உங்கள் உடலில் ஹார்மோன்கள் நிலை சீராக இருக்க... நீங்கள் செய்ய வேண்டியவை!
நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள உங்கள் காரணமாக, பல்வேறு உடல் நல பிரச்சனைகளை நாம் சந்திக்கிறோம். சரியான நேரத்தில் தூங்குவதில்லை. பசிக்கும்போது சாப்பிடுவதில்லை. உடலின் பயாலஜிக்கல் கிளாக் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இது ஹார்மோன் நிலைகளை பாதிக்கிறது.
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நமக்குப் பல நேரங்களில் மனநிலையில் மாற்றங்கள் ஏற்படலாம். சில சமயங்களில் குழப்பங்கள் கூட அதிகமாகலாம். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், உடலில் ஹார்மோன்கள் சமச்சீரற்ற நிலையில் இருக்கும்போது இந்த அறிகுறிகள் இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள உங்கள் காரணமாக, பல்வேறு புதிய புதிய நோய்கள், உடல் நல பிரச்சனைகளை நாம் சந்திக்கிறோம். பணத்திற்கு பின்னால் ஓடும் நாம், சரியான நேரத்தில் தூங்குவதில்லை. பசிக்கும் போது சாப்பிடுவதில்லை. உடலின் பயாலஜிக்கல் கிளாக் பெரிதும் பாதிக்கப்படுகிறது. இது ஹார்மோன் நிலைகளை பாதித்து, பல உடல் நல பிரச்சினைகளுக்கு காரணமாகிறது. நல்ல தூக்கம் இல்லை என்றால் உடலில் வளர்ச்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு நமது கல்லீரல் செயல்பாடும் பாதிக்கப்படுகிறது.
ஹார்மோன்கள் உற்பத்தியும் கல்லீரல் ஆரோக்கியமும்
ஹார்மோன் உற்பத்தியில் கல்லீரல் முக்கிய பங்கு வகிப்பதால், உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஹார்மோன்கள் சமநிலையும் பாதிக்கப்படுகிறது. கல்லீரல் பாதிப்பினால் ஹார்மோன் பிரச்சனை மட்டுமல்ல, உடல் பருமன், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள், கருப்பை தொடர்பான பிரச்சனைகள் ஆகியவையும் ஏற்படுகின்றன.
ஹார்மோன்கள் சமநிலையின்மையினால் ஏற்படும் உடல் நல பிரச்சனைகள்
கல்லீரல் பாதிப்பினால், மெட்டபாலிசம் மட்டுமல்லாது, உடலின் குளுக்கோஸ் லெவலும் பாதிக்கப்பட்டு, நீரழிவு நோய் உருவாகும் ஆபத்து அதிகரிக்கிறது. மேலும் உடலில் நீர் தங்குவது அதிகரித்து, கொலஸ்ட்ரால் அளவுகளும் அதிகரிக்கிறது. இன்றைய நாளில், முதியவர்களுக்கு இளைஞர்கள் மாரடைப்பு நோயினால் உயிர் இழப்பதை பார்க்கிறோம். இதனால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். மேலும், ஹார்மோன்கள் பிரச்சனை ஏற்படாமல் இருக்க, கல்லீரலை அவ்வப்போது டிடாக்ஸ் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படாமல் இருக்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில பழக்கங்கள்:
1. கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகம் உள்ள உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். இவற்றில் ரீபைல் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் இருக்கும். இது உடலின் வளர்ச்சியை மாற்றத்தை பெரும் அளவு பாதிக்கும்.
2. இரவு உணவை சீக்கிரமே முடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குறைந்தது இரவு ஏழரை மணிக்குள் உங்கள் இரவு உணவை முடித்துக் கொள்ள வேண்டும். இதனால் செரிமானம் சிறப்பாக இருப்பதோடு, தூக்கமின்மை பிரச்சனை அடியோடு நீங்கும்.
3. பதப்படுத்தப்பட்ட உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இவற்றின் ஷெல்ப் லைஃப் எனப்படும் அதன் ஆயுளை அதிகரிக்க பல்வேறு ரசாயனங்கள் வெட்டிவுகள் சேர்க்கப்படுகின்றன. இவை உடலுக்கு பெருமளவில் தீங்கு விளைவிக்கும்.
4. இரவில் நல்ல ஆழ்ந்த தூக்கமும் உங்கள் உடலின் சீராக வைத்திருக்கும். போதுமான தூக்கம் இருந்தாலே நாம் பல்வேறு வகையான நோய்களைத் தவிர்த்து விடலாம். அது ஒரு கால எழுந்திருக்கும் போது புத்துணர்ச்சியுடன் இருப்பதால், நமது செயல் திறன் அதிகரிக்கும்.
5. உங்கள் வயதிற்கும் உங்கள் உடல் திறனுக்கும் ஏற்ப, உடற்பயிற்சி நடை பயிற்சி போன்றவற்றை மேற்கொள்வதை வழக்கமாக கொள்ள வேண்டும். இது உங்கள் மனதளவிலும் உடலளவிலும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவும்.
6. உங்களுக்கு கிடைக்கும் நேரத்திற்கும் உங்கள் வேலைக்கும் ஏற்ப, மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் சில சமூக செயல்பாடுகள், ஆன்மீக செயல்பாடுகள், யோகா பயிற்சிகள் போன்றவற்றை மேற்கொள்வது, மனரீதியாக உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதோடு, உங்கள் உடலின் ஹார்மோன்கள் மன அளவில் இருக்க உதவிடும்.
பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது
மேலும் படிக்க | இந்த மூலிகைகளை சமைச்சு சாப்பிட்டா வேற லெவல்! அப்படியே சாப்பிட்டா ஆரோக்கியம் உறுதி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ