Weight Loss: இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பதால் பலர் பல வித சிரமங்களுக்கு ஆளாகிறார்கள். அலுவலகம் அல்லது பணியிடங்களில் மணிக்கணக்கில் அமர்ந்திருப்பதால் மக்கள் உடல் பருமன் போன்ற பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். இதனால் தொப்பை கொழுப்பு அதிகரிப்பது மட்டுமின்றி பல உடல்நல பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. உடல் பருமன் ஒரு தீவிர பிரச்சனையாக உள்ளது. இது பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும். எதிர்காலத்தில் எந்த விதமான பிரச்சனையும் வராமல் இருக்க, எடை அதிகரிப்பதை சரியான நேரத்தில் கட்டுப்படுத்துவது அவசியம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உடல் எடையை குறைக்க மக்கள் மிகவும் கடினமாக உழைக்கிறார்கள். சிலர் உணவுக் கட்டுப்பாட்டை நாடுகிறார்கள், மற்றவர்கள் ஜிம்மில் மணிக்கணக்கில் செலவிடுகிறார்கள். எனினும், சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். சில சத்தான பானங்களை காலையில் உட்கொள்வதன் மூலம் தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை குறைக்கலாம் என ஆய்வுகள் காட்டுகின்றன. அந்த பானங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 


சோம்பு தேநீர்: 


சோம்பு (Fennel Seeds) செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சிறந்தது. உடல் எடையை இழக்க நினைப்பவர்கள் தங்கள்: டயட்டில் கண்டிப்பாக இதை சேர்த்துக்கொள்ள வேண்டும். இதை காலையில் குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். 


ஓம நீர்: 


வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு ஓம நீர் (Celery Water) மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்கள் ஓம நீரை தினமும் காலையில் குடிக்கலாம். அதன் பண்புகள் காரணமாக, செலரி பல பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிக்க நீண்ட காலமாக பயன்படுத்தப்படுகிறது. இது பசியைக் கட்டுப்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும், எடையைக் குறைக்கவும் உதவுகிறது.


மேலும் படிக்க | கறிவேப்பிலையில் இருக்கு கடல் அளவு நன்மைகள்: முழு பட்டியல் இதோ


க்ரீன் டீ: 


கிரீன் டீயில் (Green Tea) கேடசின் என்ற ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும். தொப்பை கொழுப்பை குறைக்கவும் உடல் எடையை குறைக்கவும் கிரீன் டீ மிகவும் உதவியாக இருக்கும்.


பிளாக் டீ: 


பிளாக் டீயில் (Black Tea) எடையைக் குறைக்க உதவும் கலவைகள் உள்ளன. இதில் அதிக அளவு பாலிபினால்கள் உள்ளன. சக்திவாய்ந்த ஆண்டி-ஆக்சிடெண்டுகளான பிளாக் டீ  உடல் எடையை குறைக்க உதவுகிறது.


இஞ்சி எலுமிச்சை பானம்: 


உடல் எடையை குறைக்க (Weight Loss) இஞ்சி எலுமிச்சை பானத்தையும் (Lemon Water) முயற்சி செய்யலாம். எடை இழப்பு தவிர, இரைப்பை குடல் பிரச்சினைகளுக்கும் இந்த பானம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது வீக்கம் மற்றும் பிடிப்புகளை தடுக்க உதவுகிறது.


காய்கறி சாறுகள்: 


தொப்பை மற்றும் உடல் எடையை குறைக்க குறைந்த கலோரி கொண்ட காய்கறி சாறுகளை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது உடல் எடையை குறைக்க உதவும்.


ஆப்பிள் சைடர் வினிகர்: 


ஒரு ஸ்பூன் ஆப்பிள் வினிகரை (Apple Cider Vinegar) தண்ணீரில் கலந்து சாப்பிடுவதற்கு முன் குடிக்கவும். இதைச் செய்தால் உடலில் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கிறது. இது பசியையும் குறைக்கிறது. இதனால் தேவையற்ற, ஆரோக்கியமற்ற பண்டங்களை சாப்பிடுவது தவிர்க்கப்படுகின்றது.  


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Brain Health: மூளை மந்தமாக இருக்கா... ‘இந்த’ மூலிகை ஒன்றே போதும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ