Cholesterol Control Tips: கொலஸ்ட்ரால் பிரச்சனை இந்த காலத்தில் மக்களிடையே பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இது பெரும்பாலும் நமது ஆரோக்கியமற்ற உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறை காரணமாக ஏற்படுகின்றது. முன்னர் ஒரு சிலரை மட்டுமே பாதித்து வந்த கொலஸ்ட்ரால் பிரச்சனை இன்று பலரை பாடாய் படுத்தும் ஒரு பெரிய பிரச்சனையாக உள்ளது.
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த பலரும் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். இதற்காக மருத்துவ சிகிச்சைகளையும், கடினமான உணவு கட்டுப்பாடுகளையும் மேற்கொள்ளும் பலரும் உள்ளனர். எனினும், சில எளிய இயற்கையான வழிகளிலும் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைக்கலாம். கொலஸ்ட்ராலை குறைப்பதில் நமது காலை பழக்கங்களுக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது.
காலையில் சில ஆரோக்கிய குறிப்புகளை நாம் கடைபிடித்தால் உடலில் கொலஸ்ட்ரால் அளவை படிப்படியாக குறைக்கலாம்.
கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த காலையில் கடைபிடிக்க வேண்டிய சில முக்கிய விஷயங்களை பற்றி இங்கே காணலாம்.
உறக்கம்:
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த தூக்கம் மிக முக்கியமானது. நமது நாளின் துவக்கம் உறக்கம் நிறைவடையும் போது ஏற்படுகின்றது. சரியான மற்றும் போதுமான தூக்கம் இல்லாமல் நாம் காலையில் எழுந்தால், அது கொழுப்பின் அளவை அதிகரிக்கும். தூக்கமின்மை கொலஸ்ட்ராலை அதிகரிப்பதாக பல ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இரவில் கண்டிப்பாக 7-8 மணிநேர தூக்கம் அவசியமாகும்.
தண்ணீர்:
கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த போதுமான நீர் உட்கொள்ள வேண்டியது மிக அவசியம். காலையில் எழுந்தவுடன் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சைச் சாற்றைக் குடிப்பதால், கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தலாம். இது வேகமாக கொலஸ்ட்ராலை எரிக்க உதவுகின்றது.
யோகா மற்றும் தியானம்:
யோகா மற்றும் தியானத்தில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது மனதுக்கும் உடலுக்கும் தேவையான அமைதியையும் ஆரோக்கியத்தையும் அளிக்கின்றது. இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தும்.
மேலும் படிக்க | உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் இருக்கா? இந்த 5 அறிகுறிகள் தெரியும்!
காலை உணவு:
கொலஸ்ட்ராலைக் குறைக்க சரியான காலை உணவு மிக முக்கியம். பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் பால் ஆகியவற்றை உட்கொள்வதால், கொழுப்பு அதிகரிக்காமல் உடலுக்கு தேவையான ஆற்றலை பெற முடியும். காலை உணவில் தானியங்கள், நார்ச்சத்து மற்றும் அமினோ அமிலங்களை நல்ல அளவில் சேர்த்துக்கொள்வது மிக அவசியம்.
உடற்பயிற்சி:
காலையில் செய்யப்படும் உடற்பயிற்சியால் கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டில் நல்ல உதவி கிடைக்கும். காலையில் குறைந்தது 30 நிமிடங்களுக்கு யோகா, நடைபயிற்சி, ஓட்டப்பயிற்சி, ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை செய்தால், கொலஸ்ட்ராலை கரைக்கப்பட்டு வேகமாக கலோரிகளும் எரிக்கப்படும்.
உணவின் நேரம்
சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்வது மிக அவசியமாகும். நேரத்திற்குச் சாப்பிடுவது செரிமான செயல்முறையை மேம்படுத்தி, கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
புகையிலை, மது வேண்டாம்:
கொலஸ்ட்ராலை குறைக்க புகையிலை மற்றும் மதுவிலிருந்து விலகி இருப்பது அவசியம். புகையிலை மற்றும் மதுபானத்தை உட்கொள்வதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும். ஆகையால் அவற்றை தவிர்ப்பது, குறைந்தபட்சம் குறைப்பது நல்லது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ