துளசி டீ மூலம் எடை குறைப்பு: பரபரப்பான வாழ்க்கை முறையாலும், உடற்பயிற்சியின்மையாலும், இந்நாட்களில் மக்களின் உடல் எடை அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சனையை சமாளிக்க, மக்கள் யோகா, பிராணயாமம் மற்றும் ஜிம்மில் சேருதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். அவர்களில் சிலர் உடல் எடையை குறைப்பதில் வெற்றி பெறுகிறார்கள், மற்றவர்கள் பிரச்சனையுடன் தொடர்ந்து போராடுகிறார்கள். சொல்லப்போனால், பல வீட்டு வைத்தியங்கள் மற்றும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களின் மூலமே எளிதாக எடையை குறைக்க முடியும். உடல் எடையை குறைக்க தேநீர் தொடர்பான அற்புதமான வீட்டு வைத்தியத்தை இந்த பதிவில் காணலாம். இதன் மூலம் உங்களுக்கு எந்த பக்க விளைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
தேநீரில் 2 துளசி இலைகளை போடவும்
இந்த தேநீர் செய்ய எந்த ஒரு விசேஷ பொருளும் தேவையில்லை. துளசி இலைகள் இருந்தால் போதும். தேநீர் செய்யும் போதெல்லாம், 2 துளசி இலைகளை நன்றாக சுத்தம் செய்து அதில் போடவும். சர்க்கரை மற்றும் பால் குறைவாக சேர்க்கவும். தினமும் காலையிலும் மாலையிலும் இந்த டீயை குடிப்பதால், படிப்படியாக தேவையற்ற உடல் எடை குறையத் தொடங்கி, உடல் வடிவம் பெறுகிறது.
மனச்சோர்வு நீங்கும்
துளசி தேநீர் அதிக உடல் எடையை குறைப்பதில் மட்டுமல்ல, மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தை நீக்குவதற்கும் பெரிதும் உதவுகிறது. மன அழுத்தம் காரணமாக, பலருக்கு தூக்கமின்மை பிரச்சனையும் அதிகரிக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தினமும் மாலையில் துளசி டீ குடித்து வந்தால், அது நல்ல தூக்கத்தைப் பெற பெரிதும் உதவியாக இருக்கும்.
மேலும் படிக்க | ஃபோலிக் அமிலம் சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்பவரா? கோவிடினால் அதிக ஆபத்து!
நோய்கள் ஓடிவிடும்
இந்த டீயை உட்கொள்வதால் இருமல், சளி, காய்ச்சல் போன்ற நோய்கள் ஓடிவிடுவதுடன், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும் என்பதும் இதன் நன்மைகளில் ஒன்றாகும். துளசி டீ குடிப்பதன் மூலம், ஒருவர் உடலில் நேர்மறை சக்தியை உணர்கிறார். நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்க இந்த டீ உதவும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடல் எடை அதிகரிப்பால் அவதியா? இந்த சுவையான சாலட் சாப்பிட்டு எடையை குறைக்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ