எத்தனை பேருக்கு தெரியும்? வெங்காயத்தின் அருமை!!
வெங்காயம் நம் வாழ்வில் இன்றியமையாத உணவு பொருள் ஆகும். ஏறக்குறைய அனைத்து வகையான உணவு பொருள்களிலும் பயன்படுத்தப் படுகிறது. அதன் முக்கியதுவத்தை அறிவோம்.
பெண்களுக்கு மாதவிடாய் பொழுது அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டால் மூன்று சிறிய வெங்காயத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உதிர போக்கு குறையும்.
தொண்டை கரகரப்புக்கு வெங்காயத்தின் சாறு குடித்தால் கரகரப்பு தீர்ந்து விடும். மேலும் குரல் தன்மையும் மாறும்.
வெங்காயச்சாறு குடித்தால் உடலில் உள்ள சூட்டை தணியும். மலச்சிக்கல் குறையும். நீரழிவு நோய்க்கு சிறந்தது வெங்காயம்.
பல் இடுக்கில் இருக்கும் அழுகைக் நீக்கிவிடும். வாய்புண்கள் ஏற்படும் போது வெங்காயி இதழ் அரைத்து தடவி வந்தால் வாய்புண் குணமடையும்.
சிறிய வெங்காயத்தை அரைத்து தடவி வந்தால் மூடி உதிர்வதை தடுத்து நன்கு தலை முடி வளர ஆரம்பிக்கும்.
வெங்காயம் வைட்டமின் B2 நிறைந்த ஒரு உணவாகும். இதில் 6.50 கிராம் கார்போஹைட்ரேட்டும், 0.20 கிராம் கொழுப்பு சத்தும், 1.10 கிராம் புரதச்சத்தும் உண்டு. வெங்காயத்தில் 33.00 கலோரிகள் உள்ளது.