ஒரு பெண்ணின் அழகு கூந்தலை விட அதிகமாகும் என்று கூறப்படுகிறது. நீளமான மற்றும் கருமையான கூந்தலைப் பெற அனைவரும் விரும்புவார்கள். கூந்தல் வறண்டு, உயிரற்றதாக மாறும் போது, ​​அவை உடைவது இயற்கையானது, அத்தகைய சூழ்நிலையில், கூந்தலில் ஆழமான எண்ணெய் மசாஜ் செய்ய வேண்டும். ஆனால், மறுபுறம் பலர் பேன் பிரச்சனையால் சிரமப்படுகிறார்கள். உச்சந்தலையில் பேன்கள் இருப்பதால், முடி உயிரற்றதாகவும், பயனற்றதாகவும் தோற்றமளிக்கிறது. அந்த வகையில் சில வீட்டு வைத்தியம் பயன்படுத்தி மக்கள் பேன் பிரச்சனையை சமாளிக்க முயற்சி செய்கிறார்கள். இருப்பினும் அதில் நாம் சரியான தீர்வு பெறுவதில்லை. எனவே அந்த வீட்டு வைத்தியத்தை சரியான முறையில் பயன்படுத்தினாலே பலன் கிடைக்கும். தலையில் பேன் பிரச்சனையில் இருந்து விடுபட என்ன வீட்டு வைத்தியம் பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே பாரப்பவோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பொதுவாக துளசி முடி கொட்டுதல், பேன் போன்ற பிரச்சனைகள் மட்டுமின்றி, கூந்தலை கருப்பாக வைத்திருக்கும் உதவுகிறது. முடி நரைத்திருந்தால், துளசி விழுது அல்லது எண்ணெயை தலைமுடியில் தடவ வேண்டும். நீங்கள் துளசியை நெல்லிக்காய் மற்றும் மருதாணியுடன் கலக்கலாம்.


மேலும் படிக்க | அழகை மட்டுமல்ல ஆரோக்கியத்தையும் பராமரிக்கும் அருமையான வழிகள் 


பேன்களுக்கு துளசியின் பயன்பாடு
* துளசியைப் பயன்படுத்துவதன் மூலம் பேன் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். இப்போது துளசியை எப்படி பயன்படுத்துவது என்பதுதான் கேள்வி. பேன் தொல்லை இருந்தால் துளசி நீரால் தலையை அலசவும். இவ்வாறு செய்வதன் மூலம் பேன் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.


* அதேபோல் பேன்களை அகற்ற, தேங்காய் எண்ணெயில் பாதாம் எண்ணெயைக் கலந்து, அதில் துளசி தண்ணீரைக் கலந்து, இப்போது தயாரிக்கப்பட்ட கலவையை உங்கள் தலையில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை தடவவும். இவ்வாறு செய்வதன் மூலம் பேன் பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம்.


* தேங்காய் எண்ணெயை சூடாக்கி துளசி இலைகளை கொதிக்க வைத்து, செய்த எண்ணெயை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். இவ்வாறு செய்வதால் பேன் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.


* துளசி இலைகளின் பேஸ்ட்டை உங்கள் தலையில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை தடவவும். இவ்வாறு செய்வதன் மூலம் பேன்களை விரட்டலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பிளாக் காபி குடித்தால் உடல் எடை குறையுமா? உண்மை என்ன? 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ