உடல் பருமனை ஓட ஓட விரட்ட இந்த Weight Loss Diet உதவும்
Weight Loss Tips: எடை இழப்பு என்பது மிக கடினமான காரியம்தான். நம் உடலின் எடை மிக விரைவாக கூடி விடுகிறது. ஆனால், இதை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது.
Weight Loss Tips: 2023 ஆம் ஆண்டு முடிந்து 2024 ஆம் ஆண்டு தொடங்கிவிட்டது. இப்போது புதிய நம்பிக்கைகள் மற்றும் தீர்மானங்களுடன் 2024 ஆம் ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளோம். பலர் பலவித உறுதிகளை எடுத்திருப்பார்கள். ஆனால், உடல் எடையை இந்த ஆண்டு குறைக்க வேண்டும் என்ற ஆசையும் தீர்மானமும் கிட்டத்தட்ட அனைவருக்கும் இருக்கும்.
எடை இழப்பு என்பது மிக கடினமான காரியம்தான். நம் உடலின் எடை மிக விரைவாக கூடி விடுகிறது. ஆனால், இதை குறைக்க நாம் பல வித முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. உடல் பருமன் என்பது இந்நாட்களில் மிகவும் பொதுவான பிரச்சனையாகிவிட்டது. தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சியின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் பெரும்பாலானோர் உடல் பருமனை எதிர்கொள்கின்றனர். உடல் பருமன் அல்லது அதிகரித்த எடை ஒரு நபரின் முழு ஆளுமையையும் கெடுத்துவிடுகிறது. இதனால், பலரது தன்னம்பிக்கையும் நிலைகுலைந்து விடுகிறது. இது மட்டுமல்லாமல் உடல் எடை அதிகரிப்பதால் பல வித நோய்களும் உடலை ஆட்கொள்ளக்கூடும்.
எடை இழப்பு டயட் (Weight Loss Diet)
நீங்கள் எப்போது வேண்டுமானாலும் பின்பற்றக்கூடிய எளிதான எடை இழப்பு உணவுத் திட்டத்தை பற்றி இந்த பதிவில் காணலாம். பலர் தங்கள் அன்றாட வேலைகளில் மிகவும் பிஸியாக இருக்கிறார்கள். ஆகையால் உடற்பயிற்சிகள் செய்ய இவர்களுக்கு நேரம் கிடைப்பதில்லை. இதை மனதில் வைத்துக்கொண்டு, உடல் எடையைக் குறைக்கும் டயட் திட்டத்தைப் பின்பற்றுவதற்கான வழியையும் அதன் பலன்களையும் இந்த பதிவில் அளித்துள்ளோம்.
உடல் எடையைக் குறைக்க, இந்த எடை இழப்பு உணவுத் திட்டத்தைப் பின்பற்றவும் (Diet Plan for Weight Loss)
உடல் எடையை குறைக்க இந்த எளிதான உணவுத் திட்டத்தைப் பின்பற்றலாம். இதைப் பின்பற்ற, உங்கள் டயட்டில் பின்வரும் உணவுகளை சேர்க்கவும்:
6:30 AM- 1 கிளாஸ் இலவங்கப்பட்டை அல்லது சீரக தண்ணீர் குடிக்கவும்.
8:00 AM- 2 அல்லது மூன்று இட்லி / 2 தோசை / 4 சப்பாத்தி, இவற்றுடன் காய்கறிகள், சட்னி, சாம்பார்
12:00 PM- 90 முதல் 100 கிராம் சீஸ் மற்றும் காய்கறிகள்
பிற்பகல் 2:00- 1 கிண்ணம் பருப்பு, காய்கறி, 1 ரொட்டி / 1 கிண்ணம் சாதம், 1 கிண்ணம் சாலட்
4:00 PM- 1 ஆப்பிள் அல்லது 1 கிளாஸ் மோர்
மாலை 5:30- சர்க்கரை இல்லாத தேநீர்
9:00 PM- பருவகால காய்கறிகளுடன் ரொட்டி
மேலும் படிக்க | இரத்தசோகை ஏற்பட்டால் வெளியும் தெரியும் அறிகுறிகள்! இரும்புச்சத்து குறைந்தா பேராபத்து
எடை இழப்பு உணவில் என்ன சேர்க்க வேண்டும்?
1. உணவில் கார்போஹைட்ரேட் (Carbohydrates) சேர்க்கவும். பிஸ்கட், ரொட்டி, வெள்ளை அரிசி மற்றும் கோதுமை போன்றவற்றில் எளிய கார்போஹைட்ரேட் உள்ளது. ஒருவர் அதை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். உங்கள் உணவில் காம்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்டுகளை சேர்க்கவும். இதில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
2. வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பது எடையைக் குறைக்க உதவுகிறது. நீங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரிக்க விரும்பினால், உங்கள் உணவில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-இ, வைட்டமின்-பி12 மற்றும் வைட்டமின்-டி போன்ற சத்துக்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.
3. உங்கள் எடை இழப்பு உணவில் ஆரோக்கியமான கொழுப்புகளைச் (Good Cholesterol) சேர்த்து, டிரான்ஸ் கொழுப்பைத் தவிர்க்கவும். ஆலிவ் எண்ணெய், அரிசி தவிடு எண்ணெய், கடுகு எண்ணெய், சோயாபீன் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் மற்றும் கடலை எண்ணெய் போன்றவற்றை உங்கள் எடை இழப்பு உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
4. எடை இழப்புக்கு (Weight Loss) புரதத்தை புறக்கணிக்க முடியாது. உங்கள் உணவில் புரதம் நிறைந்த பருப்பு, பீன்ஸ், கொண்டைக்கடலை, பாலாடைக்கட்டி, பால், முட்டை மற்றும் முளைகள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
எடை இழப்புக்கான உணவுக் குறிப்புகளுடன் இந்த உதவிக்குறிப்புகளைப் பின்பற்றவும்
- தொப்பையை குறைத்து (Belly Fat) எடல் எடையை குறைக்க உங்கள் எடை இழப்பு உணவில் நார்ச்சத்து (Fiber) சேர்த்துக்கொள்ளுங்கள். தினமும் குறைந்தது 15 கிராம் புரதத்தை உட்கொள்ள வேண்டும். ஓட்ஸ், ஆளி விதைகள், ஆப்பிள் மற்றும் ப்ரோக்கோலி ஆகியவற்றை உட்கொள்ளுங்கள்.
- நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், முடிந்தவரை தண்ணீர் குடிக்கவும். போதுமான அளவு தண்ணீரை உட்கொள்வதால் உணவுக்கான ஆசை ஏற்படாது. தினமும் 8 கிளாஸ் தண்ணீர் குடிக்கவும்.
- இரவு உணவை சீக்கிரமாக சாப்பிடுங்கள். நீங்கள் தாமதமாக இரவு உணவை (Dinner) சாப்பிட்டால், உங்கள் எடை அதிகரிக்கும், ஏனெனில் இரவில் வளர்சிதை மாற்ற விகிதம் குறைகிறது. எனவே இரவு 8 மணிக்குள் இரவு உணவு அருந்த வேண்டும்.
- உடல் எடையை குறைக்க, ஒரு நாளைக்கு 5-6 முறை சிறிது சிறிதாக உணவை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு நாளைக்கு 3 முறை சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | எச்சரிக்கை! நுரையீரல் ரொம்ப வீக்கா இருப்பதை உணர்த்தும் ‘சில’ அறிகுறிகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ