குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உட்கொள்ளும் உணவு வகையில் முட்டையும் ஒன்று. ஒரு சிலர் ஆம்பளைட் இல்லாமல் தங்கள் உணவு வேலையை பூர்த்தி  செய்வது இல்லை. குழந்தைகளுக்கு நல்ல ப்ரோட்டீன் சத்து கிடைக்க மருத்துவர்கள் கூறும் அறிவுரை ஒரு நாளைக்கு இரண்டு முட்டை சாப்பிட கொடுக்க வேண்டும் என்பதே.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அது மட்டும் இன்றி ஜிம்மிற்கு செல்லும் இளைஞர்கள், இளம்பெண்கள் உள்ளிட்ட பலரும் நாள் ஒன்றுக்கு 10 முட்டைக்கு மேல் சாப்பிடுகிறார்கள். வீட்டில்  மாத பட்ஜெட்டில் மறக்காமல் இடம் பிடிக்கும் முட்டைகளை சாப்பிடுவதால் எந்த அளவுக்கு  பலன் இருக்கிறதோ  அதே அளவிற்கு ஆபத்தும் இருக்கிறது. முட்டையின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை பலரும் வியாபார நோக்கத்துடன் அணுகி வீணான முட்டைகளை வணிகம் செய்து லாபம் சம்பாதிக்கின்றனர். 


மேலும் படிக்க | Viral Video: அப்படி என்ன தான் தூக்கமோ... குட்டியை எழுப்ப போராடும் தாய் யானை



இதில் விலை குறைவாக கிடைக்கிறது என்ற நோக்கத்துடன் வாங்கும் அப்பாவி மக்கள் பலரும் வீணான  முட்டைகளை கடைகளில் இருந்து வாங்கி உட்கொண்டு உடல்  உபாதைகளுக்கு ஆளாகின்றனர். ஆகையால்  கடைகளில் இருந்து வாங்கும் முட்டை புதியதா அல்லது பழயதா என்பதை கண்டறிந்து வாங்க வேண்டும்.


கடையில் வைத்து முட்டை வாங்கும் பொது கடைக்காரர் எடுத்து தருவதை அப்படியே வாங்கி வீட்டிற்கு கொண்டு வரும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கும். அதற்க்கு தகுந்தார் போல் முட்டை உடைந்து விட்டால் மேலும் பணம் கொடுக்க வேண்டுமே என்ற அச்சம் வேறு. ஆனால் இங்கு நாம் சற்றும் தயக்கம் காண்பிக்காமல் முட்டையை கையில் வாங்கி காதின் அருகே கொண்டு சென்று குலுக்கி பார்க்க வேண்டும். 


மேலும் படிக்க | Viral Video: இது குதிரையின் பியானோ கச்சேரி... கேட்டுத் தான் பாருங்களேன்


முட்டை குலுங்காமல் இருந்தால் அது புதிய முட்டை என தெறிந்து கொள்ளலாம்,  உள்ளே குலுங்குவது போன்ற சத்தம் கேட்டல் அது பழைய முட்டை என தெரிந்துகொள்ளலாம்.  சில கடைகளில் அந்த பழைய முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைத்து மீண்டும் விற்பனை செய்வார்கள் அப்போது முட்டையை குலுக்கி பார்த்து பழைய முட்டையை அல்லது புதிய முட்டையா என்பதை கண்டறிய முடியாது.



அந்த சூழலில் முட்டைகளை வீட்டிற்கு வாங்கி வந்த பிறகு ஒரு பாத்திரத்தில் நிறைய தண்ணீர் எடுத்து ஒவ்வொரு முட்டையாக தண்ணீருக்குள் போட வேண்டும். அப்போது அந்த முட்டை தண்ணீர் பாத்திரத்தின் அடியில் அமர்ந்து கிடந்தால் அது புதிய முட்டை மேலே மிதந்து வந்தால் அது பழைய முட்டை. அதே போல முட்டையில் விரிசலோ அல்லது நிறத்தில் மாற்றமோ தென்பட்டால் அது பழைய முட்டை.


மேலும் படிக்க | SEBI Recruitment 2022: செபியில் வேலைவாய்ப்பு: முதுகலை பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ