Yoga Asanas For Concentration : மறதி என்பது மனிதர்களின் இயல்பான பழக்கங்களுள் ஒன்று. ஆனால் ஒரு சிலருக்கு இயல்பை விட அதிகமாக மறதி இருக்கும். ஒரு பொருளை கிச்சனில் இருந்து எடுத்து விட்டு, அதை அங்கிருக்கும் திண்டு மீதே வைத்து விட்டு வீடு முழுவதும் தேடுவர். இப்படி மறப்பது அவர்களுடைய தவறு இல்லை என்றாலும், அவர்கள் வேறு எதையேனும் யோசித்துக்கொண்டு வேறு வேலைகளில் ஈடுபடுவதால் இது போன்ற செயல்களில் ஈடுபடுவர். இப்படி அதிக ஞாபக மறதி இருப்பவர்கள், அதிகம் யோசிப்பவர்களாக இருப்பர். இதனால் இவர்கள் எந்த வேலை செய்தாலும் அதில் அவர்கள் மனம் முழுமையாக ஈடுபடாமல் இருக்கும். இதுவும், ஞாபக மறதி ஏற்படுவதற்கான பெரிய காரணமாக இருக்கலாம். இதை சரிசெய்யவும், நினைவாற்றலை அதிகப்படுத்தவும் சில யோகாசனங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1.பத்மாசனா:


பத்மாசனம், உங்கள் முதுகெலும்பு, தொடை, இடுப்பு, கணுக்கால் ஆகிய பகுதிகளுக்கு நன்மை ஏற்படும். இந்த இடங்களில் நினைவாற்றலை அதிகரிக்கும் நரம்புகள் இணைவதாக கூறப்படுகிறது. இதனால், இந்த ஆசனத்தை செய்யலாம் என மருத்துவ நிபுணர்கள் பலர் பரிந்துரைக்கின்றனர். 


எப்படி செய்வது:


>முதலில் உங்கள் கால்களை முன்நோக்கி நீட்டி அமர வேண்டும்.
>பின்னர் உங்கள் இடது காலை மடக்கி வலது காலின் தொடை மேலும், இடதுகாலை மடக்கி வலது காலின் தொடை மேலும் வைத்து சப்பணம் போட்டு அமர வேடும்
>முதுகை நேராக வைத்து மூச்சை இழுத்து வெளியில் விட வேண்டும்.


2.பிராமரி பிராணாயாமம்:


இந்த ஆசனம் நல்ல மூச்சு பயிற்சியாக பார்க்கப்படுகிறது. இந்த ஆசனம் செய்வதால் கோபம், விரக்தி, பதற்றம் போன்ற உணர்வுகளை உடலில் இருந்து விரட்டியடிக்க முடியும். 


எப்படி செய்வது?


>அமைதியான இடத்தில் ஒரு மேட்டில் அமர வேண்டும்
>சப்பணம் போட்டு அமர்ந்து இந்த பயிற்சி செய்ய சிரமமாக இருந்தால் ஒரு நாற்காலியில் அமர்ந்து கொள்ளலாம்
>அமர்ந்தவுடன் கண்களை மூடவும்
>உங்கள் ஆள்காட்டி விரல்களால் இரு கண்களையும் மூடி மூக்கால் மட்டும் நன்றாக மூச்சை இழுத்து விட வேண்டும்
>நீங்கள் விடும் மூச்சு சத்தமாக இருக்க வேண்டும். இப்படியே 5 முறை மூச்சை உள்ளிழுத்து வெளியில் விடலாம்.


மேலும் படிக்க | அலுவலகத்தில் டென்சனா? முதுகுவலியா? சுலபமா இந்த டாப் 5 யோகாகளை செய்யலாமே?



3.பசிச்சமொட்டானாசனம்:


அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்கள், இந்த யோகாசனத்தை செய்யலாம். இது முதுகு மற்றும் இடுப்பு பகுதியில் ஏற்படும் வலிகளை நீக்க உதவும். அது மட்டுமன்றி நினைவாற்றல் அதிகரிக்கவும் உதவும்.


எப்படி செய்வது?


>உங்கள் கால்களை முன்னோக்கி வைத்து அமரவும்
>அமர்கையில் உங்கள் முதுகு நேராக இருக்க வேண்டும், கால்கள் ஒன்றாக இருக்க வேண்டும்
>உங்கள் கைகளை முன்னோக்கி நீட்டி, உங்கள் கைகள் எவ்வளவு தூரம் போகுமோ அதுவரை நீட்டவும்
>இப்படி செய்கையில் மூச்சு விடுவதில் கவனம் செலுத்த வேண்டும்
>உங்கள் தலை முட்டியை தொடும் வரை குணிய வேண்டும்
>இந்த நிலையில் நன்றாக மூச்சை உள்ளிழித்து விட வேண்டும்


4.பாதஹஸ்தாசனம்:


இந்த யோகாசனம் செய்வதால் உடலில் மட்டுமன்றி தலையிலும் இரத்த ஓட்டம் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. இதனால் உங்களது நினைவாற்றல் அதிகரித்து கவனச்சிதறல் ஏற்படாமல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. முதுகு, இடுப்பு, தொடை மற்றும் முட்டி ஆகிய உடல் பகுதிகளை வலுவாக்கவும் இந்த யோகாசனத்தை செய்யலாம்.


எப்படி செய்வது?


>உங்கள் கைகளை இரு பக்கமும் உடலோடு ஒட்டி இருக்கும் படி வைத்துக்கொண்டு நேராக நிற்க வேண்டும்.
>கைகளை நன்றாக உயர்த்தி இடுப்பு வரை குணிய வேண்டும்.
>உங்கள் கைகளை கால்களுக்கு அருகில் குணிந்து வைக்க முயற்சி செய்ய வேண்டும்.
>இதே நிலையில் சில நிமிடங்கள் இருக்க வேண்டும்.
>இதை செய்யும் போது மூச்சை இழுத்து விட வேண்டும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வேண்டுமா? ‘இந்த’ யோகாசனங்களை செய்து பாருங்கள்..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ