உடல் ஆரோக்கியம் பெறும் மற்றும் உடல் அழகும் பொலிவும் தரும் இளநீரும் கருப்பட்டியின் பலன்கள் :  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இளநீர் பானம் தயாரிக்க தேவைப்படும் பொருள்கள் :  


இளநீர் ஜூஸ்   - ஒரு கப்   
வழுக்கைத் தேங்காய் - சிறிது  
ஐஸ் கட்டி -தேவைக்கேற்ப
கருப்பட்டி வெல்லம் -தேவைக்கேற்ப 


குளிர்பானம் தயாரிக்கும் முறைகள் : இளநீர் ஜூஸ் , வழுக்கைத் தேங்காய், கருப்பட்டி வெல்லம்  மற்றும்  எலுமிச்சசை பழசாறு தேவைக்கேற்ப எடுத்து  கொண்டு மிக்சியில்  அரைத்துக் கொள்ள வேண்டும்.  பின்பு ஐஸ் கலந்து சாப்பிடலாம்


இளநீரில் உள்ள சத்து : பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், கந்தகம் போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது. 


கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும். கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.சீரகத்தை வறுத்து சுக்குக்கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும். ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்து  சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும்


தினமும் இதை எடுத்துக்கொண்டால் உடல் ஆரோக்கியம் பெறும் மற்றும் உடல் அழகும் பொலிவும் தரும்.