தேன் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அதாவது, தேன் சாப்பிடாதவர்கள், பல முக்கிய ஆரோக்கிய நன்மைகளை இழக்கிறார்கள் என்று சொல்லலாம். குறிப்பாக ஆண்கள் இதை உடனடியாக உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தேனை தொடர்ந்து சாப்பிடுவதால், ஆண்கள் பல சிக்கல்களில் இருந்து எளிதாக விடுபடலாம். ஊட்டச்சத்து நிபுணர் நிகில் வாட்ஸ் இது குறித்து கூறுகையில், தேனில் பல வகைகள் உள்ளன. தேன் பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் செல் ஆற்றலை அதிகரிக்கிறது. இது குறிப்பாக ஆண்களுக்கு அதிக நன்மை அளிக்க வல்லது.தேன்  விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆண்களின் பல வகையான பிரச்சனைகளுக்கு தீர்வுகளை தருகிறது.


1. விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவும் தேன்


தேன் உட்கொள்வது ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? அதாவது, பாலியல் வாழ்க்கையில் சிக்கலை சந்திக்கும் ஆண்கள், தேனை உட்கொள்ளத் தொடங்க வேண்டும். இதன் மூலம் பலன் பெறுவீர்கள். வாரத்திற்கு ஒருமுறை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.


மேலும் படிக்க | Health Alert: சாப்பிட்ட பின் ஒரு போதும் செய்யக் கூடாதவை


2.  முடி மற்றும் தோலுக்கும் நன்மை பயக்கும்


தேனில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், உங்கள் சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதன் மூலம் உங்கள் தலை முடி தொடர்பான பிரச்சனையும் குணமாகும். இது உங்கள் நரம்புகளை இயற்கையான முறையில் திறக்கும் திறன் கொண்டது என்று ஊட்டச்சத்து நிபுணர் நிகில் கூறுகிறார். இதன் காரணமாக, பார்கின்சன், அல்சைமர் போன்ற நரம்பியக்கடத்தல் நோய்களை தவிர்க்கலாம். இருப்பினும் இதைப் பற்றி இன்னும் நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட வேண்டியுள்ளது எனவும் நிகில் கூறுகிறார்.


3. வலுவான எலும்புகள் மற்றும் தசைகள்


இது தவிர, தேன் உட்கொள்வதால் எலும்புகள் மற்றும் தசைகள் வலுவடையும். உண்மையில், மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் தவறான உணவுப் பழக்கவழக்கங்களால், பெரும்பாலானோருக்கு இந்த வகையான பிரச்சனை உள்ளது. இதனை சாப்பிடுவதன் மூலம் நிச்சயம் பலன் பெறுவீர்கள்.


4. மலச்சிக்கலை போக்கும்


மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களும் உணவில் தேனை சேர்த்துக்கொள்ளலாம். இதன் மூலம் பலன் பெறுவீர்கள். உண்மையில், இதை உட்கொள்வதன் மூலம், உங்கள் வயிறு தொடர்பான எல்லா வகையான பிரச்சனையும் உங்களை விட்டு விலகி இருக்கும்


5. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்


கொரோனா சகாப்தத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முக்கியமான ஒரு விஷயமாகிவிட்டது. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை தேன் மூலம் அதிகரிக்கலாம். எனவே நீங்கள் உங்கள் உணவில் தேனை சேர்த்துக் கொள்ள வேண்டும், அது உங்களுக்கு நன்மைகளைத் தரும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | மிதமிஞ்சிய உப்பு உயிருக்கே ஆபத்து; எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR