HIV vaccine Fails: பல தசாப்தங்களாக உலகை ஆட்டிப்படைத்து வரும் ஹெச்ஐவி எனும் உயிர்க்கொல்லி வைரஸூக்கு இன்னும் மருந்துகளோ தடுப்பூசிகளோ கண்டுபிடிக்கப்படவில்லை. மருத்துவர்களும் ஆய்வாளர்களும் இரவு பகலாக பல்வேறு கட்ட முயற்சிகளையும், ஆய்வுகளையும் முன்னெடுத்து வரும்போது, இதுவரை எந்தவகையான மருத்துக்கும் ஹெச்ஐவி கட்டுப்படுவதை கண்டறியமுடியவில்லை. இது ஒரு சவாலாகவே மருத்து உலகத்துக்கு இருந்து வருகிறது. இந்நிலையில், ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்ட ஹெச்ஐவி தடுப்பூசி பரிசோதனை இறுதிக் கட்டத்தில் தோல்வியில் முடிவடைந்துள்ளது.
எச்ஐவி வேக்சின் தோல்வி
இதனை கனத்த இதயத்துடன் ஆய்வாளர்கள் உலகுக்கு அறிவித்துள்ளனர். கடைசி கட்ட சோதனையில் தோல்வியை தழுவிய இந்த முயற்சி பல தசாப்தங்களாக ஹெச்ஐவியை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளின் தோல்விப் பட்டியலில் இப்போது இணைந்துள்ளது. மொசைகோ என அழைக்கப்படும் இந்த சோதனை அமெரிக்க அரசு மற்றும் ஜான்சென் நிறுவனத்தின் கூட்டாண்மையில் முன்னெடுக்கப்பட்டது. சோதனையின் தோல்வி குறித்து அமெரிக்காவின் நீண்டகாலமாக தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்று நோய்கள் நிறுவனத்தின் (NIAID) தலைவராக இருந்த டாக்டர் அந்தோனி ஃபாசி (Fauci) பேசும்போது, இது ஒரு வெளிப்படையான ஏமாற்றம் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க | உடல் எடை குறையணுமா? நோ டென்ஷன்.. இதை சாப்பிடுங்க போதும்!!
எச்ஐவி தடுப்பூசி விரைவில்
அதேநேரத்தில் எச்ஐவி தடுப்பூசி கண்டுபிடிப்பதில் இருக்கும் ஏமாற்றத்தால், மக்கள் நம்பிக்கையை இழக்க வேண்டிய அவசியமும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். டாக்டர் அந்தோனி ஃபாசி-ஐ பொறுத்தவரையில் தன்னுடைய வாழ்க்கையில் ஹெச்ஐவி-யை கட்டுப்படுத்துவதில் 50% ஆவது வெற்றி பெற வேண்டும் என்ற சபதத்துடன் பணியாற்றினார். ஆனால், அவருடைய கனவு பணிக்காலம் நிறைவு பெறும் வரை நிறைவேறவில்லை.
எம்ஆர்என்ஏ தொழில்நுட்பம்
மாறாக, NIAID தலைவராக கடந்த மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதேநேரத்தில், எச்ஐவி தடுப்பூசி கண்டுபிடிப்பதில் கொரோனா வைரஸை தடுக்க கண்டுபிடிக்க உபயோகப்படுத்தப்பட்ட எம்ஆர்என்ஏ தடுப்பூசி தொழில்நுட்பம் மிகப்பெரிய திறவுகோலாக இருக்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மொசைகோ சோதனையில் பங்கேற்றவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில், எந்தவித முன்னேற்றமும் ஆய்வாளர்கள் கண்டறியாததால், இந்த ஆய்வு தோல்வி என்பதை அறிவித்துள்ளனர். இருப்பினும் ஹெச்ஐவிக்கு ஏற்கனவே இருக்கும் தடுப்பு முறைகளை முறையாக பின்பற்றும்படி அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க | பக்கவாதத்தை முன்கூட்டியே உணர்த்தக்கூடிய முக்கியமான அறிகுறிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ