எச்சரிக்கை... மாரடைப்பிற்கு பலியாகும் சிறுவர்கள்.... காரணங்களும் தீர்வுகளும்
முந்தைய காலங்களில், மாரடைப்பு நடுத்தர மற்றும் முதியோருக்கு வரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால், தற்போது இந்த நோய் சிறு குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம்.
உத்திர பிரதேச மாநிலம் அலிகாரில் 14 வயது சிறுவனும், 8 வயது சிறுமியும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதிலுமே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிரௌலி கிராமத்தில் வசிக்கும் 6 ஆம் வகுப்பு மாணவரான மோஹித் சௌத்ரி, கடந்த வெள்ளிக்கிழமை, பயிற்சியின் போது, மாரடைப்பால் பாதிக்கப்பட்டு இறந்தார். கடந்த ஞாயிற்றுக்கிழமை லோதி நகரில் வசிக்கும் திக்ஷா, தனது தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த இளம் வயதில் எப்படி இவ்வளவு வேதனையான சம்பவம் நடந்துள்ளது என பலர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளனர்.
இளம் வயதில் மாரடைப்பு
முந்தைய காலங்களில், மாரடைப்பு நடுத்தர மற்றும் முதியோருக்கு வரும் பிரச்சனையாக இருந்தது. ஆனால், தற்போது இந்த நோய் சிறு குழந்தைகளை கூட விட்டு வைக்கவில்லை. இளைஞர்கள் கூட மாரடைப்பினால் இறக்கும் சம்பவங்களை அடிக்கடி கேள்விப்படுகிறோம். இந்நிலையில், உத்திர பிரதேச அரசில் பணிபுரியும் டாக்டர் உதய் பிரதாப் சிங் இதற்கான சில முக்கிய காரணங்களை (Health Tips) விவரித்துள்ளார்.
குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏன் ஏற்படுகிறது?
1. ஆரோக்கியமற்ற உணவு
குழந்தைகள் வீட்டில் தயாரிக்கும் உணவுகளை விட, துரித உணவுகள் நொறுக்குத் தீனிகள், பொரித்த உணவுகள், சர்க்கரை நிறைந்த குளிர்பானங்கள், ஐஸ்க்ரீம்கள் சாக்கேட்டுகள் போன்றவற்றை அதிகமாக உட்கொள்வதால் குழந்தைகளின் உடலில் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு அதிகரிக்கிறது. இதனால் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.
2. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை
குழந்தைகள், வெளியில் சென்று விளையாடுவதில்லை. கம்ப்யூட்டரிலும், போனிலும் மூழ்கி விடுகிறார்கள் உடல் செயல்பாடுகள் குறைவாகவே செய்கிறார்கள். முன்பெல்லாம் டிவியைத் தவிர வேறு பொழுதுபோக்கிற்கு வழி இல்லாமல் இருந்தது. அப்போது குழந்தைகள் மாலையில் கிரிக்கெட், கைப்பந்து, கால்பந்து போன்றவற்றை விளையாடுவார்கள். ஆனால் தற்போது அவர்கள் மொபைல், டிவி, லேப்டாப் மற்றும் வீடியோ கேம்களில் மணிக்கணக்கில் நேரத்தை செலவிடுகிறார்கள். இது உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
மேலும் படிக்க | இதயம் முதல் எலும்புகள் வரை... ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் எள்ளு
3. மன அழுத்தம்
குழந்தைகளுக்கு பெற்றோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற அழுத்தம் அதிகம் உள்ளது. அதோடு, சமூக ஊடகங்களுக்கு அடிமையாதல் ஆகியவையும் சேர்ந்து குழந்தைகளின் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் அதிகரித்து வருகின்றன. இது இருதய நோய் அபாயத்தை அதிகரிக்கும் ஒரு முக்கிய காரணியாகும்.
4. மரபணு மற்றும் மருத்துவ காரணிகள்
சில குழந்தைகளில், மரபணு காரணமாக, இதய நோய்கள் பிறப்பிலிருந்தே இருக்கலாம் அல்லது குடும்ப வரலாற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
குழந்தைகளுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான அறிகுறிகள் (Heart Attack Symptoms In Kids)
திடீர் சுயநினைவு இழப்பு
சோர்வு
மார்பில் அசௌகரியம்
ஒழுங்கற்ற சுவாசம்
படபடப்பு
குழந்தைகளுக்கு மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க செய்ய வேண்டியவை (How to Prevent Heart Attack In Kids)
1. குழந்தைகள் விளையாடவும் உடல் பயிற்சி செல்லவும் ஊக்குவித்தல்
2. ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை பராமரிக்க வழக்கமான உடல் செயல்பாடுகளை உறுதி செய்யவும்.
3. வளரும் வயதில், ஆரோக்கியமான உணவு மிகவும் முக்கியமானது. புரதங்கள், நார்ச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் ஆகிய அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் கொண்ட சமச்சீர் உணவு இன்றியமையாதது.
4. போதுமான தண்ணீர் அருந்த வேண்டும். உங்கள் உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பதோடு, தீங்கு விளைவிக்கும் அனைத்து நச்சுகளையும் வெளியேற்ற உதவுகிறது. மேலும், சிறுநீரகம், கல்லீரல் போன்றவற்றின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.
5. கண் ஆரோக்கியத்தையும் பராமரிக்க குறைந்தபட்சமாக டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துதல்.
6. ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் மன ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துவதும் முக்கியம்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | உடல் பருமனை குறைக்கணுமா... இந்த சிம்பிள் விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க போதும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ