உடல் ஆரோக்கியம் என்றால், அதில் பல் ஆரோக்கியம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், கால் வலி, எலும்புப் பிரச்சனை, மூட்டுவலி, ஊட்டச்சத்து தொடர்பாக அனைவரும் அதிகம் பேசினாலும், பல்லு போனா சொல்லு போச்சு என்ற பழமொழிக்கான அர்த்தமும் அனைவருக்கும் தெரியும். பல்லில் பிரச்சனையோ வலியோ வந்தா, அது நமது உணவு உண்பதையும் பாதிக்கும். பல் வலியை யாராலும் சுலபமாக கடந்துவிட முடியாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பல் ஆரோக்கியம் தொடர்பாக பொதுவாக அனைவருக்கும் பல விஷயங்கள் தெரிவதில்லை. பல் மருத்துவரிடம் செல்லும்போது, அனைவரும் கேட்கும் கேள்விகளில் சில பொதுவானவை. இந்த கேள்விகளுக்கான பதில் உங்களுக்கும் ஒரு தெளிவைக் கொடுக்கலாம். 


பல் தொடர்பாக பொதுவாக எழும் சந்தேகம் (more frequently asked questions about teeth)


ஈறுகளில் ரத்தக் கசிவு (Bleeding Gum)
பற்களின் ஈறுகளில் இரத்தம் வரவது ஏன்? என்ற கேள்வியை பலரும் பலரிடம் கேட்கின்றனர். இதற்கு காரணம், ஈறுகளில் எரிச்சல் மற்றும் வீக்கம் ஏற்படும் போது ஈறுகளில் இரத்தம் கசிகிறது. இதைத் தவிர, பற்களின் ஈறுகளில் ரத்தம் கசிய வேறு காரணங்களும் இருக்கலாம். 


மேலும் படிக்க | ரொம்ப மஞ்ச மஞ்சளா பல்லு இருக்கா.. 7 நாட்கள் இந்த வீட்டு வைத்தியம் செஞ்சி பாருங்க


பற்களை தேவைக்கு அதிகமாக அழுத்தி துலக்குதல்
கடினமான முட்கள் கொண்ட டூத் பிரஷ்ஷைப் பயன்படுத்துதல்.
செயற்கைப் பல் வைத்தவர்களின் பற்கள் சரியாக பொருந்தாமல் இருப்பது
பல் அல்லது ஈறுகளில் பாக்டீரியா தொற்று.
பரம்பரை காரணம்
இரத்தத்தை மெலிக்கும் மருந்துகளின் பயன்பாடு
புகைபிடிப்பவர்களுக்கு ஈறுகளில் எரிச்சல் மற்றும் இரத்தப்போக்கு ஏற்பட காரணமாகிறது


ஈறுகளில் இரத்தப்போக்கு ஏற்பட்டால் அதை அலட்சியம் செய்ய வேண்டாம். ஈறுகளில் இரத்தக் கசிவு ஏற்பட்டால் அதற்கு உடனே சிகிச்சை எடுத்துக் கொள்ளவும்.


வாயில் வறட்சி அடிக்கடி ஏற்பட காரணம் என்ன?
நமது வாய் போதுமான உமிழ்நீரை உற்பத்தி செய்யாதபோது, வறட்சி ஏற்படுகிறது. வாயில் சுரக்கும் உமிழ்நீர் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது நமது வாயை ஈறு நோய் மற்றும் பல் சிதைவிலிருந்து பாதுகாக்கிறது. மருந்து, நீரிழப்பு, வயது முதிர்வு, வாய் வழியாக சுவாசிப்பது என பல காரணங்கள் இருக்கும். எனவே, வாயில் வறட்சி ஏற்படாமல் இருக்க போதுமான அளவு நீர் பருக வேண்டும்.


மேலும் படிக்க | உடனடி சரும பொலிவு வேண்டுமா? கற்றாழையுடன் இதை கலந்து முகத்தில் போடுங்க


ஆரோக்கியமாக வாயைப் பேணுவது எப்படி?


ஆரோக்கியமான டயட் மற்றும் சுத்தமாக பராமரிப்பதால், வாயில் பாக்டீரியாக்கள் உருவாகாமல் தடுக்கலாம். தினமும் இரண்டு வேளை பல் தேய்ப்பது அவசியம். வாய்வழி சுகாதாரத்தை பராமரிப்பதும், மவுத்வாஷ் பயன்படுத்துவதும் நல்லது. மது மற்றும் புகைபிடிப்பதைத் தவிர்க்கவும்,


பற்கள் வெண்மையாக இருக்க வேண்டுமா?
தொழில்முறை பற்களை வெண்மையாக்குவது (whitening teeth) என்பது, ஹைட்ரஜன் பெராக்சைடு அல்லது கார்பமைடு பெராக்சைடு ஆகிய இரண்டு ப்ளீச்களை பயன்படுத்தும் முறை ஆகும். ஃப்ளூரைடு (fluoride treatment) சிகிச்சையை பல் மருத்துவர்கள்  அறிவுறுத்துகிறார்கள். ஏனென்றால் இது  பற்களை வலுவாக்க உதவுகிறது மற்றும் சிதைவைத் தடுக்கிறது. பற்களை சுத்தமாக வைத்திருப்பதற்கான எளிதான மற்றும் செலவு குறைந்த வழிகளில் ஒன்றாகும்.


பல் கூச்சத்தைத் தடுக்க என்ன செய்யலாம்?


உணர்திறன் வாய்ந்த பற்களுக்காக (sensitive teeth) வடிவமைக்கப்பட்ட பற்பசையைப் பயன்படுத்த முயற்சி செய்யலாம். படுக்கைக்குச் செல்லும் போது, உணர்திறன் உள்ள பகுதியில் பற்பசையை பயன்படுத்தி பல் துலக்கவும். அதோடு, உணர்திறன் பற்கள் இருந்தால், அமில உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்கவும்.


(பொறுப்பு துறப்பு: வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் அடிப்படையில், விழிப்புணர்வுக்காக எழுதப்பட்ட கட்டுரை இது. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | இத்துணூண்டு புளிக்குள்ள இத்தனை மாயமா? ஆரோக்கியத்தை அள்ளித் தரும் புளியம்பழம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ