நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைப்புக்கு இஞ்சி பூண்டு டீ... எப்படிச் செய்வது?
இஞ்சி மற்றும் பூண்டு இரண்டும் மிகவும் சக்திவாய்ந்த மூலிகைகள். இது அசீரணம், குமட்டல் மற்றும் வீக்கத்திற்கான ஒரு பாரம்பரிய தீர்வாகக் கருதப்படுகிறது.
நாடு தழுவிய ஊரடங்கின் மத்தியில் நாம் இருக்கிறோம், பல ஆண்டுகளில் உலகமே வேறு எதற்கும் மேலாக ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளித்தது இதுவே முதல் முறையாகும். கொரோனா வைரஸ் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளது என்பது உங்களுக்குத் தெரியும், மேலும் ஆபத்தான சூழ்நிலை பல நாடுகளை ஊரடங்கை அறிவிக்க வழிவகுத்தது. அதிகமான மக்கள் தாங்கள் சாப்பிடுவது மற்றும் சிறந்த சுகாதாரத்தை கடைப்பிடிப்பது குறித்து அதிக கவனம் செலுத்துகிறார்கள். நோய் எதிர்ப்பு சக்தி என்பது நோயை உண்டாக்கும் முகவர்களுடன் போராடக்கூடிய சீரான நிலை என வரையறுக்கப்படுகிறது.
அந்தவகையில் தற்போது இஞ்சி பூண்டு தேநீர் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும் எடை குறைப்பதற்கும் உதவுகிறது.
இஞ்சி மற்றும் பூண்டு தேநீர் இனிமையானது மற்றும் பெரும்பாலும் சளி, மூக்கடைப்பு மற்றும் தொண்டை புண் ஆகியவற்றில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் தினமும் மூலிகை தேநீர் குடிக்கலாம், ஆனால் அறிகுறிகள் தொடர்ந்து இருந்தால் மருத்துவர் அல்லது நிபுணரை அணுகுவது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைப்புக்கு இஞ்சி-பூண்டு தேநீர் செய்வது எப்படி:
ஒரு பாத்திரத்தில் சூடான நீரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில், சிறிய துண்டு இஞ்சியைச் சேர்க்கவும். பின்னர் நொறுக்கப்பட்ட பூண்டு 1 தேக்கரண்டி சேர்க்கவும். இதன் பின்னர் அரை தேக்கரண்டி கருப்பு மிளகு சேர்த்து 5 நிமிடம் கொதிக்க வைக்கவும்.
அடுப்பிலிருந்து இறக்கி, ஒரு டம்ப்ளருக்கு வடிகட்டவும். பின்னர் அரை தேக்கரண்டி தேன் சேர்த்துக் குடிக்கவும். ரெடியானது நோய் எதிர்ப்பு சக்தி, எடை குறைப்புக்கு இஞ்சி-பூண்டு தேநீர்.