தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும் வேர் காய்கள்: உடனடி பலன் கிடைக்கும்

Weight Loss Tips: உடல் எடையை குறைப்பது எப்படி? தொப்பையை குறைப்பது எப்படி? இப்படிப்பட்ட கேள்விகள் உங்களுக்கும் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 30, 2023, 04:13 PM IST
  • ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற பலர் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள்.
  • பல இயற்கையான எளிய பழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம்.
  • அத்தகைய ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம்.
தொப்பை கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைக்கும் வேர் காய்கள்: உடனடி பலன் கிடைக்கும் title=

Weight Loss Tips: உடல் பருமன், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் பிற வாழ்க்கை முறைக் கோளாறுகளைத் தவிர்க்க ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் அவசியம். நமது உடலுக்கு அனைத்து சத்துகளும் கண்டிப்பாக சரியான அளவில் தேவை. அதேபோல், குறைந்த அளவு கலோரி உட்கொள்ளலும் உடலுக்கு அவசியம். நாம் நாள் முழுவதும் கலோரி நிறைந்த உணவுகளை உட்கொண்டால், உடல் தேவைக்கு அதிகமான கலோரிகளை சேமித்து வைக்கிறது. மேலும் நாள் முழுவதும் எவ்வளவு கலோரிகளை நாம் எடுத்துக்கொள்கிறோமோ அவ்வளவு கலோரிகளை நாம் எரிக்க வேண்டும். ஆனால் இதைச் செய்யாவிட்டால், கூடுதல் கலோரிகள் உடலில் கொழுப்பு வடிவில் சேமிக்கப்படும். இதன் காரணமாக உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகின்றது. அதே போல் உடல் பருமன் பல்வேறு வாழ்க்கை முறை கோளாறுகளை ஏற்படுத்துகிறது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு மாற பலர் சரியான உணவு மற்றும் உடற்பயிற்சிகளில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். உடல் பருமனால் சிரமப்படும் பலர் தொப்பை மற்றும் இடுப்பில் உள்ள கொழுப்பைக் குறைக்க வழிகளைத் தேடுகிறார்கள். தொப்பையை குறைக்க (Belly Fat) விரும்பினாலும், உடல் பருமனை குறைக்க விரும்பினாலும், இவை அனைத்திற்கு உணவுமுறை மிகவும் முக்கியமானது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பல இயற்கையான எளிய பழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அத்தகைய ஒரு எளிய வழியை பற்றி இந்த பதிவில் காணலாம். 

உடல் எடையை (Weight Loss) குறைப்பது எப்படி? தொப்பையை குறைப்பது எப்படி? இப்படிப்பட்ட கேள்விகள் உங்களுக்கும் இருந்தால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். உடல் எடையை குறைப்பதில் ​​வேர் காய்கறிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விரைவாக உடல் எடையை குறைக்க உதவும் சில காய்கறிகளை பற்றி இங்கே காணலாம். 

வேகமாக எடை குறைக்கும் காய்கறிகள்

1. சர்க்கரைவள்ளிக்கிழங்கு

சர்க்கரைவள்ளிக்கிழங்கு (Sweet Potato) ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு வேர் காய்கறி ஆகும். நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த, இனிப்பு உருளைக்கிழங்கு இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் இது நீண்ட நேரத்திற்கு வயிற்றுக்கு நிரம்பிய உணர்வை அளிக்கின்றது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த வழியாக இருக்கும்.

2. பீட்ரூட்

இது நச்சுத்தன்மையை நீக்க உதவும் ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகும். நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்த பீட்ரூட் (Beetroot) கல்லீரலில் உள்ள நச்சுகளை இயற்கையான முறையில் நீக்குகிறது. பீட்ரூட் உங்கள் எடை இழப்பை திறம்பட துரிதப்படுத்தும்.

மேலும் படிக்க | மருந்தே இல்லாமல் ஈறுகளில் இரத்தப்போக்கை குணப்படுத்தலாம்! ஈறுகளை பலப்படுத்த சுலப வழிகள்

3. முள்ளங்கி

முள்ளங்கியில் (Radish) அதிக நீர் உள்ளது. இது உங்களை நீரேற்றமாக வைத்திருக்கும். முள்ளங்கியில் ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும் கலவைகள் உள்ளன. இது உங்கள் உடல் கலோரிகளை விரைவாக எரிக்க உதவுகிறது.

4. கேரட்

கேரட்டில் (Carrot) வைட்டமின்கள் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளன. கேரட்டை உட்கொள்வது ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதைத் தடுக்கிறது. மேலும் இது உடலின் தினசரி நார்ச்சத்து உட்கொள்ளலை அதிகரிக்க உதவுகிறது. இதன் மூலம் வயிற்றில் முழுமையான உணர்வை ஊக்குவிக்கிறது.

5. நூல்கோல்

கலோரிகள் குறைவாக இருப்பதுடன், நூல்கோலில் (Turnip) நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும் இது பசியைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. அதனால் ஆரோக்கியமற்ற, தேவையற்ற உணவுகளை உண்பது வெகுவாக தவிர்க்கப்படுகின்றது. 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வைட்டமின் பி12 குறைபாடா? இந்த உணவுகளை சாப்பிட்டால் சரி செய்யலாம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News