உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து விட்டது என்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்
Warning Signs Of High Cholesterol: இன்றைய மேற்கத்திய உணவு கலாச்சாரம் காரணமாக, நம்முடைய உடலில் கொலஸ்ட்ராலை அதிகரித்து பல்வேறு விதமான நோய் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. எனவே உடலில் கொலஸ்ட்ரால் குவிவதற்கான அறிகுறிகளை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.
Common Signs Of High Cholesterol: உடலில் தேங்கியுள்ள கெட்ட கொலஸ்ட்ராலால் இதயத்திற்கு மட்டுமே ஆபத்து விளைவிக்கும் என்று நினைத்தால் அது தவறு... சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, அதிக கொலஸ்ட்ரால் காரணமாக, சில பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். அவை என்ன என்பதை இன்று நாம் தெரிந்துக்கொள்வோம்.
கொலஸ்ட்ரால் அளவு அதிகரிப்பதற்கான அறிகுறிகள்
உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் நாம் எந்த அறிகுறிகளையும் முன்கூட்டியே கண்டறிய முடியாது. இருப்பினும், அதிகரித்த கொலஸ்ட்ரால் அளவை நீண்ட காலமாக கவனிக்காமல் இருந்தால், கொழுப்பு குவிந்து இரத்தம் கால்களின் நரம்புகளை சென்றடையாது, இதன் காரணமாக புற தமனி நோய் போன்றவை ஏற்படலாம். அதேபோல் உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்தால் உங்கள் குடல்கள் பாதிக்கப்படத் தொடங்கலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? அப்போ இந்த ரொட்டி மாவு உங்களுக்கு விஷம்
வயிற்றில் அதிக கொலஸ்ட்ராலின் அறிகுறிகள்
1. அடிக்கடி வாந்தி எடுப்பது.
2. இரத்த அழுத்தம் திடீரென குறைவது.
3. WBC இல் அதிகரிப்பு.
உடலின் இந்த பகுதி முதல் அறிகுறியை காட்டும்
சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, உங்கள் தமனிகள் பிளாக் ஏற்படத் தொடங்கும் போது, உங்கள் கீழ் முதுகில் முதல் அறிகுறியை காட்டும்.
அதிக கொலஸ்ட்ராலை தவிர்ப்பது எப்படி?
உடல் பருமன் அதிகரிப்பதை நிறுத்த வேண்டுமானால், இன்றிலிருந்து ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் சாப்பிடத் தொடங்குங்கள். இது மருத்துவ மொழியில் உயர் அடர்த்தி கொழுப்புப்புரதம் அல்லது எச்.டி.எல் என்று அழைக்கப்படுகிறது. இதன் நுகர்வு மாரடைப்பு மற்றும் மூளை பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
நல்ல கொலஸ்ட்ரால் நிறைந்த டாப் 10 உணவுகள்
- சோயாபீன்
- ஓட்ஸ்
- பீன்ஸ்
- பருப்பு வகைகள் மற்றும் தானியங்கள்
- வெண்டைக்காய்
- நட்ஸ்
- ஆலிவ் எண்ணெய்
- சால்மன் மற்றும் கொழுப்பு நிறைந்த மீன்கள்
- அவகேடோ
- ரெட் ஒயின்
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை ஏற்றுக்கொள்ளும் முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ’குடிமகன்களின் கவனத்திற்கு’ புத்தாண்டு கொண்டாட்ட ஹேங் ஓவரில் இருந்து வெளிவர டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ