என்ன பண்ணிணாலும் சர்க்கரை குறையலையா... ‘இந்த’ மேஜிக் பொடியை ட்ரை பண்ணுங்க!

Diabetic Control: காலையில் இரண்டு வகையான விதைகள் அல்லது அதன் பொடிகளை உட்கொள்வது, இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த்துவதில் உடனடி பலன் அளிக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 22, 2023, 11:14 AM IST
  • நீரிழிவு நோய்க்கு எதிரியாகக் கருதப்படும் இரண்டு விதைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
  • தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டால், நாள் முழுவதும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.
  • மருந்து சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் பல நேரங்களில் சர்க்கரை அளவு அதிகமாகிறது.
என்ன பண்ணிணாலும் சர்க்கரை குறையலையா... ‘இந்த’ மேஜிக் பொடியை ட்ரை பண்ணுங்க! title=

நீரிழிவு நோய்: சில சமயங்களில் நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரையை கட்டுப்படுத்துவது என்பது மிகவும் சவாலான விஷயமாகி விடுகிறது. மருந்து உட்கொண்ட பிறகும், உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், உங்கள் உணவு, உடற்பயிற்சி மற்றும் மருந்து உட்கொள்ளும் முறை ஆகியவற்றில் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். மேலும், நீங்கள் சில ஆயுர்வேத தூள் அல்லது விதைகளை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டால் சர்க்கரை அளவு விரைவில் கட்டுப்படும்.

நீரிழிவு நோய்க்கு எதிரியாகக் கருதப்படும் அத்தகைய இரண்டு விதைகளைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இதனை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டால், நாள் முழுவதும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும். இதனுடன், இரத்தத்தில் சர்க்கரை அளவை திறன்பட கட்டுப்படுத்த, நீரிழிவு மருந்தை உட்கொள்ளும் சரியான வழி என்ன என்பதையும் அறிந்து கொள்ளுங்கள். ஏனென்றால் மருந்து சரியாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் பல நேரங்களில் சர்க்கரை அளவு அதிகமாகிறது.

இரத்த சர்க்கரை மருந்துகளை எடுத்துக்கொள்வதற்கான சரியான வழி என்ன?

நீரிழிவு நோய்க்கான மருந்தை உணவுக்கு அரை மணி நேரத்திற்கு முன் எடுக்க வேண்டும். மருந்தை எப்போதும் தண்ணீருடன் எடுத்துக் கொள்ள வேண்டும், குறைந்தபட்சம் ஒரு கிளாஸ் தண்ணீரை மருந்துடன் சேர்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். உங்கள் மருந்தை உட்கொள்ளும் முறை தவறாக இருந்தால், மருந்தினால் பலன் கிடைக்காமல், உங்கள் சர்க்கரை அதிகரித்துக் கொண்டே இருக்கும் அல்லது குறையும்.

மேலும் படிக்க | ஆனந்த் அம்பானிபோல் உடல் எடை ஏறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? 

 சர்க்கரை அளவை  குறைக்கும் திறன் கொண்ட விதைகள்

வெந்தயம் மற்றும் நாவல் பழ விதைகளுக்கு சர்க்கரையை குறைக்கும் திறன் உள்ளது. நாவல் பழ விதைகளில் ஜம்போலின் மற்றும் ஜாம்போசின் என்ற தனிமங்கள் காணப்படுகின்றன. இதன் காரணமாக இரத்தத்தில் சர்க்கரையின் வெளியீடு குறைந்து இன்சுலின் அளவும் அதிகரிக்கிறது. நாவல் பழ விதையை உலர்த்தி பொடி தயார் செய்யலாம். உணவு சாப்பிடும் முன் இந்த பொடியை சாப்பிடுங்கள்.

நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரையை குறைப்பதற்கான உறுதியான மற்றும் சிறப்பான வழிகளில் ஒன்று வெந்தயத்தை உணவில் சேர்ப்பது. வைட்டமின் மற்றும் ஊட்டச்சத்து ஆராய்ச்சிக்கான சர்வதேச இதழில் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஆய்வில், வெதுவெதுப்பான நீரில் ஊறவைக்கப்பட்ட 10 கிராம் வெந்தயத்தை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவை விரைவாகக் குறைக்கிறது என்று கண்டறியப்பட்டது. டைப் 2 நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த இது ஒரு சஞ்சீவியாக கருதப்படுகிறது.

வெந்தயத்தை  எடுத்துக் கொள்ளும் சரியான முறை

ஊறவைத்த வெந்தயத்தை உண்பவராக இருந்தால், அதை முழுவதுமாக மென்று சாப்பிட்டு அதன் தண்ணீரையும் குடிக்கவும். வேண்டுமானால், வெந்தயப் பொடியையும் சாப்பிடலாம். சாப்பிடும் போது குறைந்தது இரண்டு கிளாஸ் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். நாவல் பழ விதை தூளை எடுத்துக் கொள்ளும்  போதும் இதையே கடைபிடிக்க வேண்டும்.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | குளிர்காலத்தில் தினமும் பேரிட்சை பழம் அவசியம் சாப்பிடுங்கள்..! ஆயுசுக்கு உத்தரவாதம் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News