Coronavirus New Strain: இங்கிலாந்து நாட்டில் கடந்த சில நாள்களுக்கு முன் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டதை அடுத்து, உலகெங்கிலும் உள்ள மக்கள் மிகவும் கவலையடைந்து உள்ளனர். இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மக்கள் மத்தியில் மிக வேகமாக பரவி வருவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அவர்களை பொறுத்தவரை, இந்த வகை கொரோனா வைரஸ் முன்பை விட 70 சதவீதம் வீரியமிக்க தொற்றுநோயாகும். இந்த புதிய கொரோனா வைரஸ் முதன்முதலில் தென்கிழக்கு இங்கிலாந்தில் செப்டம்பர் மாதத்தில் கண்டறியப்பட்டது என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம். மிகவும் ஆபத்தான புதிய வகை கொரோனா வைரஸ் (New Corona Strain) காரணமாக ​​பிரிட்டனில் ஊரடங்கு (Lockdown) விதிக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்ல, பிரிட்டனில் இருந்து உலகின் பிற பகுதிகளும் செல்லும் விமான சேவையும் நிறுத்தப்பட்டன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரிட்டனில் (Britain) கொரோனா வைரஸின் (Coronavirus) புதிய வடிவம் கண்டுபிடிக்கப்பட்டதைப் போலவே, தென்னாப்பிரிக்காவிலும் பல்வேறு வகையான வைரஸ்கள் கண்டறியப்பட்டுள்ளன. வைரஸின் புதிய வடிவம் காரணமாக நாடு இரண்டாவது தொற்றுநோயை எதிர்கொள்கிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.


இந்தியாவில் புதிய வகை கொரோனா இருக்கிறதா? (Is there New Corona Strain in India)
இந்தியாவில் புதிய வகை கொரோனா (New Corona Strain in India) வைரஸ் தொற்று இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை. நாட்டில் அதிகரித்து வரும் கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கையும் கவலை அளிக்கிறது. கொரோனா வைரஸால் இந்தியாவில் 1 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளன. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பிரிட்டனில் காணப்படும் இந்த புதிய வகை கொரோனா வைரஸ், இதுவரை இந்தியாவில் கண்டறியப்படவில்லை. இந்த ஆபத்தான வைரஸ் ஒரு சில நாடுகளை மட்டுமே அடைந்துவிட்டன என்று அவர்கள் கூறியுள்ளனர். எனவே இந்திய மக்கள் அதிகம் கவலைப்பட தேவையில்லை.


கோவிட் -19 வைரஸ் பிரிட்டனில் உருமாறத் தொடங்கியதாக விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இதன் காரணமாக இது இன்னும் ஆபத்தானதாகி விட்டது. அதாவது வைரஸ்களின் வரிசையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. SARS COV-2 ஒரு ஒற்றை RNA வைரஸ். இதன் கீழ், வைரஸ் மூலக்கூறுகளின் வடிவம் தீர்மானிக்கப்படுகிறது. அதில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அது உருமாற்றம் என்று அழைக்கப்படுகிறது.


ALSO READ | நாக்பூர் நபர் மூலம் இந்தியாவில் நுழைந்துவிட்டதா புதிய வகை கொரோனா வைரஸ்?


எவ்வளவு ஆபத்தானது (How Dangerous New Corona Strain)
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இந்த புதிய வகை வைரஸ் குறித்த கூடுதல் தகவல்கள் இன்னும் முழுமையாக கண்டு பிடிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த புதிய கொரோனா வைரஸ் 70 சதவிகிதம் வேகமாக மக்களிடையே பரவுகிறது என்று அவர்கள் மதிப்பிட்டு உள்ளனர். அதேநேரத்தில் இந்த புதிய வகை கொரோனா வைரஸ் (Coronavirus) குறித்து குழந்தைகள் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.


தடுப்பு நடவடிக்கைகள் என்ன (What are the Preventive Measures)
இந்த புதிய வகை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் வேறுபட்ட அறிகுறிகள் எதுவும் காணப்படவில்லை என்று மருத்துவர்கள் நம்புகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இந்த வகை வைரஸுக்கு பயப்படக்கூடாது மற்றும் பீதியடையக்கூடாது. அதே நேரத்தில், நிபுணர்களின் கூற்றுப்படி,  இந்த புதிய COVID-19 வைரசால் இறக்கும் வாய்ப்பு இல்லை. ஆனால் வைரசின் பரிமாற்றம் மேலும் அதிகரிக்கக்கூடும். இது தவிர, கோவிட் -19 (COVID-19) தொற்று சிகிச்சைக்காக உருவாக்கப்படும் தடுப்பூசிகளும் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரசுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை நிரூபிக்க முடியும் எனவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 


ALSO READ | உருமாறும் கொரோனா வைரஸ் பற்றி Dec 28 அன்று EPS மருத்துவ நிபுனர்களுடன் முக்கிய ஆலோசனை


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR