Iodine Deficiency: நோயற்ற வாழ்விற்கும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும், பல்வேறு வகையான வைட்டமின்கள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் தேவைப்படுகின்றன. அதில் ஒன்றுதான் அயோடின். ஹார்மோன்கள் வளர்ச்சிக்கான முக்கிய அங்கமாகவும், சிறந்த உடல் வளர்ச்சி, மற்றும் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் அயோடின் பங்கு மிக முக்கியமானது. அயோடின் குறைபாட்டின் காரணமாக, பல கடுமையான நோய்கள் ஏற்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அயோடின் குறைபாடு குறித்த விழிப்புணர்வு


போதுமான விழிப்புணர்வு காரணமாக, தற்போது மக்கள் மத்தியில் அயோடின் குறைபாடு தொடர்பான பிரச்சனைகள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றன. என்றாலும் நம்மில் பெரும்பாலானோருக்கு, அயோடின் குறைபாடு ஏற்படுத்தும் தாக்கம் என்ன, ஒரு நாளைக்கு எத்தனை அளவு அயோடின் தேவைப்படும், அயோடின் சத்தை எவ்வாறு பெறலாம் என்பது குறித்து முழுமையான விழிப்புணர்வு இல்லை.


அயோடின் குறைபாடு ஏற்படுத்தும் பாதிப்புகள் (Deceases Caused by Iodine Deficiency )


தைராய்டு ஹார்மோன் உற்பத்திக்கு, அயோடின் சத்து இன்றியமையாத உள்ள நிலையில், தைராய்டு குறைபாடு காரணமாக அதன் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. அயோடின் குறைபாடு காரணமாக, தைராய்டு வீக்கம், மனச்சோர்வு, மூளை வளர்ச்சி பாதிப்பு, உடல் சோர்வு, உடல் பருமன், பெண்களுக்கு கருச்சிதைவு ஆகியவை ஏற்படும் வாய்ப்புகள் (Health Tips) உள்ளது.


தைராய்டு குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள் (Iodine Deficiency Symptoms)


எவ்வளவு முயற்சி செய்தாலும் உடல் பருமன் குறையாமல் இருத்தல், மலச்சிக்கல், வறண்ட சருமம், முடி உதிர்தல் பிரச்சனை, நினைவாற்றல் இழப்பு, அதிக கொலஸ்ட்ரால், குழந்தைகள் வளர்ச்சியில் ஏற்படும் பாதிப்பு, அதிகமாக குளிர்வது போன்ற உணர்வு, குழந்தையின் அறிவாற்றலில் ஏற்படும் பாதிப்பு ஆகியவை தைராய்டு குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.


அயோடின் குறைபாட்டால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் (Iodine Deficiency in Women)


காயட்டர் என்னும் தைராய்டு வீக்கம், இனப்பெருக்க பிரச்சனைகள், கருச்சிதைவு, குழந்தைகள் இறந்து பிறத்தல் அல்லது குறைபாடுடன் குழந்தை பிறத்தல், கர்ப்பகால பிரச்சனைகள் ஆகியவை பெண்களுக்கு அயோடின் குறைபாட்டால் ஏற்படும் சில பிரச்சனைகள் ஆகும்.


மேலும் படிக்க | ஓமவல்லிக்குள் இருக்கும் நல்ல குணங்கள் என்ன? பல நோய்களுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி!


ஒரு நாளைக்கு தேவையான அயோடின் சத்து (Daily Requirement of Iodine)


ஒரு நபருக்கு தினமும் 150 mcg அயோடின் தேவைப்படுகிறது. எனவே, வயது வந்த அனைவரும் குறைந்தபட்சம் 100 mcg  அயோடின் சத்தாவது உணவில் சேரும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். இதிலும் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு அதிக அயோடின் தேவைப்படும். கர்ப்பிணிகளுக்கு நாள் ஒன்றுக்கு 220 mcg  அயோடின் சத்தும், பாலூட்டும் தாய்மார்களுக்கு 290 mcg அயோடின் சத்தும் தேவைப்படும் என்கின்றனர் நிபுணர்கள்


அயோடின் குறைபாட்டை தடுக்கும் உணவுகள் (Iodine Rich Foods)


அயோடின் கலந்த உப்பு, பாலாடைக்கட்டி, கிரேக்க தயிர், முட்டை, திராட்சை, குருதி நெல்லி, கடற்பாசி ஆகியவை அயோடின் சத்து நிறைந்த சில உணவுகள் ஆகும். இதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்வதால் அயோடின் குறைபாடு வராமல் தடுக்கலாம். அயோடின் கலந்த உப்பை தினமும் சேர்த்துக் கொள்வதன் மூலம், அயோடின் பற்றாக்குறையை பெருமளவு குறைக்கலாம். ஆனால் அயோடின் சத்து குறைபாடு இருந்தால், இந்த உப்பை பயன்படுத்துவதுடன், அயோடின் சத்து நிறைந்த உணவுகளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஒல்லி பெல்லி வேணுமா? எடை குறையணுமா? வெந்தயத்தை இப்படி சாப்பிடுங்க போதும்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ