Winter Precaution Tips Tamil | மழைக்காலங்களில் பெருகும் வைரஸ் தொற்றுகள் மலேரியா, டெங்கு, நிமோனியா, காலரா போன்ற கொடிய நோய்களை உருவாக்கும் என்பதால் அத்தகைய நோய்களிடம் இருந்து பாதுகாப்பாக இருப்பது அவசியம். பொதுவாக வெயில் காலங்களில் வைரஸ் பெருக்கம் இருக்காது. ஆனால் குளிர்காலம் தொடங்கிவிட்டால் தொற்று நோய்கள் பன்மடங்கு பெருகி, ஆரோக்கியத்துக்கு ஆபத்தை விளைவிக்கும். இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் சுரஞ்சித் சாட்டர்ஜி பேசும்போது, இதுபோன்ற இதுபோன்ற வானிலை கடுமையான உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். குளிர்காலத்தில் இருக்கும் நீடித்த வெப்பமான வானிலை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்வதற்கு சாதகமான சூழலை உருவாக்குகிறது, இது டெங்கு மற்றும் மலேரியா போன்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஃபோர்டிஸ் எஸ்கார்ட்ஸின் மூத்த நுரையீரல் நிபுணர் டாக்டர். அவி குமார் கருத்துப்படி, காற்று மாசுபாடு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக, குளிர்காலம் குறையத் தொடங்கியுள்ளது. வெப்ப வானிலையே அதிகமாக இருக்கிறது. இத்தகைய காலநிலையில் மூக்கு மற்றும் தொண்டை ஒவ்வாமை, கண் எரிச்சல் மற்றும் சுவாச நோய்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, மூச்சுக்குழாய் ஆஸ்துமா, சிஓபிடி மற்றும் இடைநிலை நுரையீரல் நோய் போன்ற பிரச்சனைகள் வேகமாக அதிகரித்து வருகின்றன என தெரிவித்துள்ளார். 


மேலும் படிக்க | சர்க்கரை வள்ளிக்கிழங்கு.... இந்த பிரச்சனைகள் இருந்தால் கொஞ்சம் தள்ளியே இருங்க


மேதாந்தா மருத்துவமனையின் டாக்டர் ஆஷிஷ் குமார் பிரகாஷ் கூறுகையில், இந்த நேரத்தில் உங்கள் உடல்நிலையை தொடர்ந்து பரிசோதித்துக்கொள்வது அவசியம். ஊட்டச்சத்து நிறைந்த உணவு, போதுமான நீரேற்றம் மற்றும் காற்று மாசுபாட்டைத் தவிர்க்க முக கவசம் அணிய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். குளிர்கால ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து நீங்கள் தற்காத்துக் கொள்ள விரும்பினால் பொதுவான சில பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும். அதாவது, எப்போதும் கைகளை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும். கண்ட இடத்தில் கைகளை வைத்துவிட்டு அப்படியே தலை, மூக்கு, கண், வாய்க்குள் விடக்கூடாது, உணவுப் பொருட்கள் மீதும் கைகளை வைக்கக்ககூடாது. 


எப்போதும் காய்ச்சிய தண்ணீரை மட்டுமே குடிக்க வேண்டும். காய்கறி, கீரைகளை சுத்தமாக கழுவிய பிறகே உணவு சமைக்க பயன்படுத்த வேண்டும். தனிப்பட்ட சுகாதாரமே உங்களை தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்பாக வைத்துக் கொள்ளும். அசால்டாக இருந்தால் கொடிய வைரஸ் நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவீர்கள். பொருளாதார இழப்பு ஒருபுறம் இருக்க, குடும்ப அமைதி உள்ளிட்டவையும் கெடும். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | பிளாக் காபி vs பிளாக் டீ : காலையில் குடிக்க எது பெஸ்ட்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ