மூளை சுறுசுறுப்பாக இருக்க... பகலில் ஒரு குட்டித் தூக்கம் போடுங்க..!

பகல்நேர தூக்கம் உங்கள் மூளைக்கு மிகவும் நன்மை பயக்கும் என்றும் டிமென்ஷியா நோய் அபாயத்தை குறைக்கும் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது. ஆனால் ஆழ்ந்த தூக்கம் நன்மை செய்வதை விட தீங்கு விளைவிக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 10, 2023, 07:22 PM IST
  • பகல்நேர தூக்கம் ஒரு அறிவாற்றல் திறனை அதிகரிக்கும்.
  • ஆனால் நீண்ட நேரம் தூங்குவதால், நன்மை கிடைக்காது.
  • இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துகிறது.
மூளை சுறுசுறுப்பாக இருக்க... பகலில் ஒரு குட்டித் தூக்கம் போடுங்க..! title=

குட்டி தூக்கத்தின் ஆரோக்கிய நன்மைகள்: பகலில் தூங்கும் பழக்கம் உள்ளதா? இது உண்மையில் உங்கள் மூளைக்கு நல்லது என்கின்றனர் நிபுணர்கள். வழக்கமான பகல்நேரத் தூக்கம், வயதாகும்போது நமது மூளை சுருங்கும் விகிதத்தைக் குறைக்கவும், மூளையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவும் என்று ஸ்லீப் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட புதிய ஆய்வு கூறுகிறது. UCL மற்றும் உருகுவேயில் உள்ள குடியரசு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஆய்வில், மூளைக்கும் பகல் நேர தூக்கத்திற்கும் உள்ள தொடர்பு கண்டறியப்பட்டது, இது டிமென்ஷியா மற்றும் பிற நோய்களின் அபாயத்தை குறைக்கிறது. நன்றாக தூங்குவது அறிவாற்றல் நன்மைகளைக் கொண்டுள்ளது என்பது ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது.

இப்போது, இந்த புதிய ஆய்வு பகல்நேர தூக்கத்திற்கும் சிறந்த மூளை ஆரோக்கியத்திற்கும் இடையே உள்ள தொடர்பைக் கண்டறிந்துள்ளது. புதிய ஆய்வில் சிறந்த தூக்கத்தின் கால அளவு குறிப்பிடப்படவில்லை என்றாலும், முந்தைய ஆய்வுகள் 30 நிமிடங்கள் அல்லது அதற்கும் குறைவான தூக்கத்தை குட்டித் தூக்கம் காரணமாக அறிவாற்றல் சிறப்பாக இருப்பதை ஆய்வுகள் காட்டியுள்ளன. பகல்நேரத் தூக்கம் இரவு நேரத் தூக்கத்தைக் கெடுக்கும் வாய்ப்பு குறைவு. 

பகலில் குட்டி தூக்கத்தின் மற்ற ஆரோக்கிய நன்மைகளைப் பார்ப்போம்:

மூளையின் ஆற்றல்

பகலில் குட்டித் தூக்கம் ஆற்றல்த் திறன் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துகிறது. சில ஆய்வுகள் பவர் நேப்ஸ் என்ப்படும் குட்டித் தூக்கம் எடுத்துக்கொள்வது, அவர்களின் உற்பத்தித்திறன் மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்துவதன் மூலம், அறிவாற்றலை அதிகரிக்கிறது. ஆனால் நீண்ட நேர ஆழ்ந்த தூக்கம் நன்மை செய்வதை விட தீங்கு விளைவிக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எடை இழப்பிற்கு உதவும்

சில ஆராய்ச்சியாளர்கள் மதியம் தூங்குவது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த உதவுகிறது மற்றும் எடை இழப்புக்கு உதவுகிறது என்று கூறுகின்றனர். எடுத்துக்காட்டாக, ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், காலை நேரத்தை விட பிற்பகலில் ஓய்வெடுக்கும்போது அதிக கலோரி இழப்பைக் கண்டறிந்துள்ளனர். எனவே பல நேர குட்டித் தூக்கம் உங்கள் உடல் எடையை குறைக்க உதவும்

இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துகிறது

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மதியம் தூங்குவது நன்மை பயக்கும் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது. மதிய தூக்கம் தமனி சார்ந்த உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளுக்கு இரத்த அழுத்த அளவை மேம்படுத்துவதோடு, தேவையான உயர் இரத்த அழுத்த எதிர்ப்பு மருந்துகளின் அளவையும் குறைக்கிறது.

மேலும் படிக்க | எடை இழப்பிற்கு எது சிறந்தது... பாதாம் பருப்பா... அல்லது ஊற வைத்த பாதாமா!

நீண்ட தூக்கத்தைத் தவிர்க்கவும்

பகல்நேர தூக்கம் ஒரு அறிவாற்றல் திறனை அதிகரிக்கலாம். ஆனால் நீண்ட நேரம் தூங்குவதால், நன்மை கிடைக்காது. அவை நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். இது உங்கள் தூக்க நேரம் மற்றும் வழக்கத்தை சீர்குலைத்து, தூக்க மந்தநிலைக்கு வழிவகுக்கும், இதனால் நாள் முழுவதும் நீங்கள் தூங்கி வழிந்து கொண்டோ மற்றும் கவனச் சிதறலையோ அதிகம் உணரலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE MEDIA இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வீட்டில் இருந்தபடி உடல் எடையை வேகமாக குறைப்பது எப்படி? இதோ சில ஈசி டிப்ஸ்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News