உடல் எடை அதிகரிப்பு என்பது அனைவருக்கும் பெரும் பிரச்னையாக இருக்கிறது. எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி, நடை பயிற்சி என பல்வேறு முயற்சிகளை பலர் செய்வார்கள். அதேசமயம் எளிமையான வீட்டு வைத்தியம் மூலமாகவும் உடல் எடையை குறைக்கலாம். அதன் விவரம் பின்வருமாறு:


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இஞ்சி:


இஞ்சியானது செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது. இதனால் பசி உணர்வு கட்டுப்பட்டு உடல் எடையை குறைக்க பயன்படுகிறது.


சீரகம்:


இந்திய உணவுகளில் சீரகத்திற்கு எப்போதும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது செரிமானத்திற்கு மிகவும் உதவுவதால் வயிறு உப்புசம், வாயு தொல்லை போன்றவைகளை நீக்குகிறது. தண்ணீரில் சீரகத்தை ஊறவைத்து தினமும் காலையில் குடித்தால் உடல் எடை குறையும்.



மிளகு:


காரத்தன்மை உள்ள மிளகை சாப்பிட்டால் நமது உடலில் புதிய கொழுப்பு செல்களின் உருவாக்கம் தடுக்கப்படும். இதனால் உடலின் கொலஸ்ட்ரால் அளவு கட்டுப்பட்டு உடல் எடையும் குறைகிறது.


லவங்கப் பட்டை:


பிரியாணி போன்ற உணவுகளில் வாசனைக்காக லவங்கப்பட்டை சேர்க்கப்படுவதாக பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் இதிலும் மருத்துவ குணம் இருக்கிறது. லவங்கப் பட்டையை தேநீரிலோ, வெதுவெதுப்பான தண்ணீரிலோ கலந்து குடித்தால் பசி உணர்வை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும். 


மேலும் படிக்க | சர்க்கரை நோயை குணப்படுத்த அதிகாலையில் இந்த இலையை சாப்பிடுங்க


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR