தொண்டை வலி பாடாய் படுத்துதா? எளிய வீட்டு வைத்தியங்கள் இதோ
Home Remedies For Sore Throat: தொண்டைப்புண் அல்லது வலி அதிகமானால், உமிழ்நீர் விழுங்குவதில் சிரமம், உணவுகளை உட்கொள்வதில் சிரமம், வலி, கரகரப்பு என பல பிரச்சனைகள் ஏற்படும்.
Home Remedies For Sore Throat: கோடை காலம் வந்துவிட்டது. கொளுத்தும் வெயிலில் நம் அனைவருக்கும், குளிர்ச்சியான தண்ணீர், சாறுகள், ஐஸ்கிரீம் என குளிர்ச்சியான உணவுகள் மற்றும் பானங்களையே உட்கொள்ளத் தோன்றும். குளிர்ச்சியான பொருட்களை சாப்பிடுவதால் சில நேரங்களில் தொண்டையில் புண் மற்றும் அரிப்பு ஏற்படுகிறது. கோடை காலத்திலும் சில சமயங்களில் தொண்டை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும். தொண்டை புண், வலி மற்றும் அரிப்பு போன்றவற்றை ஏற்படுத்தும். குறிப்பாக்க, குளிர்ந்த நீர் அல்லது ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகு பலர் இந்த பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.
தொண்டைப்புண் அல்லது வலி அதிகமானால், உமிழ்நீர் விழுங்குவதில் சிரமம், உணவுகளை உட்கொள்வதில் சிரமம், வலி, கரகரப்பு என பல பிரச்சனைகள் ஏற்படும். இவற்றுக்கு பொதுவாக பலர் பல மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால், மருந்துக்கு முன் சில வீட்டு வைத்தியங்களை முயற்சித்தால், அவற்றின் மூலமும் தொண்டை பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். தொண்டை வலிக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய சில எளிய வீட்டு வைத்தியங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். எனினும், இவற்றை பயன்படுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவர் அல்லது சுகாதார நிபுணர்களிடம் கண்டிப்பாக ஆலோசனை பெறுவது நல்லது.
தொண்டை வலிக்கு பயன்படும் எளிய வீட்டு வைத்தியங்கள்
துளசி சாறு
துளசி இலையை சாறு எடுத்து வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு மற்றும் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
சூடான எண்ணெய் மசாஜ்
வெதுவெதுப்பான எண்ணெயைக் கொண்டு தொண்டையை மசாஜ் செய்வது தொண்டை அரிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இதற்கு ஆலிவ் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெய் சிறந்தது.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் சில துளிகள் லாவெண்டர் எண்ணெய் கலந்து தொண்டை அரிப்பு உள்ள இடத்தில் தடவவும். இது உட்புறம் புண் உள்ள தோலை மென்மையாக்குகிறது மற்றும் அரிப்புகளை குறைக்கிறது.
மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை உடலை விட்டு விரட்டி அடிக்கும் அசத்தலான வீட்டு வைத்தியங்கள்
தேநீர்
தொண்டை வலி சரியாக துளசி, இஞ்சி, தேன் கலந்து தேநீர் தயாரித்து அருந்தலாம். இதன் மூலம் தொண்டை பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.
வெல்லம்
வெல்லத்தை மென்று சாப்பிடுவது தொண்டையில் ஏற்படும் வலி மற்றும் அரிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. எதையும் சாப்பிட்ட பிறகு சிறிது வெல்லம் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.
எலுமிச்சை மற்றும் வேம்பு தண்ணீர்
எலுமிச்சை மற்றும் வேப்பிலையை வெந்நீரில் கொதிக்க வைத்து குடித்து வந்தால் தொண்டையில் ஏற்படும் அரிப்பிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
வெதுவெதுப்பான நீர்
தினமும் காலை மற்றும் மாலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து வாய் கொப்பளிக்கவும். இதனால் தொண்டையில் ஏற்படும் அரிப்பு மற்றும் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
இந்த வைத்தியங்கள் அனைத்தும் தொண்டை புண், வலி மற்றும் அரிப்பைக் குறைக்க உதவும். எனினும், பிரச்சனை தொடர்ந்தால், மருத்துவரை அணுகவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | அடாவடி கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த காலையில் தினமும் இதை செய்தால் போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ