சர்க்கரை நோய்க்கு கரும்பு சாறு: கரும்பில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகளவு நிறைந்துள்ளது. கரும்பை அப்படியே உரித்து நேரடியாக சாப்பிடலாம் அல்லது ஜூஸ் வடிவிலும் உட்கொள்ளலாம். பொதுவாக மருத்துவர்களின் கூற்றுப்படி கரும்புச்சாறு இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கரும்புச் சாறு குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறையாது, உடலை நீரேற்றமாக வைத்திருக்க இது உதவும். அந்தவகையில் இதை குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும், மேலும் இது உடலுக்கு மருந்தாக செயல்படுகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்தவகையில் இத்தனை நன்மைகல் கொண்ட கரும்பு ஜூஸை சர்க்கரை நோயாளிகள் குடிக்கலாமா? வாருங்கள் இதற்கான பதிலை இந்த கட்டுரை மூலம் நாம் அறிந்துக்கொள்வோம்.


மேலும் படிக்க | தாம்பத்திய வாழ்க்கையை சீர்குலைக்கும் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைபாடு!


சர்க்கரை நோயாளிகள் கரும்பு சாறு குடிக்கலாமா?
கரும்பு சாறு சுவையில் மிகவும் இனிமையானது என்பது அனைவரும் அறிந்ததே. கரும்பில் சர்க்கரை அளவு மிகவும் அதிகமாக இருக்கிறது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, சர்க்கரை நோயாளிகளுக்கு கரும்பு சாறு சரியான தேர்வாக கருதப்படுவதில்லை. மற்ற அனைத்து சர்க்கரை பானங்களைப் போலவே, இதுவும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். ஏனெனில் கரும்பு சாறு குடிப்பதால், உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.


நிபுணர்கள் இதைப் பற்றி பல ஆய்வக சோதனைகளை மேற்கொண்டனர், அதன் பேரில் வெளியான முடிவில் நீரிழிவு நோயாளிகள் கரும்பு சாறு குடிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கரும்புச்சாறு அருந்துவதற்கு மருத்துவரை கண்டிப்பாக அணுக வேண்டும்.


உண்மையில், கரும்புச்சாறு குடிப்பதால் உடலில் இருந்து பாலிஃபீனால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வெளியாகின்றன. இதனால் கணையம் தேவைக்கு அதிகமாக இன்சுலினை உற்பத்தி செய்கிறது. எனவே, சர்க்கரை நோயாளிகள் கரும்புச் சாறு குடிப்பதற்குப் பதிலாக ஃபிரெஷ் ஜூஸ் அல்லது சர்க்கரை இல்லாத டீ, காபி ஆகியவற்றை உட்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | பேலியோ டயட்டால் அதிகரித்த நீரிழிவு! நடிகர் பரத் கல்யாணின் மனைவி மரணம் விடுக்கும் எச்சரிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ