உடல் எடையை குறைப்பது என்பது பலரின் ஆசையாக இருந்தாலும், அந்த இலக்கை அடைவது தான் மிகவும் சிரமமானதாக இருக்கிறது. அதைக்கூட எப்படியாவது கஷ்டப்பட்டு குறைத்துவிடலாம் என்றாலும், இடுப்புச்சதை மற்றும் தொப்பையை குறைப்பது என்பது எளிதான காரியமே இல்லை. தொப்பை கொழுப்பை எளிதில் அகற்றும் வழியை தேடுபவரா நீங்கள்? இந்தக் கட்டுரை உங்களுக்கானது...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் போது, ​​தொப்பை கொழுப்பை அகற்றுவதில்தான் அதிகம் சிரமப்பட வேண்டியிருக்கிறது. தொப்பை கொழுப்பு உங்கள் தோற்றத்தை மட்டுமல்ல, உங்கள் கல்லீரல், சிறுநீரகம் மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. உடல் பருமனைக் கட்டுப்படுத்தும்போது மிகப் பெரிய பிரச்சனையாக இருந்தாலும், தொப்பையை குறைப்பதும் முக்கியமானதாகிறது.


எப்போதும் சமச்சீரான மற்றும் ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு வந்தால், தொப்பை பிரச்சனை இருக்காது என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள், இதை அன்றாட வழக்கமாக மாற்றிக் கொண்டால், உடல் பருமன் உள்ளிட்ட பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். தொப்பையைக் குறைக்க வேண்டுமானால், அதை, ஒரு நாளின் முதல் உணவான காலை உணவோடு தொடங்க வேண்டும். ஆரோக்கியமான நாளும் இங்கிருந்தே தொடங்குகிறது.


காலை உணவு தேர்வு


காலை உணவை புத்திசாலித்தனமாக தேர்வு செய்ய வேண்டும். ஆனால் உணவு கட்டுப்பாடும், உணவின் அளவில் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்காமல் எப்படி தொப்பையைக் குறைப்பது ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்கள் என்பவர்களே அதிகமாக இருப்பார்கள். அவர்களுக்கு தொப்பையை குறைக்க  உதவும் சில தின்பண்டங்களின் பட்டியல் இது.


மேலும் படிக்க | ரெட் அலெர்ட்... நெய் சாப்பிடுகிறீர்களா? கொஞ்சம் இதை தெரிஞ்சுக்கோங்க


இந்த உணவு அட்டவணையை ஒருவர் பின்பற்றினால், உணவு கட்டுப்பாடு இல்லாமலேயே உடல் எடையைக் கட்டுப்படுத்தவும், வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், ஆரோக்கியமாகவும் இருக்க முடியும்.


உலர்பழங்கள் மற்றும் பருப்புகளுடன் நாளைத் தொடங்குங்கள். பாதாம், பிஸ்தா, அக்ரூட் பருப்புகள் என எதையும் சாப்பிடலாம். ஆனால் பாதாம் பருப்பை மட்டும், இரவில் தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் சாப்பிடலாம்.


நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க, பூசணி விதைகள் அல்லது சூரியகாந்தி விதைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இது உங்களுக்கு ஆற்றலைத் தருவதோடு, மீண்டும் மீண்டும் எதையாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வை தோன்றச் செய்யாது. அதாவது நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும். இதனால், உடல் பருமன் அதிகரிக்காது என்பதுடன் தொப்பையும் குறையும்.


காலையில் எந்தப் பழத்தை சாப்பிட வேண்டும் என்பதை விருப்பப்படி அதை நீங்கள் தேர்வு செய்யலாம். பழங்களுடன் இரண்டு ஸ்பூன்கள் அல்லது 10 ஊறவைத்த பாதாம் பருப்புகளையும் சாப்பிடலாம். இது உங்கள் உடலுக்கு ஆற்றலைத் தருவதோடு, மீண்டும் மீண்டும் எதையும் சாப்பிடும் ஆசை இருக்காது.


மேலும் படிக்க | சிறுநீரக பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க இதை விட பெஸ்ட் சாய்ஸ் எதுவுமே இல்ல! ஆயுர்வேத டிப்ஸ்!


வேகவைத்த முட்டை கொண்ட காலை உணவோடு நீங்கள் நாளைத் தொடங்கலாம். உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முக்கியமான ரகசியம் என்னவென்றால், காலை அல்லது இரவு உணவில் பதப்படுத்தப்படாத பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு சட்டென்று உடல் எடையை அதிகரிக்கும். குறிப்பாக கொழுப்பு வேகமாக வயிற்றுப் பகுதிகளில் சேரும்.


காலை உணவில் ஒரு பானத்துடன் தொடங்குவது நல்லது. பாதாம் மற்றும் பாலில் செய்யப்பட்ட ஒரு கப் புரோட்டீன் ஷேக்கை காலை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அதில் இனிப்பு சேர்க்கக்கூடாது. வாழைப்பழம் மற்றும் சோயா பால் கலந்து ஸ்மூத்தியும் காலை உணவுக்கு ஏற்றது. சியா விதைகளை சேர்த்த பானத்தையும் காலை வேளையில் குடிக்கலாம். காலை உணவில் பால் மற்றும் சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதும் நாள் முழுவதும் உற்சாகமாக இருக்க உதவும்.


எந்த ஒரு தீர்வும் ஒரு நாளில் வேலை செய்யாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு விஷயத்தைத் தொடங்கினாலும், அதன் விளைவைக் காண தொடர்ச்சியாக அதனை செயல்படுத்துவது அவசியம். எனவே, உடல் எடையை குறைக்கும் பயணத்தைத் தொடங்கினால், உங்கள் முயற்சிகளை நீண்ட நாட்களுக்குக் தொடர்ந்தால் தான் அதன் உண்மையான பலன் தெரியும்.  


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இந்த இலைக்கு இப்படி ஒரு குணமா? பார்த்தாலே பரவசமாக்கும் சீத்தாபழ இலைகள் புன்னகையை வளமாக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ