இலந்தைப் பழம் என்பது, நம் நாட்டில் கிடைக்கக்கூடிய பருவ கால பழம் ஆகும். எண்ணிலடங்கா மருத்துவ குணங்களைக் கொண்ட இலந்தை பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இலந்தையில், புரதம், கார்போஹைட்ரேட்டுகள், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் டி,  கால்சியம், பொட்டாசியம் என பல ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும், அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி எண்ணிக்கை காரணமாக, மிகவும் ஆரோக்கியமான பழம் என்று அறியப்படுகிறது. ஆக்ஸிஜனேற்ற மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகளைக் கொண்ட ஒரு அருமையான ஆனால், விலை குறைந்த ஊட்டச்சத்து பொக்கிஷம் இலந்தைப்பழம். 


இதில் போதுமான அளவு பொட்டாசியம் இருப்பதால், தொடர்ந்து உண்டுவந்தால் தசைக் கட்டுப்பாடு மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலை பராமரிக்கப்படுகிறது. உடலுக்கு ஆற்றலை வழங்குகும் இலந்தை, ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க செய்து ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.  


மேலும் படிக்க |  கலோரிகளை எரித்து உடல் பருமனை குறைக்கும் ‘ஆயுர்வேத பொடியை’ தயாரிக்கும் முறை!


இலந்தையின் முக்கிய மருத்துவ பயன்கள் :
இலந்தை நினைவாற்றலை அதிகரிக்கும் 
பித்தத்தை சமநிலைப்படுத்தி, பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, இளநரைக்கு மிகச்சிறந்த மருந்து இலந்தைப் பழம்
உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தருகிறது இலந்தை 
கோடைக்காலத்தில் வரும் வேனல்கட்டிகளுக்கு சிறந்த மருந்துஇலந்தை 
சுண்ணாம்புச்சத்து, கால்சியம் சத்து அதிகம் கொண்டது இலந்தை


எலும்புகளையும், பற்களையும் வலுவடையச் செய்கிறது. எலும்புருக்கி நோய்க்கு இயற்கையான மிகச்சிறந்த மருந்து இலந்தைப் பழம். பகல் உணவுக்கு பிறகு இலந்தைப்பழம் சாப்பிட்டால் உண்டு வந்தால் செரிமானம் ஆவதுடன் பித்தமும், கபமும் இயல்பாகும் என்று சித்தமருத்துவம் பரிந்துரைக்கிறது.


மேலும் படிக்க | மூளை சுறுசுறுப்பாக இருக்க... பகலில் ஒரு குட்டித் தூக்கம் போடுங்க..!


அதேபோல, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உபாதைகளையும் அதிக அளவிலான உதிரப்போக்கை தடுக்கும் தன்மை கொண்டது. கோடைக்காலத்தில் மட்டுமே கிடைக்கும் இலந்தையின் மருத்துவ குணங்களை ஆண்டு முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே, இயற்கையான முறையில் பதப்படுத்தி உருவாக்கியது தான் இலந்தை வடை என்பது இதன் சிறப்பை குறிப்பிட போதுமானது. தித்திப்பும் காரமும் கலந்த இலந்தை வடையில் ருசி அனைவருக்கும் பிடித்தமானது. 


என்புமெலிவு நோய் (Rickets) என்ற நோய், எலும்பு மெலிந்துபோவதால் ஏற்படும் நோய் ஆகும். உணவுக் குறைபாடுகளாலோ மரபியற் சிக்கல்களாலோ உருவாகும் நோய் இது.  ரிக்கெட்ஸ் எனப்படும் இந்த நோய் வைட்டமின் D குறைபாட்டால் ஏற்படுகிறது. உடலின் கால்சியம் உறிஞ்சல் வீதத்தை அதிகரிக்க வைட்டமின் D உதவுகிறது. இது இலந்தையில் அதிகம் இருப்பதால், இலந்தைப் பழத்தை தொடர்ந்து உட்கொண்டால், எலும்புகள் பலமடைந்து நோய்கள் குறையும்.


சீனாவின் பேரிச்சம்பழம் என்று அழைக்கப்படும் இலந்தைப் பழம், ஊட்டச்சத்துக்களின் சுரங்கம் என்று அறியப்படுகிறது. அதனால் தான், தூக்கத்தின் தரம் மற்றும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்த இலந்தைப்பழம் மாற்று மருத்துவத்தில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. தனித்துவமான ஆக்ஸிஜனேற்றிகள் இலந்தையில் நிறைந்திருப்பதால் தான் மூளையின் செயற்பாட்டை ஊக்குவிக்கிறது என்று சுகாதார நிபுணர்கள் கருதுகின்றன.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள், ஆய்வறிக்கையின் அடிப்படையிலும் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் எழுதப்பட்ட்வை. ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுபேற்காது.)


மேலும் படிக்க | தூக்கம் குறைஞ்சா ஹார்ட் பிராப்ளம் அதிகமாகும்! பெண்களை எச்சரிக்கும் ஸ்லீப்பிங் அலர்ட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ