புகைபிடித்தல் பழக்கத்தை விட்டு விலகுவது கடினமா!
புகைபிடித்தல் பழக்கத்தை விட்டு விலகுவது கடினமா?
இல்லை, ஓட்டப்பயிற்சி செய்வதன் மூலம் இந்த ஆழ்ந்த பழக்கத்தை நீக்கி, ஆரோக்கியமாக வாழமுடியும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் படி, ’ரன்-டூ-க்ய்ட்’ என்ற களப்பணி ஒன்றை செய்தது.
10-வாரகள் தொடர்ந்து நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியின் முடிவில், பங்கேற்ற மக்களில் 50.8 சதவிகிதம் புகைபிடிப்பதை வெற்றிகரமாக நிருத்திக்கொள்ள முடிந்தது, 91 சதவீதத்தினர் புகைப்பிடிப்பதை குறைத்துள்ளனர்.
’மென்டல் ஹெல்த் அன்ட் பிஸிக்கல் ஆக்டிவிட்டி’ என்ற இதழில் இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் விரிவாக பட்டியலிடப்பட்டுள்ளன.
2016 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ’ரன்-டூ-க்ய்ட்’ நிகழ்வினில் கனடா முழுவதும் 168 புகைப்பிடிப்பவர்கள் பங்கேற்றனர். இதில் 37 பேர் புகைபிடித்தல் பழக்கத்தை விட்டு முழுமையாக விலகியது கார்பன்-மோனாக்சைடு பரிசோதனை மூலம் உறுதிசெய்யப்பட்டது. 72 பேர் நிகழ்ச்சியின் கடைசி வாரம் வரை தொடர்ந்து புகைப்பிடிப்பதை குறைத்துள்ளனர்.
புகைப்பிடித்தலை விட்டு வெளியேறுவதற்கான அறிவுறுத்தல்கள் மற்றும் ஓட்டப்பயிற்சி செய்வதற்கான உத்திகள் ஆகியவற்றைக் கொண்ட வாராந்திர அமர்வுகள், கற்றல் முறை மூலம் இந்த மாற்றம் நிகவதாக ஒருங்கினைப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாம் இயல்பாக செய்யும் ஒரு விசயத்தினைக் கொண்டு நம்மில் மாற்றம் கொண்டுவர முடியும் எனில் ஏன் அதனை விட்டுவைக்க வேண்டும்?, நம் நலனிற்காகவும் நமது குடும்ப நலனிற்காகவும் ஏன் இந்த ஓட்டப்பயிற்சி செய்யக்கூடாது?
செய்து தான் பார்போமே!!