TN Government Warning On Liquid Nitrogen: தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உணவுப் பழக்கம் என்பது பல வகைகளில் மாற்றமடைந்துள்ளது. மக்கள் தங்கள் பகுதியில் உள்ள தட்பவெட்ப சூழலுக்கும், தங்கள் மண்ணில் விளைந்த உணவுப் பொருள்களை காட்டிலும் சுவை மிகுந்த துரித உணவுகளை நோக்கியே அதிகம் ஈர்க்கப்படுகின்றனர். அதற்காக பாரம்பரியமாக சாப்பிடும் அனைத்து பொருள்களும் நமது உடலுக்கு நல்லது என இங்கு குறிப்பிட விரும்பவில்லை. ஏனென்றால், அப்பளம், ஊறுகாய் போன்றவை கூட பலருக்கு உடல்நலக் கேடு உருவாக்கும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதே நேரத்தில், அதிக எண்ணெயில் வறுக்கப்பட்ட உணவுகள், பார்வை அழகுக்காக சேர்க்கப்படும் கலர் பவுடர்கள், சுவையை அதிகப்படுத்தும் சூவையூட்டிகள் என உணவு பொருள்கள் முழுவதும் ரசாயனம் கலந்திருப்பதை நாம் மறுக்க முடியாது. அதேபோல் சாலையோர கடைகளில்தான் இவை அதிகம் இருக்கும், நல்ல விசாலமான ஹோட்டல்களில் இவை இருக்கவே இருக்காது என்று கூறுவதும் ஏற்புடையது அல்ல. அந்த வகையில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்ந்து இதுபோன்று உணவகங்களிலும், உணவு பொருள்கள் தயாரிக்கும் இடங்களிலும் ஆய்வு நடத்தி வழமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். 


மருத்துவ ரீதியான முன்னேற்பாடுகள், உள்கட்டமைப்புகளை பலப்படுத்துதல் ஒருபுறம் இருந்தாலும் இதுபோன்று ஆரம்பக் கட்டத்திலேயே உணவு பாதுகாப்பை உறுதி செய்வதும் அரசின் முக்கிய கடமைகளில் ஒன்றாகும். சமீப காலங்களில் சவர்மா தொடர்ந்து செய்திகளில் அடிப்பட்டு வந்தது. அதாவது, சவர்மாவை சாப்பிட்டு பல பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது, சில இடங்களில் உயிரிழப்பும் கூட பதிவானது. இத்தகைய சம்பவங்களுக்கு பின்னர் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால் உயிரிழப்புகள் நடந்திருக்காது என்பதும் மறுக்க முடியாதது. 


மேலும் படிக்க | Uric Acid Level: யூரிக் அமிலத்தை ஒழித்துக் கட்டும் ‘சூப்பர்’ டிரிங்க்ஸ்!


சமீபத்தில், சமீபத்தில், பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தநாள் கொண்டாடிய 10 வயது சிறுமி, கேக் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அந்த கேக் சாப்பிட்ட குடும்பத்தினர் அனைவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டதும் பல கேள்விகளை எழுப்பியது. தொடர்ந்து அதுகுறித்து கேள்வி எழுந்த நிலையில், சாக்கரைன் எனப்படும் ரசாயனம் கேக்கில் அதிகளவு இருந்துள்ளது. இது கேக்கில் சுவையை கூட்ட பயன்படுத்தப்படுகிறது. இந்த ரசாயனமே அந்த சிறுமியின் உயிரை பறித்துள்ளது.


அந்த வகையில், இத்தகைய துர்சம்பவங்கள் நடந்த பின்னர்தான் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றில்லை. முன்னெசரிக்கையாக சில நடவடிக்கைகளை எடுப்பதும் துர்சம்பவங்களை தடுக்கும் எனலாம். இந்நிலையில், தமிழ்நாட்டின் பல பகுதிகளில் விற்கப்படும் திரவ நைட்ரஜன் உணவுகள் குறித்து அரசு தற்போது முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.  


இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,"உணவு பாதுகாப்பு மற்றும்‌ தர நிர்ணய சட்டம்‌ 2006 மற்றும்‌ ஒழுங்குமுறைகள்‌ 2011இன்படி திரவ நைட்ரஜன்‌ ஒரு செயலாக்க உதவியாக உறைதல்‌ தன்மையுள்ள பொருட்களான பால்‌ சார்ந்த இனிப்பு வகைகள்‌ மற்றும்‌ ஐஸ்கிரீம்‌ போன்ற உணவு பொருட்களில்‌ உறைதல்‌ பணியினை மேற்கொள்ள மட்டுமே உதவுகிறது.


மேலும்‌, திரவ நைட்ரஜன்‌ உணவு பாதுகாப்பு மற்றும்‌ தரநிலைகள்‌ (உணவு பொருட்கள்‌ தரம்‌ மற்றும்‌ உணவு சேர்க்கைகள்‌) ஒழுங்குமுறை, 2011இன்‌படி Packing Gas மற்ரும் Freezant ஆக மட்டுமே பயன்படுத்த
முடியும்‌. எனவே உணவு பாதுகாப்பு மற்றும்‌ தரநிர்ணய சட்டம்‌ 2006, பிரிவு 38(10)இன்படி உணவு பாதுகாப்பு துறையை சேர்ந்த நியமன அலுவலர்கள்‌ மற்றும்‌ உணவு பாதுகாப்பு அதிகாரிகள்‌ பிஸ்கட்‌, ஐஸ்கிரீம்‌, வேபர்‌ பிஸ்கட்‌ போன்ற உணவு பொருட்களுடன்‌ திரவ நைட்ரஜனை நேரடியாக கலந்து விற்பனை செய்யும்‌ உணவு வணிகர்கள்‌ மீது உணவு பாதுகாப்பு மற்றும்‌ தர நிர்ணய சட்டம்‌, 2006இன்படி உரிய சட்ட நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது. 


மேலும் படிக்க | குழந்தைகளின் மூளையை கூர்மையாக்க இந்த உணவுகளை சாப்படுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ