முக சருமம் தளர்ந்து விட்டதா... வீட்டில் தயாரிக்கும்‘இந்த’ டோனர் கை கொடுக்கும்!
Anti Ageing Toner: உங்களை உடலை பிட் ஆக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்யலாம். மறுபுறம், சருமத்தை இறுக்கமாக்குவதற்கு, நீங்கள் வீட்டிலேயே இயற்கையான தோல் பராமரிப்பு டோனர் தயாரித்து சருமத்தை இறுக்கமாக வைத்திருக்கலாம். அதனை தயாரிக்கும் முறையை அறிந்து கொள்ளலாம்.
நயந்தாரா, திரிஷா போன்றோரின் பிட்ன்ஸ் மற்றும் சருமத்தைப் பார்த்து அவரது வயதை உங்களால் யூகிக்க முடியுமா? இந்த பிரபலங்கள் எல்லாம் தங்கள் வயது தெரியாத அளவுக்கு தங்களை எப்படி ஃபிட்டாக வைத்துக் கொள்கிறார்கள் என்ற கேள்வி எங்களைப் போன்றே உங்கள் மனதிலும் எழலாம். பிரபல நடிகைகள் பலருக்கு 40+ ஆகிவிட்டலும், ஆனால் அவரது பிட்னஸ் மற்றும் சருமத்தைப் பார்க்கும்போது அவரது வயதை உங்களால் யூகிக்க முடியாது. நயந்தாரா, திரிஷா மட்டுமல்ல, பல பிரபலங்களின் பெயர்கள் இந்த பட்டியலில் சேர்க்கலாம். அவர்களின் உண்மையான வயதை நாம் யூகிக்கவே முடியாது.
உண்மையில் முதுமை அறிகுறிகள் முதலில் உங்கள் சருமத்தில் தெரியும். தளர்வான சருமம் மற்றும் எடை அதிகரிப்பு போன்றவை. முதுமை தோற்றத்தை அளிக்கும் சில விஷயங்களில் இருந்து உங்களை நீங்கள் காப்பாற்றிக்கொள்ள விரும்பினால், இந்த பிரச்சனையை சமாளிக்க உங்களுக்கு உதவும் வீட்டு வைத்தியம் எங்களிடம் உள்ளது. உங்களைப் பிட் ஆக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி செய்யலாம். மறுபுறம், சருமத்தை இறுக்கமாக்குவதற்கு, நீங்கள் வீட்டிலேயே இயற்கையான தோல் பராமரிப்பு டானிக் தாயாரிக்கலாம். இது உஞக்ள் சருமத்தை இறுக்கமாக வைத்திருக்க உதவும் (Skin Tightening Toner).
சருமத்தை இறுக்கும் டோனர்
இயற்கையான இந்த டோனரைத் தயாரிக்க துளசியைப் பயன்படுத்த வேண்டும். துளசி அதன் அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்றது. ஆரோக்கியத்திற்கு நன்மை செய்வதைத் தவிர, உங்கள் சருமத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும். அதன் பயன்பாடு முகப்பரு, தோலில் உள்ள முதுமை அறிகுறிகளை அகற்றுவதில் நன்மை பயக்கும். உங்கள் துளசி இலைகளிலிருந்து டோனரை தயாரித்து, தொடர்ந்து பயன்படுத்தவும். இந்த துளசி சருமத்தை இறுக்கமாக்கும் டோனரை எப்படி செய்வது என்று பார்ப்போம்.
மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!
துளசி டோனர் தயாரிக்க தேவையான பொருட்கள்
துளசி டோனரைத் தயாரிக்க துளசி இலைகள், ரோஸ் வாட்டர் மற்றும் கிளிசரின் தேவை.
துளசி டோனர் செய்வது எப்படி
துளசி டோனர் செய்வது மிகவும் எளிது. இதற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொதிக்க வைக்க வேண்டும். இப்போது அதில் கழுவிய துளசி இலைகளைப் போட்டு பாத்திரத்தை மூடி சிறிய தீயில் சூடாக்கவும். 10 நிமிடங்களுக்குப் பிறகு, கேஸ் அடுப்பை அணைத்து, குளிர்விக்க வைக்கவும். ஆறியதும் இந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டிலில் வடிகட்டவும். இப்போது அதில் பாதி ரோஸ் வாட்டர் மற்றும் ஒரு ஸ்பூன் கிளிசரின் சேர்த்து நன்கு கலக்கவும். உங்கள் சருமத்தை இறுக்கமாக்கும் டோனர், இப்போது தயாராக உள்ளது. இந்த ஃபேஸ் பேக்கை காலையிலும் மாலையிலும் உங்கள் முகத்தில் தடவினால், உங்கள் முகம் தொலை தூரத்தில் இருந்து பார்க்கும் போதும், பளபளக்கும், அதை எப்படி உபயோகப்படுத்துவது என்று இப்போது அறிந்து கொள்ளலாம்
துளசி டோனரை உபயோகிக்கும் முறை
இதைப் பயன்படுத்துவதற்கு, முதலில் உங்கள் முகத்தை நன்கு கழுவி சுத்தம் செய்யவும். பின்னர் இந்த டோனரை ஸ்ப்ரே செய்யவும். அது காய்ந்த பிறகு, மாய்ஸ்சரைஸ் தடவவும். சிறந்த பலன்களை பெற, இந்த டோனரை காலை மற்றும் இரவு தூங்கும் போதும் பயன்படுத்தலாம்.
மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS அதை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ