடன் தலைவலியா? காரணம் என்ன? இதற்கான எளிய வீட்டு வைத்துயங்களை இந்த பதிவில் காணலாம்.
தலைவலி என்பது யாரையும் எந்த நேரத்திலும் தொந்தரவு செய்யக்கூடிய ஒரு பிரச்சனை ஆகும். சிலருக்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். ஒற்றைத் தலைவலி, ஜலதோஷத்தால் வரும் தலைவலி, கழுத்து, தாடை, தசைப்பிடிப்பு, அதிகமாக வேலை செய்தல், போதுமான தூக்கமின்மை, நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பது, மது அருந்துவது ஆகிய பல காரணங்களால் தலைவலி ஏற்படலாம். தலைவலியைப் போக்க மக்கள் பெரும்பாலும் வலி நிவாரணிகளை பயன்படுத்துகிறார்கள். ஆனால், இவை உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
சிலருக்கு காலையில் படுக்கையில் இருந்து எழுந்தவுடனே தலைவலி பிரச்சனை தொல்லை தருகிறது. தூக்கமின்மையால் அதிகாலை தலைவலி ஏற்படலாம். காலையில் ஏற்படும் தலைவலியால் நாள் முழுவதும் சோர்வாக இருக்கும்.
நீங்கள் அடிக்கடி காலையில் தலைவலியால் அவதிப்பட்டால், வாழ்க்கை முறையை மாற்ற வேண்டும், உணவை சீர் செய்ய வேண்டும், போதுமான தூக்கத்தைப் பெற வேண்டும். தலைவலியிலிருந்து விடுபட, அதிகாலையில் மருந்துகளை உட்கொள்ள வேண்டாம். மருந்துகளுக்கு பதிலாக சில வீட்டு வைத்தியங்கள் தலைவலியைப் போக்குவதில் பயனுள்ளதாக இருக்கும். காலையில் உங்களுக்கு தலைவலி இருந்தால், அதை எவ்வாறு அகற்றுவது என்பதை இங்கே காணலாம்.
- காலையில் எழுந்தவுடன் தலைவலி இருந்தால், அதன் காரணமாக மன உளைச்சல் ஏற்படும். அப்படிப்பட்ட தருணங்களில் ஒரு கிளாஸ் எலுமிச்சை நீர் உட்கொள்ளுங்கள். எலுமிச்சம்பழ நீர் அருந்தினால் மார்னிங் சிக்னஸ் நீங்கும்.
மேலும் படிக்க | Weight Loss Tips: உடல் எடையை குறைக்கணுமா? இதை மட்டும் குடித்தால் போதும்!!
- தலைவலியை நீக்க, உங்கள் மனதை அமைதியாக்கி 15-20 நிமிடங்கள் நடக்கவும்.
- கிரீன் டீ குடிக்கவும். க்ரீன் டீயை உட்கொள்வதன் மூலம், நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் மற்றும் நீங்கள் உற்சாகமாக உணருவீர்கள்.
- உஷ்ணத்தால் சில சமயம் தலைவலி வரும். காலையில் எழுந்ததும் தலைவலி வந்தால் உடனே குளித்தால் சரியாகிவிடும்.
- சுவாச பயிற்சிகள் செய்யுங்கள். குறைந்தது 10 நிமிடமாவது மூச்சுப் பயிற்சி செய்வதன் மூலம் தலைவலியில் இருந்து விடுபட்டு நிம்மதியாக உணர்வீர்கள். இந்தப் பயிற்சி தலைவலியில் இருந்து நிவாரணம் தரும்.
- ஐஸ் கட்டி கொண்டு தலையை மசாஜ் செய்தால் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். ஸ்லோ மோஷனில் ஐஸ் கட்டியை நெற்றியில் மசாஜ் செய்தால், தலைவலி விரைவில் சரியாகிவிடும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ஃபோலிக் அமிலம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்பவரா? கோவிடினால் அதிக ஆபத்து!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ