சாப்பிட்டவுடன் கழிப்பறையை நோக்கி ஓடுபவரா நீங்கள்? இந்த பிரச்சனைக்கான எளிய தீர்வுகள் இதோ
ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வித பிரச்சனை உள்ளது. சிலருக்கு பசியே இருக்காது. சிலருக்கு பசித்தாலும் சாப்பிட முடியாது. சிலருக்கு சாப்பிட்டு முடித்தவுடன் கழிப்பறை செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது.
புதுடெல்லி: ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வித பிரச்சனை உள்ளது. சிலருக்கு பசியே இருக்காது. சிலருக்கு பசித்தாலும் சாப்பிட முடியாது. சிலருக்கு சாப்பிட்டு முடித்தவுடன் கழிப்பறை செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. அப்படிப்பட்டவர்கள் எங்கு வெளியே சென்று சாப்பிடவும் மிகவும் யோசிப்பது சகஜம்தான்.
இந்த பிரச்சனை இருப்பவர்கள் இதை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவும் சங்கோஜப்படுகிறார்கள். உங்களுக்கும் இப்படிப்பட்ட பிரச்சனை இருந்தால், உங்களுக்கு இந்த தகவல்கள் மிகவும் உதவியாக இருக்கும்.
உணவை சாப்பிட்ட உடனேயே கழிப்பறை செல்லவேண்டிய தேவை இருக்கும் பிரச்சனை காஸ்ட்ரோ-கோலிக் ரிஃப்ளக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. சரியான நேரத்தில் மலம் கழிக்காமல் அடக்கி வைத்திருப்பவர்களுக்கு பெரும்பாலும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த சிக்கலை எளிதாக வீட்டு வைத்தியங்கள் மூலம் சரி செய்யலாம் என்பதை அறிந்து உங்களுக்கு ஆறுதல் கிடைக்கும். இவற்றை பின்பற்றினால் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவாக குணமடையலாம்:
ALSO READ: Health News: கொத்து கொத்தாய் ஆரோக்கிய நன்மைகளை அள்ளித் தரும் கொத்தமல்லி!!
இவைதான் 5 வீட்டு வைத்தியங்கள்:
- இந்த சிக்கலைத் தவிர்க்க, 50 கிராம் இனிப்பு மாம்பழ (Mangoes) சாற்றில் 10-20 கிராம் இனிப்பு தயிர் மற்றும் 1 டீஸ்பூன் இஞ்சி சாறு சேர்த்து குடிக்கவும். சில நாட்களுக்கு தினமும் இதைச் செய்தால் நோயாளிக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.
- 1 முதல் 6 கிராம் புளிப் பட்டை, 20 கிராம் தயிரில் கலந்து ஒரு நாளைக்கு இரண்டு முறை (காலை மற்றும் மாலை) உட்கொண்டால், குழந்தைகளுக்கு இந்த பிரச்சனையிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
- தினமும் உலர்ந்த திராட்சை சாப்பிடுவதால், நம் வயிற்றில் உள்ள பிரச்சனைகள் நீங்கி தினமும் சீராக மலம் கழிப்பதில் உதவி கிடைக்கும். உலர்ந்த திராட்சையை ஊர வைத்தும் உட்கொள்ளலாம்.
- காரட், பீன்ஸ் போன்ற நார்சத்து மிகுந்த காய்கறிகளும், ஆரஞ்சு, சாத்துக்குடி, வாழைப்பழம் போன்ற பழங்களும் இந்த பிரச்சனைக்கு தீர்வாக அமையும்.
- காலை எழுந்தவுடனும், இரவு தூங்கும் முன்னும் வெந்நீர் (Water) குடிப்பது இந்த பிரச்சனைக்கு மிகவும் எளிதான நிவாரணமாகும்.
உங்கள் உணவில் தினமும் சேர்க்க வேண்டிய முக்கிய உணவுப் பொருட்கள் பின்வருமாறு:
- இந்த சிக்கலில் இருந்து விடுபட நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும்.
- ஃபைபர் நிறைந்த உணவுப் பொருட்களில் பேரிக்காய், ஆப்பிள், பட்டாணி, ப்ரோக்கோலி, முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள் அடங்கும்.
- தயிர், சாலட், இஞ்சி (Ginger), அன்னாசி, கொய்யா, போன்றவற்றையும் கண்டிப்பாக தினமும் உட்கொள்ள வேண்டும்.
- வாழைப்பழங்கள், மாம்பழம், கீரை, தக்காளி, ஆகியவற்றில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. எனவே இந்த உணவுகளும் நன்மை பயக்கும்.
ALSO READ: Health News: சாப்பிடும்போது தண்ணீர் குடிக்கலாமா? ஆயுர்வேதம் என்ன கூறுகிறது?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR