Weight Loss Tips: உடல் எடையை குறைக்க வேண்டுமா? இந்த கேள்விக்கு உங்கள் பதில் 'ஆம்' எனில், உடல் செயல்பாடுகளுடன் ஆரோக்கியமான உணவும் இதற்கு மிகவும் முக்கியம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உடல் எடை அதிகரிப்பு என்பது இந்த காலத்தில் ஒரு மிகப்பெரும் பிரச்சனையாகி விட்டது. பல வித முறைகளில் மக்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால் சிலருக்கே இதில் வெற்றி கிடைக்கிறது. உடல் எடையை குறைக்க மிகவும் உதவியாக இருக்கும் ஒரு எளிய, இயற்கையான வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எடை குறைப்பு என்பது அத்தனை சுலபமான விஷயமும் இல்லை. இதற்கு பல வித முயற்சிகளை எடுக்க வேண்டியுள்ளது. உடல் எடையை குறைக்க பலர் ஜிம் சென்று உடற்பயிற்சிகளை செய்கிறார்கள். பலர் பல வித உணவு கட்டுப்பாடுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் சில எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். சில குறிப்புகளை நாம் மனதில் கொண்டால் கண்டிப்பாக உடல் எடையை குறைத்து ஃபிட்டான உடல் வாகை பெற முடியும். தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைத்து உடல் பருமனை குறைக்கும் அந்த எளிய வழிமுறைகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


முறையான உடற்பயிற்சியுடன் வேகமாக உடல் எடையை குறைக்க குறிப்பிட்ட 4 பொருட்களை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும் என சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள். அந்த உணவுகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.


வேகமாக உடல் எடையை குறைக்க உதவும் சூப்பர் உணவுகள்


தொப்பையை குறைக்க 4 உணவுகள்


தயிர்


தயிர் (Curd) உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி உடல் எடையை குறைக்கவும் பயன்படுகிறது. தயிர் சாப்பிடுவதால் பல நன்மைகள் கிடைக்கின்றன. தயிரில் புரதம், கால்சியம், தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. இது தவிர, இதில் போதுமான அளவு நல்ல பாக்டீரியாக்களும் உள்ளன. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது தவிர, இதில் உள்ள கூறுகள் நாள் முழுவதும் நம்மை சுறுசூறுப்புடன் வைக்கின்றன. 


கிரீன் டீ 


நம்மில் பலரது நாள் தேநீருடன் தொடங்குகிறது. ஆனால் தேநீர் ஆரோக்கியத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கும். நீங்களும் பால் மற்றும் சர்க்கரையுடன் டீ குடிப்பவராக இருந்தால், அதை தொடர வேண்டுமா என்பது பற்றி கண்டிப்பாக யோசிக்க வேண்டும். ஏனெனில் பால், சர்க்கரை மற்றும் தேநீரின் கலவை பல கேடுகளை உண்டுபண்ணும். அதற்கு பதிலாக, கிரீன் டீ (Green Tea) குடித்து நாளை ஆரம்பிக்கலாம். கிரீன் டீயில் காஃபின் மற்றும் கேட்டசின்கள் போன்ற ஃபிளாவனாய்டுகள் உள்ளன. இந்த இரண்டு சேர்மங்களும் உடல் கொழுப்பைக் குறைக்க உதவுகின்றன.


மேலும் படிக்க | Brain Health: மூளை மந்தமாக இருக்கா... ‘இந்த’ மூலிகை ஒன்றே போதும்!


பச்சை காய்கறிகள் 


உணவில் பச்சை காய்கறிகள் (Vegetables) மற்றும் வெந்தய கீரை, பாலக் கீரை போன்ற கீரை வகைகளை கண்டிப்பாக சேர்க்க வேண்டும். ப்ரோக்கோலி போன்ற பச்சை காய்கறிகளில் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளன. இது தவிர, இதில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் குறைவாகவும் உள்ளது. நார்ச்சத்து வயிற்றை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்கும். எது எடை குறைக்கவும், தொப்பை கொழுப்பை கரைக்கவும் உதவுகிறது. 


தானியங்கள்


நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு பலவகையான தானியங்களை (Grains) உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். உங்கள் உணவில் கோதுமை, சோளம், பழுப்பு அரிசி, கினோவா அல்லது நார்ச்சத்து நிறைந்த தானியங்களைச் சேர்க்கவும். இந்த தானியங்கள் வயிற்றை நிரம்பிய உணர்வுடன் இருக்க வைக்கின்றன. மேலும் தானியங்கள் கொழுப்பைக் குறைக்கவும் உதவுகின்றன.


மேலும் படிக்க | இரத்தத்தை இயற்கையாக சுத்தம் செய்யும் ‘சூப்பர்’ உணவுகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ