பிளாக் காபி vs பிளாக் டீ : காலையில் குடிக்க எது பெஸ்ட்?

Black Coffee vs Black Tea : குளிர்காலத்தில் வரும் பருவ கால தொற்று நோய்களான சளி, காய்ச்சல், இருமல் உள்ளிட்டவைகளுக்கு பிளாக் காபி அல்லது பிளாக் டீ குடிப்பது எது பெஸ்ட் என தெரிந்து கொள்ளுங்கள். 

Written by - Karthikeyan Sekar | Last Updated : Dec 5, 2024, 07:45 AM IST
  • காலையில் காபி அல்லது டீ எது பெஸ்ட்?
  • பிளாக் காபி, பிளாக் டீ வித்தியாசம் இதுதான்
  • எடை குறைப்பு முதல் குடல் ஆரோக்கியம் வரை
பிளாக் காபி vs பிளாக் டீ : காலையில் குடிக்க எது பெஸ்ட்?

Black Coffee vs Black Tea Health Benefits Tamil | குளிர்காலம் வந்துவிட்டாலே டீ, காபி குடிக்க மவுசு அதிகமாகிவிடும். பெரும்பாலானோர் டீ காபி குடிக்காமல் காலைப் பொழுதை தொடங்குவது இல்லை. சிலர் பால் காபி குடிப்பதையும், சிலர் வெறும் பிளாக் காபி குடிப்பதையும் விரும்புகின்றனர். இரண்டும் சில நன்மைகளைக் கொண்டிருந்தாலும், இரண்டில் எது பெஸ்ட்? என்ற கேள்வி சிலருக்கு இருக்கிறது. பொதுவாகவே காபி வெப்பமடையும் தன்மை கொண்டது. சளி, கண்புரை, இருமல் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குளிர்காலத்தில் காபி குடித்தால் அதிக நன்மைகள் கிடைக்கும். உடம்பு முழுவதும் மிகவும் குளிர்ச்சியாக இருப்பவர்கள் பிளாக் காபி அல்லது காபி குடிப்பதை பிரதானமாக தேர்ந்தெடுக்கலாம். ஆனால், கல்லீரல் மற்றும் சூடு பிரச்சனை இருப்பவர்கள் காபி அல்லது பிளாக் காபி குடிப்பது நல்லதல்ல. 

Add Zee News as a Preferred Source

காபி, பிளாக் காபி இரண்டிலும் சர்க்கரை மற்றும் பால் சேர்த்தாமல் குடிக்கலாம். ஏனென்றால் கலோரிகளை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு நல்ல யுக்தி. எடையை குறைக்க முயற்சிப்பவர்களும் பிளாக் காபி மற்றும் டீ குடிக்கலாம். ஆனால் கவனத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் சர்க்கரை, பால் சேர்த்தக்கூடாது. இவையிரண்டும் கூடுதல் கலோரிகளை சேர்க்கும். அதனால், பிளாக் காபி அல்லது டீ குடிப்பதால் ஆரோக்கியத்துக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள். 

பிளாக் காபி நன்மைகள்

காபியில் காஃபின் உள்ளது, இது ஆற்றலை அதிகரிக்கிறது. இந்த காபியை உட்கொள்வதால் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் எடையை கட்டுக்குள் வைத்திருக்கும். ஆக்ஸிஜனேற்ற பண்புகள் நிறைந்த கருப்பு காபி, செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கிறது. சர்க்கரை நோயாளிகள் இதனை உட்கொண்டால் பலன் கிடைக்கும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த காபியை தினமும் குடிப்பதால் சர்க்கரை நோய் கட்டுப்பட்டு இதயம் ஆரோக்கியமாக இருக்கும் என்பது பல ஆராய்ச்சிகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | Fridge இருக்கா? ஜாக்கிரதை... இதுவும் UTI-க்கு ஒரு காரணமாம்: ஆய்வில் வந்த பகீர் தகவல்

பிளாக் டீ நன்மைகள் 

பிளாக் டீ என்றால் பால் மற்றும் சர்க்கரை ஆகியவற்றுடன் சேர்த்து குறைந்த அளவு காஃபின் உள்ளது. இது ஆரோக்கியத்திற்கு நன்மையானதுதான். இதனை உட்கொள்வதால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். எடை கட்டுக்குள் இருக்கும். ஃபிரான்டியர்ஸ் இன் ஜெனெடிக்ஸ் என்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, வழக்கமான பிளாக் டீயை உட்கொள்பவர்கள் தங்கள் எடையைக் கட்டுக்குள் வைத்திருந்தனர் என கூறியுள்ளது. பிளாக் டீ குடிப்பதால் குடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இந்த டீ கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. இதனை உட்கொள்வதால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த தேநீர் கல்லீரலை சீர்படுத்தி மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. பிளாக் டீயில் பாலிஃபீனால்கள் உள்ளன, இது உடலை நச்சுத்தன்மையில் இருந்து பாதுகாக்க உதவுகிறது. பிளாக் டீ எலும்புகளை பலப்படுத்துகிறது. இதனை உட்கொள்வதால் செரிமானம் மேம்படும் மற்றும் சர்க்கரை கட்டுப்பாட்டில் இருக்கும்.

பிளாக் டீ அல்லது கருப்பு காபி எது சிறந்தது?

கருப்பு தேநீர் மற்றும் கருப்பு காபி இரண்டும் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். குளிர்காலத்தில் கருப்பு காபி சாப்பிடுவது நல்லது, அது உடலை சூடாக வைத்திருக்கும். நீங்கள் காஃபின் உட்கொள்ளலைக் கட்டுப்படுத்த விரும்பினால், நீங்கள் பிளாக் டீ உட்கொள்ளலாம். அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பிளாக் காபிக்கு பதிலாக பிளாக் டீ சாப்பிட வேண்டும். இரவில் கருப்பு டீ மற்றும் கருப்பு காபி இரண்டையும் தவிர்க்கவும். ஏனென்றால் இதை குடித்தால் இரவில் தூக்கத்தை இழக்க நேரிடும்.

மேலும் படிக்க | பப்பாளியிடம் இருந்து தள்ளியே இருங்க.... இந்த உடல்நலப் பிரச்னைகள் இருந்தால்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

About the Author

Karthikeyan Sekar

Karthikeyan Sekar

...Read More

Trending News