கறிவேப்பிலையில் இருக்கு கடல் அளவு நன்மைகள்: முழு பட்டியல் இதோ

Health Benefits of Curry Leaves: கறிவேப்பிலையை நாம் தினமும் சமையலில் பயன்படுத்தினாலும் இதில் கொட்டிக்கிடக்கும் அசாத்திய நன்மைகள் பற்றி பலருக்கு தெரிவதில்லை.

 

கறிவேப்பிலையை எந்த உணவில் சேர்த்தாலும் அந்த உணவின் சுவையும் மணமும் மேம்படுகின்றது. கறிவேப்பிலையில் அதிகப்படியான சத்துக்கள் உள்ளன. இதில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதை நாம் தினமும் சமையலில் பயன்படுத்தினாலும் இதில் கொட்டிக்கிடக்கும் அசாத்திய நன்மைகள் பற்றி பலருக்கு தெரிவதில்லை. கறிவேப்பிலையை சாப்பிடுவதால் கிடைக்கும் பல வகை நன்மைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /8

கறிவேப்பிலையில் உள்ள கார்பசோல் ஆல்கலாய்டுகள் கொழுப்பை எரித்து உடல் பருமனை தடுக்கும் பண்புகளை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. எடை இழப்புக்கு அப்பால், கறிவேப்பிலை மேம்படுத்தப்பட்ட செரிமானம், இதய நோய் அபாயத்தைக் குறைத்தல் மற்றும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதிலும் உதவுகிறது. 

2 /8

நீங்கள் கண் பார்வைக்காக கண்ணாடி அணியும் நபராக இருந்தால், கறிவேப்பிலை உங்களுக்கு ஒரு சஞ்சீவியாக பயன் தரும். இதை தினமும் உணவில் சேர்த்துக்கொண்டால், உங்கள் கண்பார்வை மேம்படும். கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ கண்களுக்கு மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் கறிவேப்பிலையை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வது கண் பார்வை மேம்பட உதவும்.  

3 /8

கறிவேப்பிலையில் ஆண்டி-ஆக்சிடெண்ட் பண்புகள் நிறைந்துள்ளன. இது முழு உடலில் உள்ள நச்சுகளை நீக்க பயனுள்ளதாக இருக்கும். கறிவேப்பிலையை முறையாக உட்கொள்வதால், இரத்த சர்க்கரை அளவு குறைகப்பட்டு நீரிழிவு நோய் (Diabetes) கட்டுக்குள் இருக்கும். 

4 /8

மாறிவரும் பருவ நிலை காரணமாக ஏற்படும் வைரஸ் காய்ச்சலைத் தடுப்பதிலும் கறிவேப்பிலை நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதால் காய்ச்சல், சளி, இருமல் போன்ற நோய்கள் உடலில் இருந்து விலகி நிற்கும். இதில் அதிக அளவு வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது.  

5 /8

வெளி உணவுகளை அதிகமாக சாப்பிடுவது அல்லது வறுத்த உணவுகளை அதிகமாக சாப்பிடுவது அமிலத்தன்மை, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற வயிற்று பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில், சில நேரங்களில் மருந்துகளும் வேலை செய்யாது. கறிவேப்பிலையை கொதிக்க வைத்து அதன் நீரை குடித்து வந்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். கூடுதலாக, இது உங்கள் செரிமானத்தையும் பலப்படுத்துகிறது.

6 /8

கறிவேப்பிலை இயற்கையான முறையில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்இலையாகும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகின்றன. கறிவேப்பிலையின் நீரை தண்ணீரை உணவுப் பொருட்களுடன் கலந்து அல்லது கொதிக்க வைத்து குடிப்பது உடலுக்கு மிக நல்லதாக கருதப்படுகின்றது.   

7 /8

கறிவேப்பிலையில் இருக்கும் பல வித மருத்துவ குணங்கள் பிடிவாதமான தொப்பையைக் குறைக்க (Belly Fat) மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் அதிக அளவு தாமிரம், இரும்பு மற்றும் நார்ச்சத்து உள்ளது.

8 /8

பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.