இப்போது பெரும்பாலானோர் மது அருந்த தொடங்கிவிட்டனர், அதிலும் குறிப்பாக பண்டிகை காலங்களில் பலரும் தனது நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து மது அருந்தி மகிழ்கின்றனர்.  உச்சகட்ட மகிழ்ச்சியில் அதிகளவில் மது அருந்தி ஹேங்கோவர் நிலைக்கு சென்றுவிடுவார்கள்.  இதற்கு காரணம் ஆல்கஹால் அசிட்டால்டிஹைடாக மாற்றமடைவது தான்.  இதனால் பொதுவாக தூக்கமின்மை, குமட்டல் போன்றவை ஏற்படும்.  ஹேங்கோவர் ஆன பலரும் சொல்லும் பொதுவான அறிகுறி தலைவலி மற்றும் அசிடிட்டி போன்ற அறிகுறிகள் இருப்பதாக கூறுகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | என்ன பண்ணிணாலும் சர்க்கரை குறையலையா... ‘இந்த’ மேஜிக் பொடியை ட்ரை பண்ணுங்க!



மிதமான அளவு மது அருந்துவது நல்லது, மது அருந்துவது உங்கள் தோலின் மேற்பரப்பில் வெப்பத்தை உணர செய்கிறது, அதேசமயம் இது உங்கள் உடலிலுள்ள வெப்பத்தையும் இழக்க செய்கிறது.  உடலின் உள் உறுப்புகளிலுள்ள வெப்பம் குறைவதால் பலவித பிரச்னைகள் ஏற்படுகிறது.  அதிகளவு மது அருந்துவதால் உடலில் ரசாயனங்கள் கலப்பதுடன், இது எலக்ட்ரோலைட் சமநிலையை சீர்குலைத்து, உங்கள் நோயெதிர்ப்பு மற்றும் மூளையின் செயல்பாட்டில் மந்தத்தன்மையை ஏற்படுத்துகிறது.  இதனால் ஹேங்கோவர் ஏற்பட்டு உங்களுக்கு தாகம், குமட்டல், தலைச்சுற்றல், கவனமின்மை போன்றவை ஏற்படுகிறது.  ஹேங்கோவர் ஆகாமல் இருக்க வேண்டுமானால் ஆண்கள் ஒரு நாளைக்கு இரண்டு யூனிட்டுகளுக்கு மேல் மது அருந்தக்கூடாது மற்றும் பெண்கள் ஒரு யூனிட்டுக்கு மேல் மது அருந்தக்கூடாது என்று கூறப்படுகிறது.



மேலும் ஒரு வாரத்திற்கு 14 யூனிட்டுக்கு மேல் மது அருந்தக்கூடாது என்றும் கூறப்படுகிறது, உங்களுக்கு மது அருந்தும்போது தலைவலி ஏற்பட்டால் மதுவை தவிர்க்க வேண்டும்.  பொதுவாக ஓட்கா, ஜின், விஸ்கி, ஒயின் போன்ற பானங்கள் உங்களுக்கு ஹேங்கொவரை ஏற்படுத்தாது.  ஹேங்கோவர் ஆகாமல் தடுக்க நீங்க காபி மற்றும் டீக்கு பதிலாக அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும், வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும். இதுதவிர டோஸ்ட் அல்லது பிஸ்கட் போன்ற உணவுப்பொருட்களை சாப்பிடலாம் மற்றும் தலைவலி இருந்தால் மட்டும் ஏதேனும் வலி நிவாரணிகள் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது.


மேலும் படிக்க | HIV வேக்சின் தோல்வி: ஆய்வாளர்கள் பெரும் ஏமாற்றம் - அடுத்து என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ